சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
சிறுதானிய கார அடை

தேவையானவை:
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு: கால் கிலோ, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி :கால் கிலோ,

முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை :4 டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை,

உப்பு, நல்லெண்ணெய் :தேவையான அளவு.


செய்முறை:
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் சுட்டு எடுக்கவும்.​

பலன்கள்:

குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.