சிறுவர்களுக்கு இன்டர்நெட் மன நோய்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
தொடர்ந்து டிஜிட்டல் சாதனங்களை, குறிப்பாக இன்டர்நெட், பயன்படுத்தும் சிறுவர்கள், ஒருவகை "இன்டர்நெட் மன நோய்க்கு' ஆளாவதாக, ஆஸ்திரேலிய உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது புதியதாகக் கண்டறியப்பட்ட மிகத் தீவிரமான மன நோய் என இவர்கள் அதனைக் குறிப்பிடுகின்றனர். சிகரெட், மது, போதை மருந்து ஆகியவற்றால் பாதிக்கப்படுவதனால் உண்டாகும் மன நோய்க்கு இதனை ஒப்பிடுகின்றனர். மனக்கிளர்ச்சியினால் மனநிலை முடக்கம், கவனச் சிதறல், வழக்கமான ஒன்று கிடைக்காததனால் ஏற்படும் பதற்றம், சீற்றம் ஆகியவை வீடியோ கேம்ஸ் மற்றும் தொடர்ந்த இன்டர்நெட் பழக்கத்தினால் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
குழந்தைகளைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் கேம்ஸ் விளையாடுவதில் தீவிரம் காட்டுவது இன்றைய நடைமுறையாகிவிட்டது. இதனால், இவர்களின் உணவுப் பழக்க மாற்றத்தில் தொடங்கி, மனநிலை பாதிப்பு வரை ஏற்படுகிறது. இதனுடன் இன்டர்நெட் போன்ற தொழில் நுட்ப ரீதியான பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பும் இணைந்து கொள்கிறது.
ஆஸ்திரேலிய உளவியல் வல்லுநர்கள் இதற்கான தீர்வு எதனையும் தரவில்லை. அதற்கு முதல் படியாக, இந்த மனநிலை குறித்து இன்னும் ஆய்வு நடத்தி அதன் பல்வேறு தீயவிளைவுகளை அறிய வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#3
Its very true guna, I have seen with the kids. when they are exposed to video games and internet games, smartphone games. It will change their attitude after the game is done. They are restless, aggressive, attention deficits.
We cannot restrict them from playing the games as that will create the peer pressure at school, but we can restrict them from how long they are playing.
Even the cartoons, Movies really makes a great impact on kids. It really twist their mind. Nothing Good is shown in TV and movies. Parents are very tired to look after their kids after their long day. Until we take effort and bring some discipline regarding this, it will really get worse.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
அன்புள்ள குணா அவர்களுக்கு முதற்கண் எங்களுடைய மனமாந்த நன்றிகளை சமர்பிக்கிறோம். இன்றைய சிறுவர்கள் நாளைய இந்நாட்டு தலைவர்கள் என்பதை மனதில் இருத்தி அவர்கள் இந்த internet மயக்கத்தில் உள்ள நிலையை மாற்றிக்கொண்டு நிகழ்கால வாழ்க்கையில் முன்னேற வழிவகைகளை பார்க்க தங்கள் அன்றாட பாடங்களை கண்ணும் கருத்துமாக படித்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று பொறுப்பான மாணவர்களாக இந்த சமுதாயத்திற்கு அறிய தொண்டாற்ற வேண்டும் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இதற்கு முடிவு தான் தெரியவில்லை. இந்த இளன்சிரார்கள் எப்படித்தான் வருங்காலத்தில் இந்த நாட்டை காப்பாற்ற போகிறார்களோ கடவுளுக்கே வெளிச்சம். மிகுந்த சோகத்துடன் உங்களின் ஆதங்கத்தில் பங்கு கொள்கிறோம்
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#5
Its parents duty to bring up a social responsible kid.. For that the parents also have to have social responsibilty and to preach good manners respect for elders, and own up to their acts, everything to the kids.. If a kid is not behaving good, its not anybody's fault but parents...
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#7
பகிர்வுக்கு நன்றி சார்... கண்டிப்பா குழந்தைகளை இதில் இருந்து மீட்டாக வேண்டும்...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.