சில் சில்... கூல் கூல்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சில் சில்... கூல் கூல்!

ருமம், கேசம், கண்களை கோடை வெம்மையில் இருந்து காக்க, சில `பேக்ஸ்’ சொல்கிறார் சென்னை, விகாஷினி பியூட்டி சலூனின் உரிமையாளர் லக்ஷ்மி மனோகரன்.



சில் ஃபேஸ் பேக்ஸ்!


* ‘‘அதிக ஈரப்பதம் கொண்ட கற்றாழை... சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைப்பதுடன், சருமப் பிரச்னைகளைக் குணப்படுத்தும் சிறந்த மருந்தும்கூட! அதேபோல, மல்டி விட்டமின் சத்துகள் அடங்கிய ஸ்பைருலினா (கடல் பாசி), வயதான தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தில் இளமையைத் தக்கவைப்பதில் சிறந்தது. மெடிக்கல் கடைகளில் கேப்சூல் வடிவிலும், காஸ்மெடிக் கடைகளில் பவுடர் வடிவிலும் இது கிடைக்கிறது. ஒரு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், ஒன்றிரண்டு ஸ்பைருலினா கேப்சூல் பவுடர் கலந்து தண்ணீர் விட்டுக் குழைத்து, முகம் மற்றும் கழுத்தில் (தேவைப்பட்டால் வெயிலினால் நிறம் மாறிய கை, கால் பகுதிகளுக்கும்) தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இதை தொடர்ந்து செய்துவந்தால்... தளர்ந்த சருமம் இறுக்கமாவதுடன், `பளிச்’சென மாறும்.

* ஜாதிக்காய் மற்றும் அதிமதுரத்தை சம அளவு எடுத்துப் பொடி செய்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து அரைத்து முகத்துக்கு `பேக்’ போட்டு 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வெயிலினால் பொலிவிழந்த சருமம் `பளிச்’ என்று ஆகும்.

கூல் ஹேர் பேக்!
வெயிலினால் வறண்ட கேசத்துக்கான சிறந்த `ஹேர் பேக்’ செய்ய, வெட்டிவேர் 25 கிராம், கடுக்காய், பூலாங்கிழங்கு தலா ஒன்று எடுத்து, இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியுடன் ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்கள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும். இதை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிட்டு அலசவும். இந்த `பேக்’ போடுவதற்கு முன்னர் தலைக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு (சூட்டு உடம்புக்காரர்கள் மூன்று பங்கு நல்லெண்ணெய்க்கு ஒரு பங்கு விளக்கெண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம்), அதன்மேல் பேக் போடுவது அவசியம்.
ஐஸ் ஐஸ் `ஐ பேக்’!
முற்றாத காயின் இளநீர் மற்றும் வழுக்கையை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி, கண்களை மூடி பேக் போட்டு, 10 நிமிடங்களில் கழுவினால்... ஐஸ் ஐஸ் கண்கள்தான்!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.