சுட்டி குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறை&a

chan

Well-Known Member
#1
சுட்டி குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள்


குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களது விளையாட்டால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவாறு வீட்டு உபயோகப்பொருட்கள், மற்றும் பிற கட்டமைப்புகள் ஆகியவற்றில் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]நகர்ப்புறங்களில் இருக்கும் குடும்ப அமைப்புகள் சிறிய அளவாக இருந்து வருகின்றன. பணி, தொழில், வியாபாரம் ஆகிய காரணங்களுக்காக நகரங்களுக்கு குடிபெயர்பவர்களது எண்ணிக்கையும் பெருகிக்கொண்டிருக்கிறது. கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கும் சூழலில் அவர்களுக்கு தவழும் வயதில் அல்லது நடக்கும் வயதில் சிறு குழந்தை இருந்தால் அவர்களை கவனித்துக்கொள்வது பெரும் பொறுப்பாக மாறிவிடுகிறது.

குறும்பு குழந்தைகள் :

சுட்டி குழந்தைகளின் குறும்புகளுக்கும், விளையாட்டிற்கும் ஒட்டு மொத்த வீடும் பெரிய விளையாட்டு மைதானமாக அமைகிறது. தரைமட்டத்தின் 2 அடி உயரத்திலிருந்து அவர்களது பார்வைக்கு படக்கூடிய எல்லாமே விளையாட்டு பொருளாகத்தான் தெரியும். குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களது விளையாட்டால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவாறு வீட்டு உபயோகப்பொருட்கள், மற்றும் பிற கட்டமைப்புகள் ஆகியவற்றில் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப்பற்றி வீட்டு உள் கட்டமைப்பு நிபுணர்கள் தரும் முக்கிய குறிப்புகளை இங்கு காணலாம்.

கவனிக்க வேண்டியவை :

நடந்து செல்லும் அல்லது ஓடியாடும் வயதுகளில் அவர்கள் இருந்தால், பாதுகாப்பு கருதி இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி வீடுகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். சுவர் மூலைகள், ‘பர்னிச்சர்களின்’ கூர்மையான பகுதிகள், உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கும் மின்சார இணைப்புகள் அல்லது ‘பிளக் பாயிண்டுகள்’, வழுக்கக்கூடிய தரைத்தளம், அவர்களுக்கு எட்டும் தொலைவில் வைக்கப்படும் ‘பினாயில்’ அல்லது பூச்சிக்கொல்லி போன்ற ரசாயன பொருட்கள் ஆகியவற்றை தக்க பாதுகாப்புடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியமானது. அதற்காக சில மாற்றங்களையும் செய்ய வேண்டியதாக இருக்கும்.

குளியல் அறையில் எச்சரிக்கை:

குட்டி பசங்கள் குளிக்கும்போது செய்யும் குறும்புகள் சொல்லி மாளாது. குளிக்கும் அறைக்கு வெளியேயும், ‘பாத் டப்களுக்கு’ அருகிலும் கெட்டியான ‘காட்டன் மேட்கள்’ போட்டு வைக்க வேண்டும். அவர்கள் தானாகவே குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது. அங்கே உள்ள ‘டாய்லெட்’ பீங்கான்களுக்கு அவசியம் மூடிகள் இருக்க வேண்டும். ‘சோப்’ மற்றும் ‘ஷாம்புகள்’ வைக்கும் சிறு அலமாரி அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கவேண்டும். ‘ஸ்விட்ச் பாக்ஸ்கள்’ கண்டிப்பாக 5 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்திருக்க வேண்டும்.

பால்கனிகள் மற்றும் மாடிகள் :

பால்கனிகளில் அமைக்கப்படும் தடுப்புகளின் உயரம் நான்கு அடிகளுக்கும் மேல் இருக்க வேண்டும். முற்றிலும் கம்பி வலை கொண்டு மூடப்பட்டிருந்தாலும் நல்லது. அவற்றின் இடைவெளியில் குழந்தைகள் தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கும் விதத்தில் இருக்க கூடாது. மாடிப்படிகள் வழுக்காதவாறு ‘சொரசொரப்பான டைல்ஸ்’ ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் தென்னை நார் ‘மேட்கள்’ போட்டு வைக்கலாம். மேல் மாடியின் கைப்பிடி சுவர்களை இரும்பு குழாய்கள் பதித்து உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

சமையலறை :

சமையலறையில் வைத்திருக்கும் கத்திகள், கூர்மையான கருவிகள் போன்றவை எட்டாத இடத்திலும், ‘கிச்சன் கேபினட்டுகள்’ தக்க முறையில் பூட்டியும் வைத்திருக்க வேண்டும். ‘பிரிட்ஜ்’ மற்றும் ‘மைக்ரோ வேவ் ஓவன்’ அடுப்புகள் பயன்படுத்தாத சமயங்களில் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ‘காபி மேக்கர்’ மற்றும் ‘பிரட் டோஸ்டர்கள்’ ஆகியவற்றின் மின் இணைப்புகள் தக்க உயரத்தில் இருக்கவேண்டும்.

பொதுவானவை :

வீடுகளில் இருக்கும் எல்லா இடங்களிலும் குழந்தைகள் வலம் வருவார்கள். அறைகளில் உள்ள கதவுகள் இருபுறமும் பூட்டுவதுபோன்ற ‘லாக் சிஸ்டம்’ இருப்பது அவசியம். தற்செயலாக உட்புறமாக அவர்கள் பூட்டிக்கொண்டு விட்டாலும் வெளியிலிருந்து திறக்க இயலும். மாடிப்படிகள் தொடங்கும் இடத்திலும், மேலே முடியும் இடத்திலும் சிறிய அளவிலான தடுப்பு கதவுகள் அமைக்க வேண்டும். கதவுகள் வெகு சுலபமாக மூடிக்கொள்வதுபோல இல்லாமல் மெதுவாக இயங்கும் வகையில் ‘ஸ்டாப்பர்கள்’ பொருத்தியிருப்பது நல்லது.
[/FONT]
[/FONT]
 
Last edited:
#3
Re: சுட்டி குழந்தைகளுக்கான பாதுகாப்பு முற&#301

Very useful sharing :thumbsup