சிறுநீர் வந்தா அடக்காதீங்க - Bladder control problems

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
[h=1]சிறுநீர் வந்தா அடக்காதீங்க[/h]
ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லை …’, ‘நேரமே இல்லை…’, ‘பாத்ரூமே இல்லை… ரோட்டுலயா போக முடியும்?’ என்பதுபோன்ற கேள்வி களைத் தங்கள் தரப்பு நியாயங்க ளாக எழுப்பி, தங்களை சமாதான ப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறு வதில்லை. இவர்களில் நீங் களும் ஒருவரா? “இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களைஇழுத்துச் சென்றுவிடும்” என்று உங்க ளை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கி றார்.

சென்னை, ராமச்சந்திரா மருத்துவ மனையின் சிறுநீரகத்துறை தலை மை மருத்துவப்பேராசிரியர் Dr. பி.சௌந்தர ராஜன். ”சிறுநீரக நோய்த்தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களு க்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அட க்கிக்கொள்ளும் பழக்கம்தான்!” என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்சனை ஏற்படுவதற்கான காரண ங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படு பவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார்.

ஆரோக்கியத்தின் முதல் படி… சீரான சிறுநீர் வெளி யேற்றம்!

”உடல் ஆரோக்கியத்துக்கான முக்கி யமான இயக்கங் களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்பு க்குத் தேவையான நீர் எடுத்துக்கொ ள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுட ன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறு நீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறு நீர் கழிப்பதற் கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவை க்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கி யத்தின் முதல் படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப்பையின் கொள் ளளவையும் மீறிய சுமையை அது தாங் க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். என வே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டி யது அவசியம்.

எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்?

கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீ ரும், மற்ற பருவநி லைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீ ரும் போதுமானது. குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்ற வ ற்றில் இருந்தும் உடலுக்குத்தேவையான நீர்கிடைத்து விடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ. சி.வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண் டும். தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடு தலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண் ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்ட ம்போல குடிப்பதுநல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத் துக்கு கூடுதல் பளு தருவதா கத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப் பாக தண்ணீர்குடிக்கக்கூடாது. இதன் காரணமாக இ தயமானது ரத்தத்தை சரிவர ‘பம்ப்’ செய்ய முடியாமல் போ கும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்க ப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளி களும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர் கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்ப தால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம்.

சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!

தேவையான அளவு தண்ணீர் குடிக் காமல் இருப்பது, சிறுநீரை அடக்கு வது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமி ன்மை, தாம்பத்யம் … என்று பல காரணங்களால் சிறு நீர்த் தொற்று ஏற் படக்கூடும். சாதாரணமாக ‘யூரினரி இன்ஃபெக்*ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கட ப்பதுதான் வழக் கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்ச னைகளின் பட்டியல் நீளம். நீர்க்கடு ப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெ ளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளி யேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியா த வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமி கள் உற்பத்தி யாவது வரை கலங்கவைக்கும். கர்ப்பிணிப் பெண்கள், நீரி ழிவு நோயாளிகள், முதியவ ர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்பகாலத்தில்தாய் சிறுநீரகப் பிரச்சனை யால் பாதிக்கப்பட்டால், குழந் தைக்கும் அந்த பாதிப்பு ஏற்பட லாம்…

ஜாக்கிரதை!

சிறுவர்க ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்ப தால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரிய ளவில் பாதிப்பை ஏற்படுத்துவ தில்லை. ஆனால், 5 – 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக் கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வே ண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற் று அறுவைசிகிச்சை மேற்கொண்டவ ர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும். யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்க ளான இறைச்சி, பீர், வொயின் போன்ற வற்றை அதிகளவில் எடுத்துக் கொள் ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும்.

சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க!

சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறு நீரை அடக்கக் கூடாது. நன்றாகக் கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தை களுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகா தாரமாக பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்குப்பிறகு, பிறப்புறுப் பை நன்கு சுத்தம் செய்ய வேண்டு ம். சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும். தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரை க்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல் லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிர ச்சனைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது”என்று விளக்க ங்களைத் தந்த டாக்டர், ”சிறுநீரகங் கள் தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றா லோ, பழுதானா லோ, வீடே என்ன கதிக்கு ஆளாகிற து? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!” என்று கேட்டார். ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்காமல், இனி ‘நம்பர் ஒன்’ பிரச்னை க்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்!

தினமும் எவ்வளவு தண்ணீர்?

கோடை காலத்தில் 3 லிட்டர். மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர். ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1 2 லிட்டர்(தாகம் எடுக்காவிட்டாலும்)
எவ்வளவு சிறுநீர்?

ஆரோக்கியமான மனிதன் 4 6 மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்து க்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக் வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர், மழைக்கா லங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாக னங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத் து க்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப் புள்ளது. சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பா ர்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்*ஷன், எரிச்சல்ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளி யேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவ து, அளவுக்கு அதி கமாக சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தை க்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியே றினாலே போதுமானது.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.