சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு வசதியாக உள்ள திறமையான, புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஆன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஆடியோவுடன் படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள புத்தகங்களை ஆடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும் அந்த வகையில் அறிவுள்ள புத்தகங்களை ஆன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://meegenius.com


இத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளின் அறிவுப்பசிக்கு சரியான விருந்து அளிக்கும் வகையில் பல வகையான அறிவை வளர்க்கும் இலவச புத்தகங்கள் ( Free books ) கிடைக்கிறது , இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டுமோ அந்த புத்தகத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்துடனும் ஆடியோவுடனும் சொல்கின்றனர், காதால் கேட்டுக்கொண்டே படிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம், எளிமையான ஆங்கில வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து புத்தகங்களும் உள்ளது, தினமும் ஒரு புத்தகம் என்று நம் குழந்தைகள் படித்தால் கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக ஜீனியஸ் தான் முயற்சித்து பாருங்கள், நம் அனைத்து செல்ல குழந்தைகளுக்கும் இந்தப்பதிவை எடுத்துச்செல்லும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆங்கில உச்சரிப்பை கற்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.
உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.
நம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.
குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.
 

reshma

Friends's of Penmai
Joined
Jun 7, 2011
Messages
180
Likes
162
Location
Perth, Western Australia, Australia
#2
குணா

meegenius வலைத்தளம் வெறும் 6 கதைகளை மட்டுமே இலவசமாக தருகிறது ,storytimeforme 20 கு பக்கமான கதைகளை இலவசமாக தருகிறது.எனினும் தங்கள் தகவல் மூலமாக விண்மணி wordpress எனும் மிக சிறந்த பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டிய தளத்தை அறிந்தேன்.தகவலுக்கு மிக்க நன்றி.வளர்க உங்கள் சேவை...இந்த வலைதளத்துக்கு மிகுந்த தேவை..u r making this penmai website more inviting...
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#3
ரேஷ்மாவின் ஊக்கத்திற்கு நன்றிகள் பல...
இணையத்தில் பரவிக்கிடக்கும் பொக்கிஷங்கள் ஏராளம்...
தேவைகளை தாராளமாய் ஏற்புடையவைகளை ஏற்றுக்கொண்டு...
ஏற்றம்பெற எண்ணிலடங்கா வலைத்தளங்கள்...
ஆவல் ஆர்வத்தை தரும்..ஆர்வம் நினைத்ததை தரும்..
உங்களின் படிப்பார்வம்
என்போன்றவர்களுக்கு படைக்கும் ஆர்வத்தை ஊட்டுகின்றது,
அனைவருக்கும் ஏற்புடைய பல பதிவுகளையும் படைப்புகளையும் எதிர்பாருங்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.