சில நிமிடங்களில் உங்கள் மன அழுத்தத்தைக்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சில நிமிடங்களில் உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சில எளிய வழிமுறை


ஒரே மாத்திரையால் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியாது. ஆனால், ஒரே பிரச்சனையால் அணைத்து உடல் நலப் பிரச்சனைகளையும் அதிகரிக்க வைக்க முடியும். அது என்ன என்றி கேட்கிறீர்களா? அது தான் மன அழுத்தம்.

அதிலும் இந்த கணினிகள் முன்னே அமர்ந்துக் கொண்டு தங்களுக்கான "டார்கெட்டின்" பின்னே ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மன அழுத்தம், வேலையோடு சேர்த்து இலவசமாக தரப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு, முடி அதிர்தல், இதயப் பாதிப்புகள் போன்ற பல கோளாறுகள் ஏற்படுகிறது.

இனி, உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தத்தை எளிதாக சில நிமிடங்களில் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்...

வேலைகளை கொஞ்ச நேரம் நிறுத்தி வையுங்கள் இடைவேளை இன்றி உழைக்க உங்கள் மூளையும், மனதும் கணினி அல்ல. உங்களுக்கு நீங்கள் தான் ஓய்வளிக்க வேண்டும்.

எனவே, மன அழுத்தம் அதிகரித்தாலோ அல்லது தலை இறுக்குவது போல உணர்ந்தாலோ உடனே சிறிது நேரம் வேலைகளை நிறுத்தி வைத்துவிட்டு. அமைதியாக ஓய்வெடுங்கள். 15-30 நிமிடங்களாவது ஓய்வு தேவை.

பாடல் கேட்கலாம்பாடல்கள் அல்லது இசைக் கேட்க பழகுங்கள். மெல்லிய, இனிமையான இசை உங்கள் மனதை இலகுவாக்க உதவும். இதனால், சில நிமிடங்களில் மன அழுத்தம் குறைய நிறைய வாய்புகள் இருக்கின்றன.

யாரிடமாவது பேசுங்கள்மன அழுத்தம் அதிகரிப்பது போல இருந்தால், உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் மனதிற்கு பிடித்த நபருடன் பேசுங்கள். இது, உங்கள் மனநிலையை மாற்றவும், புத்துணர்ச்சி அடையவும் வெகுவாக உதவும்.

தீர்வு உண்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு. நீங்கள் எதிர்பார்ப்பது அந்த நொடியே நடக்கவில்லை என்று தேவை இல்லாமல் கோவமடைந்து, மன அழுத்தம் அதிகரிக்க நீங்களே காரணம் ஆகிவிடாதீர்கள். நிதானமாக இருந்து,சற்று நேரம் இடைவேளை எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

வெளியே செல்லுங்கள் பெரும்பாலும் எதாவது பிரச்சனையின் காரணமாக தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த நேரங்களில் வெளியில் சென்று வருவது நல்லது. குறைந்தது டீ, காபி குடிக்கவாவது சென்று வரலாம். ஆனால், ஐ.டி நிறுவனங்களில் அதற்கும் வேலை இல்லை, இலவச டீக் கொடுத்து உள்ளேயே உட்கார வைத்துவிடுகிறார்கள். ஆனால், வெளியில் சென்று கொஞ்ச நேரம் நடந்து வந்தாலே, மன அழுத்தம் குறைந்துவிடும்.

கற்பனையை மாற்றுங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, எதனால் மன அழுத்தம் அதிகரித்ததோ அதையே நினைப்பதை தவிர்த்து, வேறு விஷயங்களை பற்றி உங்கள் கற்பனையை மாற்றுங்கள்.

சிறிது நேரம் எந்த பிரச்சனையை பற்றியும் யோசிக்காமல். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். இது போன்ற விஷயங்கள் உங்களது மன அழுத்தத்தை சில நிமிடங்களில் போக்க உதவும்.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: சில நிமிடங்களில் உங்கள் மன அழுத்தத்தைக&#30

Hi @chan, you have suggested very useful and handy tips to come out of the மன அழுத்தம்!!!!!!!! thank you!!!!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.