சில முக்கியமான மருத்துவ குறிப்புகளை அறி&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சில முக்கியமான மருத்துவ குறிப்புகளை அறிந்து கொள்வோம்


* நீங்கள் மாணவரா, ஆசிரியரா, பேச்சாளரா அல்லது அலுவகத் தலைவரா மறுநாள் பேச வேண்டுமா, வகுப்பு எடுக்க வேண்டுமா, இரவு படுக்கும் பொழுது அனைத்து குறிப்புகளையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தூங்கும் பொழுது மூளை அனைத்தையும் தொகுத்து பதிவு செய்யும். மறுநாள் நீங்கள் மிகவும் சிறப்பாக சொற்பொழிவாற்றவோ எழுதவோ முடியும்.

எதுவும் மறக்காது. முறையாக உட்காராமல் உங்கள் கையை கோணலாக ரொம்ப நேரம் வைத்து கை மரத்து விட்டதா. கொத்து நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவே இவ்வாறு ஏற்படுகின்றது. இதற்கு கழுத்து தசைகள் சற்று இளக வேண்டும். எனவே, தலையை நிதானமாக இடது பக்கமும், வலது பக்கமும் திருப்புங்கள்.

கை சரியாகி விடும். கண் பார்வை சீராக இருக்க வேண்டுமா? கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து கண் சோர்வாகி விடுகின்றதா? அடிக்கடி அதாவது சுமார் இரண்டு மணி நேரத்திற்கொரு முறை கண்களை மூடிக்கொள்ளுங்கள். உடலை சற்று இறுக்குங்கள். பின்பு சாதாரணமாக்குங்கள். இவ்வாறு சில முறை செய்ய கண் சோர்வின்றி இருக்கும். பார்வையும் நன்கு இருக்கும்.

சாதாரண தலைவலியா? உங்கள் நாக்கை மடித்து வாயின் மேல் புறத்தை லேசாக அழுத்துக்கள். வாய் மூடி இருக்கட்டும். சாதாரண தலைவலியாயின் தலைவலி நீங்கும்.

* தொண்டை திடீரென ‘கிச்சுகிச்சு’ என்றாகிறதா? காதுகளை உங்கள் விரல்களால் தேய்த்து விட தொண்டை பாதிப்பு குறையும்.

* ஊசி போட்டால் வலிக்கும் என்று பயமா? ஊசி போடும் பொழுது லேசாக இருமுங்கள். இருமலால் நெஞ்சில் ஏற்படும் அழுத்தம் தண்டுவடத்தின் மூலம் வலி உணரச்செய்வதை தடுத்து விடும்.

* அடிக்கடி மூக்கடைப்பா? சைனஸ் தொல்லையா? நாக்கை மடித்து வாயின் மேல் புறம் அழுத்தி ஒரு விரலால் புருவ மத்தியில் லேசாக சில நொடிகள் அழுத்துங்கள். அடைப்பு நீங்கும்.

* இரவில் ‘வாயு’ தொல்லையா? இடது புறம் திரும்பி படுங்க வாயு தொல்லை வெகுவாக குறையும்.

* பல் வலியா? டாக்டரிடம் செல்லும் நேரத்திற்குள் உங்கள் கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடைபட்ட பகுதியில் அழுத்தம் கொடுங்கள். அல்லது ஐஸ் தேயுங்கள் வலி மட்டுப்படும்.

மேற்கூறிய குறிப்புகள் வெளிநாட்டு மருத்துவ பல்கலை கழங்களில் சில ஆய்வுகளின் குறிப்புகளாக கொடுக்கப்பட்டவை. நாமும் முயன்று பார்ப்போமே. ஆனால் இது தீர்வு அல்ல. ஒரு சிறு முதலுதவி அவ்வளவே.

டாக்டர் கமலி ஸ்ரீபால்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.