சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏ

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,714
Location
Germany
#1
சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏன்?


ஒரே ஆண்டில் பிறந்தாலும், வயதாவதன் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று Proceedings of the National Academy of Sciences, என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஒவ்வொருவரின் எடை, சிறுநீரக செயற்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.

38 வயதேயான சிலர், உயிரியல் ரீதியாக கிட்டத்தட்ட 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர்.

வயது முதிர்வதன் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதுதான் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்தின் ஒரே நகரைச் சேர்ந்த 954 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 1972-73ல் பிறந்தவர்கள்.

இவர்களுக்கு 26 வயதாகும்போதும் 32 வயதாகும்போது 38 வயதாகும்போதும் 18 முதுமை சார்ந்த வெவ்வேறு பண்புகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அவர்களது உயிரியல் வயது, 20களிலிருந்து 60 வயது வரை காணப்பட்டது.

"அவர்கள் மென்மைத்தன்மை இல்லாமலும் உற்சாகம் குறைந்தவர்களாகவும் இருந்தனர்" என்று அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெரி மொபிட் தெரிவித்தார்.

இந்த ஆய்வு நடந்துக்கொண்டிருந்தபோதே, சிலரது வயது முதிர்வு நின்றுவிட்டது. ஆனால், வேறு சிலருக்கோ 1 வருடம் கடந்தபோது, உயிரியல் ரீதியாக மூன்று வருடங்கள் அவர்களுக்கு வயதானது.
முதிர்ந்த உயிரியல் வயதையுடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அவர்களது மூளைச் செயற்பாடு மோசமாக இருந்தது கண்டறியப்பட்டது.

பெரும்பாலானவர்களின் உயிரியல் வயது, அவர்களது நிஜ வயதிலிருந்து சில ஆண்டுகள் முன்பின்னாக இருந்தது.

உயிரியல் வயது பற்றி நமக்குத் தெரிந்திருந்தால், தேதிகளை அடிப்படையாகக் கொண்ட வயது என்பது தவறு என்பது புரிந்து மேலும் நாம் சரியான முறையில் செயல்படுவோம் என பேராசிரியர் மோஃபிட் பிபிசியிடம் கூறினார்.

உதாரணமாக, மிகச் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு ஓய்வுபெறும் வயது அடைந்துவிடுவதால் ஓய்வளிக்க வேண்டியிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் அவர்.

வயது முதிர்வதன் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களை துவக்கத்திலேயே கண்டறிவது முடியாதது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் வயது முதிர்வதன் வேகத்தை குறைப்பதை கண்டறிவதற்கும், நோய்களின் தாக்கம் குறித்து கண்டறியவும் இது உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஒருவருக்கு வயதாவதன் வேகத்தைக் குறைக்க வேண்டுமானால், அவர்கள் இளமையில் இருக்கும்போதே அதனைக் கண்டறிந்துத் தடுக்க வேண்டும்.

எதனால், வயதாகும் வேகம் அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதற்கான முதல் அடி இது.

இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எதிர்காலத்தில், நோய்கள் வரக்கூடும் என்பதை மிக முன்பாகவே கண்டறிந்து தடுக்க முடியலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது &#2

Nice sharing, Viji.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.