சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டு&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

நமது உடலில் நடக்கும் பல்வேறுவிதமான வேதியல் மாற்றப் பணிகள் மற்றும் உடல் இயங்கத் தேவையான சக்திக்கு சரிவிகித உணவுகள்தான் ஆரோக்கியமானவை. எனவே, மூன்று வேளைக்கும் சிறுதானிய உணவு என மாறுவதும் நல்லது அல்ல.

தினமும் மூன்று வேளை வீதம் ஒரு வாரத்துக்கு 21 முறை நாம் சாப்பிடுகிறோம். இந்த 21 வேளைகளில் 12 வேளைகள் சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது சிறந்தது.

ஒரு நாள் காலை அல்லது மாலை வேளையில் சிறுதானியத்தில் டிபன்செய்து சாப்பிடலாம்; மற்றொரு நாள் மதிய உணவில் அரிசிக்குப் பதிலாக குதிரைவாலி அரிசியைப் பயன்படுத்தலாம்; இன்னொரு நாள் சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், சாலட் சாப்பிடலாம்.

சிறுதானிய உணவுகளைப் பொறுத்தமட்டில், அவற்றைச் சமைத்தவுடன் சூடாகச் சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும். எனவே, எப்போதும் புதிதாக சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.

சிறுதானியங்களை ஒரே மாதிரியான வடிவத்தில் சாப்பிட்டால் போரடித்துவிடும். அரிசி, கோதுமை போன்றவைக்கு இல்லாத சிறப்பு, சிறுதானியத்துக்கு உண்டு. ஏனெனில், சிறுதானியத்தில் இனிப்பு, பாயசம், கார வகைகள் என பல வகை ரெசிப்பிகளைச் செய்ய முடியும்.

ஏதாவதொரு சிறுதானியத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது அல்ல. அதேபோல எல்லா சிறுதானியங்களையும் சேர்த்து அரைத்துப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

சீரான இடைவெளிகளில் ஏழுவிதமான சிறுதானியங்களையும் பயன்படுத்த வேண்டும். ஒருநாள் வரகுப் பொங்கல் சாப்பிட்டால், இன்னொரு நாள் சாமைப் பொங்கல்வைத்துச் சாப்பிடலாம்; சிறுதானிய பிரியாணி செய்து சாப்பிடலாம்




 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.