சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
#1
1524314314298.png

|
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, பல்வேறு வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போக்சோ சட்டத்தைத் திருத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனை கடுமையாக மத்திய அரசு முடிவு செய்தது.

குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்தல், ஜாமீன் வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் வரையறுக்கவே குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எனப்படும் போக்சோ கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது சில ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பது போன்ற அம்சங்கள் தான் இதுவரை இருந்தது.
எனவே, சட்ட திருத்தம் மேற்கொண்டு 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வகை செய்யப்பட உள்ளது.

ஆனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் சிறார் குற்றவாளியாக இருந்தால் அவர்களுக்கு இந்த சட்டத் திருத்தத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுமா என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை.

ஏற்கனவே நிர்பயா வழக்கில் மிக மோசமான குற்றம் இழைத்த முக்கியக் குற்றவாளி சிறார் என்று கூறி அவருக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டதும், கதுவா சம்பவத்தில் மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் சிறார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விளக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#2
சிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்?


1524413407298.png

நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை நேற்று முடிவெடுத்தது.

இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்த நிலையில், அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிரந்தரமான சட்டமாக்கப்படும்.

இந்நிலையில், இந்த அவசர சட்ட திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டால் அந்த வழக்குகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படாது.

16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கின் தண்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
#3
சிறுமிகளைப்போல் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கும் நிவாரணம் - மேனகா காந்தி

சிறார் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை தடுக்கும் குழந்தைகள் பாலியல் வன்முறை சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கப்படுகிறது. பலவேளைகளில் சிறுவர்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் நிவாரணம் அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலரும் திரைப்பட தயாரிப்பாளருமான இன்சியா தாரிவாலா தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தார்.

இதன் அடிப்படையில் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கடந்த ஆண்டு அறிவுறுத்தி இருந்தார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய முதல்கட்ட ஆய்வில் நாடு முழுவதும் சுமார் 160 சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மேனகா காந்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகளைப்போல் சிறுவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் வன்முறை என்பது சிறுவர், சிறுமியர் இருவருக்குமே பொதுவானது. கூச்சம் மற்றும் அவமானம் காரணமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்களில் பெரும்பாலானோர் இதுதொடர்பாக வெளியே தெரிவிக்காமல் மறைத்து விடுகின்றனர். இது மிகவும் முக்கியமான பிரச்சனை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த கருத்தரங்கின் மூலம் கிடைத்த பரிந்துரைகளின்படி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் சிறுமிகளுக்கு கிடைக்கும் நிவாரணம், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
#4
டெல்லியில் தினமும் இரு சிறார்கள் பாலியல் வன்முறைக்கு இரை - மறுவாழ்வுக்கு ஆலோசனை

தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை அவரது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள். அதைத்தொடர்ந்து 10 வயது சிறுமி, மதரஸாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 10 வயது சிறுமியின் தந்தை கூறுகையில், ‘சம்பவம் நடந்து 1 மாதம் ஆகியும், இன்னும் அவள் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுகிறாள். அவளுக்கு மருத்துவர்கள் மூலம் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆனால், அவளால் அந்த சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீசாரின் அறிக்கையின் படி, கடந்த 4 மாதங்களுக்குள் தினசரி 2 சிறார்கள் பாலியல் இச்சைக்கு இரையாக்கப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் கூறுகையில், ‘பெற்றோர்களுக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள்வது குறித்து தெரியவில்லை, அவர்கள் குழந்தைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள், இதன்மூலம் சிறுகுழந்தைகள் குழப்பம் அடைகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ‘காவல்துறையினரும் அவர்களது வேலைப்பளு காரணமாக இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை, பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வுக்கான கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் குழந்தைகள் உரிமை தொடர்பான ஆர்வலருமான அனந்த் குமார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட வேண்டும், ஆலோசகர் அமைக்கப்பட வேண்டும் ஆனால் ஒரு சில வழக்குகளில் வெறும் ஆலோசகர் மட்டுமே அந்த குழந்தைக்கு போதுமானதாக இருக்காது’ என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் தேவைக்கேற்ப உதவும் வகையில் மறுவாழ்வுக்கான ஆலோசனை சட்டம் அல்லது திட்டம் அமைய வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம், தினந்தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளின் வாழ்வை சீரமைக்க மறுவாழ்வு கொள்கை அமைக்கப்பட வேண்டும் என்ற குரல் எழும்பியுள்ளது.

12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.