சீன காவல்துறையின் 'பிக்பாஸ்' கண்ணாடி.

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,228
Likes
75,774
Location
Chennai
#1
[h=1]சீன காவல்துறையின் 'பிக்பாஸ்' கண்ணாடி... ஓட முடியாது ஒளியவும் முடியாது![/h]
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது காவல்துறையினருக்கு சற்று சிக்கலான வேலைதான். பேருக்குத்தான் தலைமறைவே தவிர வெளியே ஜாலியாக ஷாப்பிங் போய்விட்டு ஊர் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒருவர் ஏதாவது ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு வெளிமாநிலத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டால் அந்த மாநில காவல்துறையினருக்குத் தெரியவா போகிறது என்ற தைரியத்தில் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பர். இந்த மாநில காவல்துறை அந்த மாநில காவல்துறையினருக்கு தகவல் சொல்லி விசாரிக்க ஆரம்பிக்கும் போது குற்றவாளி அந்த இடத்தைக் காலி பண்ணி ஒரு வாரம் ஆகியிருக்கும்.

இப்படி ஒரு பெரிய மக்கள்தொகை கொண்ட இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் ஒருவரின் முகத்தை அடையாளம் காண்பது என்பது சற்று கடினம்தான். அதிலும் குற்றவாளிகள் அடிக்கடி தோற்றத்தை மாற்றிக்கொண்டு இருக்கும் பொழுது இன்னும் சிரமமான விஷயம், கண்ணுக்கு முன்னால் நடந்து போனால் கூட காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியாது. இது போன்ற சமயங்களில் கை கொடுப்பது நவீனத் தொழில்நுட்பம்தான். அதற்காக சீன காவல்துறை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருப்பது ஸ்மார்ட் கண்ணாடிகள்.இந்தக் கண்ணில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது
பாதுகாப்பிற்காக நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சீனாவை மிஞ்ச வேறு ஆட்கள் கிடையாது. உலகத்திலேயே அதிகம் CCTV கேமரா கண்காணிப்பை கொண்ட நாடு சீனாதான். கிட்டதட்ட 170 மில்லியன் கேமராக்களைப் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்துகிறது. சமீப காலமாக பாதுகாப்பை அதிகரிக்க CCTV கேமராக்களில் facial recognition என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் படம்பிடிக்கும் பொதுமக்களின் முக அமைப்பை உணர்ந்து அவற்றை ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களோடு ஆராயும். இந்த மொத்த செயல்பாடும் நொடிகளுக்குள் நடைபெற்றுவிடும். யாராவது சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் எச்சரிக்கை செய்யும். CCTV கேமராவைப் பயன்படுத்தி மக்களை கண்காணிப்பது நல்ல முறைதான் என்றாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. CCTV கேமராவால் இடம் விட்டு இடம் நகர்வது சாத்தியமில்லை என்பதால் எல்லா பரப்பையும் கண்காணிக்க முடியாது.
அதற்குத் தீர்வாக, ஒவ்வொருவரும் அணிந்துகொள்ளும் வகையிலான ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது சீன காவல்துறை. இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இதைப் பயன்படுத்துவதால் ஒருவருக்கு எந்த வித சிரமமும் ஏற்படுவதில்லை. சாதாரண மூக்குக் கண்ணாடி போலவே அணிந்து கொள்கிறர்கள். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளிலும் facial recognition என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. பீஜிங்கைச் சேர்ந்த LLVision Technology என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்தக் கண்ணாடியின் மூலமாக தற்பொழுது ஒரு லட்சம் மனிதர்களின் முகங்களை அடையாளம் காணமுடியும். அதுவும் ஒருவரின் முகத்தை ஆராய்வதற்கு வெறும் நூறு மில்லி செகண்ட்களே நேரம் எடுத்துக்கொள்கிறது.
ஹெனான் மாகாணத்தின் ஷெங்ஸோ நகரின் ரயில் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்மார்ட் கண்ணாடி வழங்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் ஏழு முக்கிய குற்றவாளிகளை இதன் மூலமாக கண்டுபிடித்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருமே காவல் துறையால் தேடப்பட்டு வந்தவர்கள். இது தவிர போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய 26 பேரும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் சீனா சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவுத்திறன் மற்றும் மேம்பட்ட கண்காணிப்புக் கருவிகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. 2020-ம் ஆண்டில் சீனாவில் இருக்கும் CCTV கேமராக்களின் எண்ணிக்கை 600 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.