சுயம்புமானவள் - Suyambumaanaval By Gayathri

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,909
Likes
76,715
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our 'Penmai' family. Pls. join with me in welcoming our friend Gayathri @
gaya12.

Below goes her story 'சுயம்புமானவள்' & her introduction. We wish her all the very best and to have a long & fruitful association with 'Penmai'. Enjoy by reading her story & do support with your valuable feedback / comments.

Hi...This is Gayathri..

This story belongs to a girl who faces problems in life.. How to overcomes her fears? And how she settles in carrier and marriage.. She not believes in love and marriage.. Let's see what happens her life.

சுயம்புமானவள்

இது என்னுடைய முதல் கதை. இந்த கதையின் மூலம் என் எழுத்தாற்றலை நிரூபிக்க உள்ளேன். இக்கதையின் நாயகி தன் வாழ்க்கையின் அனைத்து இன்னல்களையும் ஒரேநேரத்தில் பெற்று, தனக்கென யாரும் இல்ல இச்சமுகத்தை எவ்வாறு எதிர் கொள்கிறாள். சுயம்புவாக தன்னை மெருகேற்றுக் கொண்டவளின் வாழ்க்கையில் தனக்கு எனக் கிடைக்கும் ஒருவரை, அவளால் தன்னுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்று கொள்கிறாளா? இல்லையா? என்பதை இக்கதையின் வாயிலாக கூற உள்ளேன்.

இக்கதையின் நாயகியின் பெயர் மித்ரா. நாயகனின் பெயர் ஹரிஷ்கிருஷ்ணா.

அன்புடன்,
காயத்ரி

 
Joined
Jan 30, 2012
Messages
34
Likes
41
Location
salem
#3
சுயம்புமானவள் - 01



பிருந்தாவனம் இல்லம் கோவை மாநகரம்
பெயருக்கேற்ப எந்தவிதமான அறிகுறியும் இல்லை அந்த வீட்டில். ஏனெனில் எந்த விதமான சந்தோசங்களையும் உயிர்ப்பையும் பெற்றிருக்கவில்லை. இவை அனைத்தும் இருந்தகாலமும் உண்டு, ஆனால் இப்பொழுது தனி ஒருத்தி வாழும் இருப்பிடமாக மட்டுமே உள்ளது.
அங்கே அவள் தனியாக இருக்கிறாள் என்று கருத வேண்டாம். வீட்டில் வேலை செய்யும் ஆட்களும் அவளுக்கான பிஏ மதுமிதாவும் அவளுடன் தங்கியிருக்கிறார்கள். அனைத்துவிதமான வெற்றிகளையும் பெற்று யாரும் எதிர்க்க முடியாத இடத்தை அவள் அடைவாள் என அவளே நினைத்திருக்கமாட்டாள்.
“மது” என அழைத்துக்கொண்டே மாடிப்படிகளில் இருந்து அவசரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் தனது முதலாளியைப் பார்த்து கொன்டிருந்தாள் அவளது பிஏ.
‘சொல்லுங்க மேடம்’ என்றாள் பவியமாக.
“இன்றைக்கு என்ன அப்பாயிண்மாண்ட் இருக்கு” என்று கேட்டு கொண்டே டைனிங் டேபிள்க்கு சென்றாள் மித்ரா.
“மேடம் இன்னிக்கு ஒரு ப்ராஜெக்ட் பைனல் பண்ணி சைன் செய்யணும். அப்புறம் மும்பை கிளையிண்ட்ஸ் கூட லஞ்ச் இருக்கு. evening ஒரு charity function இருக்கு மேடம் அதுக்கு நீங்க cheif கெஸ்ட் ஆக போகனும்” என்றாள்.
“சரி” என்று ஒற்றை வரியோடு சாப்பிட ஆயத்தமானாள். அவள் டைனிங் டேபிளை அடைந்ததும் அனைத்து உணவுகளையும் வைத்துவிட்டு அவளுக்கு பரிமாற ஆயத்தமாக பார்வதி அம்மாள் காத்திருந்தார்கள். அவர் இந்த வீட்டு சமையல் முதல் அனைத்து வகையான பணிகளையும் மேற்பார்வைசெய்பவர், மித்ரா மீது மிகுந்த பாசத்தை வைத்திருப்பவர். அவளை எல்லா வித இன்னல்களில் இருந்து பேணிக்காப்பவர். ஆனால் அவர்ளையும் தனக்கு அருகில் வைத்துக் கொள்ளமாட்டாள் மித்ரா. அதற்கும் ஒரு காரணம் உள்ளது மித்ராவிடம்.
சாப்பிட்டு முடித்தவுடன் நேராக அவளது இல்லபூஜை அறையில் இறைவனை வணங்கி விட்டு, திரும்புகையில் அந்த அறையில் இருந்த மற்ற புகைப்படங்களைப் பார்த்து விட்டு தன் கண்களை அழுந்த முடி தன்னை சமநிலை படுத்தி விட்டு தன்னுடைய அலுவலுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு தனது பிஏ உடன் அலுவலகம் செல்ல தனது BMW காரை நோக்கி சென்றாள். டிரைவர் வண்டியை திறந்து அவள் உள்ளே சென்றதும் எந்தவிதமான தாமதமும் இன்றி கார் பறந்தது. ஏனெனில் அவளுக்கு time management மிகவும் முக்கியமானது.
அவள் சென்ற பாதையை மிகுந்த வேதனை உடன் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். எப்படி இருந்த பெண் இப்படி மாறி விட்டாளே !! என்று பெருமூச்சை விட்டார். அப்படி என்னத்தான் நடந்தது நீங்கள் கேட்க விரும்புகிறிர்கள் அல்லவா !! அதை கதைகளத்தில் கூறுகிறேன்.


கோகுலம் இல்லம் கோவை மாநகரம்
மித்ராவின் வீட்டிற்கு நேர்மாறாக இருந்தது, ஹரி என்று நண்பர்களாலும், கிருஷ்ணா என்று வீட்டிலுள்ளவர்களாலும் அழைக்கப்படும் நமது நாயகன் ஹரிஷ்கிருஷ்ணாவின் இல்லம்.
“ஏங்க நம்ம பசங்கள காணோம்ங்க ரூம்ல தா தூங்கிட்டு இருந்தாங்க” என்று கேட்டபடி வந்தார் மீரா கிருஷ்ணாவின் அண்ணி.
“அவங்க சித்தப்பா ரூம்ல இருப்பாங்க மீரா, ஏன் டென்ஷனாகற?” என்றான் கூலாக ப்ரித்வி.
“அதுதான் பயமாயிருக்கு ப்ரித்வி, கிருஷ்ணாவும் அவங்களும் பண்ற அட்டகாசம் இருக்கே முடியலபா, வீட்டையே தலைகீழா மாத்திடறாங்க”
“கிருஷ்ணா கொடுக்கற செல்லத்தால தா இவங்க எல்லாம் என்னோட பேச்சையே கேட்க மாட்டன்றாங்க” என்றால் சற்று சலிப்பாக மீரா.
சிரிப்புடன் அவளருகே வந்த அவனது கணவன் “உனக்கே தெரியும் தான மீரா அவனுட சந்தோசமே பசங்க கூட தா, அவன என்னவிட உனக்கு தா நல்லா தெரியும். அவன் என்ன தா வெளிய ஆபீஸ்ல எவ்வளவு RUDE ஆ இருந்தாலும், அவன் இன்னும் பழைய கிருஷ்ணாவ இருக்கறது நம்ம குட்டிஸ்கிட்ட மட்டும் தான்.”
“அவன பழைய மாதிரி எல்லார்கிட்டயும் பழகறத பாக்கணும்னு ஆசையா இருக்கு மீரா” என்றான் உணர்ச்சிபெருக்கோடு ப்ரித்வி.
“நீங்க நினைக்கறது கண்டிப்பா நடக்கும்ங்க என்றாள்” அவன் துணைவி ஒருவித நம்பிக்கையுடன்.
அங்கே இவர்கள் யாரை பற்றி பேசி கொண்டிருக்கிறார்களோ, அவனைச் சுற்றி அவர்களது பிள்ளைகள் அவனை எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அப்படியே அவனுடைய அறையை பார்வையிடலாம். அது ஒரு KINGSUIT அறை, தானே அந்த அறையயை வடிவமைத்து இருந்தான். அந்த அறையில் இல்லாத வசதிகளே இல்லை, அனைத்து வசதிகளையும் பெற்று உள்ளது. அந்த அறையில் இல்லாத ஒன்று ஒரு மனைவி மட்டுமே.
அழகான டிரஸிங் டேபிள், வாட்ரோப்கள், சிறிய பால்கனி , ஊஞ்சல் , king size bed, டிரஸிங் ரூம் மற்றும் குழந்தைகளுக்கான சிறிய அறை என சீராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவன் ஒரு மிகச்சிறந்த கட்டட வடிவமைப்பாளர் என்று ஒவ்வொரு முறையும் நிருபிக்க படுகிறது. கிருஷ்ணா கட்டடவியல் துறையில் முதுநிலை படிப்பு முடித்தவுடன், தனது குடும்பத் தொழிலான கன்ஸ்டராக்ஷன் தொழிலைத் திறம்பட நிர்வகிக்கிறான்.
"சித்து!! எழுந்திரி எங்களுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது" என்று தன்னால் முடித்த வரை கத்திக் கொண்டிருந்தான் பிரவீன். அவன் தங்கை மிருதுளாவோ தனது கிருஷ் சித்தப்பாவிற்கு தூங்குவதில் கம்பெனி கொடுத்து கொண்டிருந்தாள்.
அவனுக்கு இவர்கள் தூங்குவதுப்போல் நடிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், உடனே தன்னுடைய டெக்னிக்கை பயன்படுத்தி அவர்களை எழுப்பினான்.
"அய்யோ!! அம்மா!! " எனக் கூறிக்கொண்டே கீழே விழுந்த மாதிரி நடித்தான். அவனது அழறலில் தூங்குவதுப்போல நடித்துக் கொண்டிருந்தவர்கள் அடித்துப்பிடித்துக் கொண்டு எழுந்தனர்.
"என்னாச்சு பிரவீ ! அடிப்பட்டிடுச்ச இங்கே காட்டு" என்றான் அவர்களின் கிருஷ்ணா.
"அண்ணா!! ரொம்ப வலிக்குதா!" டாக்டர்கிட்ட போகலாமா? என்றாள் பாவமாக மிருதுளா.
"ஹாஹா!! எப்படி எழுப்பின பாத்திங்களா! " அவர்கள் இருவரும் இடுப்பில் கை வைத்தப்படி முறைத்தனர்.
"சாரி சித்து!! இன்னைக்கி பிராஜக்ட் இருக்கு லேட்ட போனா பெஞ்ச் மேலே நிக்க வைச்சிடுவாங்க!" அதுதான் சீக்கிரம் எழுப்பிட்டேன்.
அவன் சொன்ன முகபாவங்களில் கோபம் மறந்து பாசத்துடன் பார்த்தான். அவனை தூக்கிச் சுற்றி கீழே விட்டவுடன்." நானு நானு!! எனக் குதித்தாள். அவளையும் தூக்கிச் சுற்றி விட்டு, சீக்கிரம் ரெடி ஆகுங்கள். நானே உங்களை ஸ்கூலில் டிராப் பண்ணிடரேன்" , என்றான்.
அவன் சொன்னவுடன் "அம்மா எனக் கத்திக்கொண்டே ஓடினார்கள்". அவர்கள் சென்றவுடன் தன்னுடைய முகத்தை கடினமாக வைத்துக்கொண்டான். தானும் தன் ஆபிஸ்க்கு செல்ல தயாரானன்.

அடுத்த பகுதி விரைவில் கொடுக்க முயற்சிகிறேன்...
 

Attachments

Joined
Jan 30, 2012
Messages
34
Likes
41
Location
salem
#4
Joined
Jan 30, 2012
Messages
34
Likes
41
Location
salem
#5
சுயம்புமானவள் 02




பிரவீ, மிருதுளா ரெடி ஆயிட்டிங்களா? “ எனக் கேட்ட படியே மாடிப்படிகளிலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்தவனை அதுரமாக அவன் தாய் கோதை பார்த்து கொண்டிருந்தார்.
அவர்களை பார்த்தும் பார்க்காததை போல முகம் திருப்பிச் சென்றான். முகம் வாடினாலும் அதை மறைத்து மீராவிற்கு கண் காட்டினர்.
அதை புரிந்தவளாக, “ கிருஷ்ணா !! வா, சாப்பிடலாம்” என்றழைத்தாள்.
“அண்ணி !! பசங்க சாப்பிடங்களா! “ எங்கே காணோம் என்றான். அவன் அண்ணி என்று அழைத்ததும் நெஞ்சில் சுருக்கென்றது. அதை மறைத்து, “சாப்பிட்டாங்க, நீ சாப்பிடு “ என்றாள்.
அவள் முகபாவனை வைத்தே கண்டு கொள்பவன் அவள் வருத்தத்தையும் அறிந்தான். இருந்தும் நீ என்னை ஏமாற்றியதற்கு உனக்கு தேவைத்தான் என எண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட ஆரம்பித்ததும் அவனிடம் மறைத்த ஒரு உண்மைக்காக மானசிகமாக மன்னிப்பை கேட்டாள்.
ஆபீஸ் கிளம்பி ரெடியாக வந்த கணவனை கண்டவள், மதிய உணவை அளித்தாள்.
“கிருஷ்ணா!! பசங்களை நீ கூப்பிட்டு போறாய்! இல்ல நா விடனுமா?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“ இல்லை அண்ணா !! நானே விடுறன் “ , என்றான்.
அப்புறம் ஆபீஸ்ல வொர்க்ல எப்படி போகுது? எந்த ப்ரப்ளமமும் இல்லையே? என்று வினவினான்.
நல்லாதான் இருக்கு அண்ணா, ஒரு பிரச்சனையும் இல்ல! நீங்க வரலாம்தான ஆபீஸ்க்கு என்றான்.
உனக்கு தான் எல்லாமே தெரியும் இல்ல எனக்கு flight-ல pilot ஆ இருக்கறதல தான் இஷ்டம், என்னோட ambition கூட அதுதான், எனக்கு இதுல தா ஆத்மத்திருப்தி கிடைக்குது. ஆனால் உனக்கு எப்பவும் நான் சப்போர்டதான் இருப்பேன்.
அவன் கூறியதை அமைதியாக கேட்டவன், நாம எவ்வளவுதான் கேட்டாலும் இதைதான சொல்லுவாங்க ! என்று பெருமூச்சை விட்டவன். “அண்ணா !! இன்னிக்கு உங்களுக்கு வொர்க் இல்ல தான அப்புறம் என்ன லஞ்ச் எடுத்துட்டு கிளம்பரிங்க?. அதுவும் எப்பவும் எடுத்துட்டு போகமாட்டிங்களே? , என்று வினவினான்.
அது ஒன்னும் இல்ல கிருஷ்ணா ஒரு சின்ன technical conference ப்ரோக்ராம் இருக்கு பத்து நாளைக்கு. அதுக்குதா மீரா கொடுத்து அனுப்புற என்றான்.
“ ஒஹ் ஒஹ்!! அப்படியா, சரி அண்ணா, இன்னைக்கு லேட்டதா வருவேன் ! friend ஓட charity function போக வேண்டிருக்கு என்று கூறியவன் சாப்பிட்ட கை கழுவ சென்றான்.
சரி கிருஷ்ணா, நீ போய்ட்டு வா என்றவன். மீரா பசங்களைத் தயார் செய்து அழைத்து வரவும் சரியாக இருந்தது.
“ மீரா!! நீ பசங்களை சாயந்திரம் கூட்டிட்டு வந்துடு. நான் வந்ததுக்கு அப்புறம் அம்மாவ ஆஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போலாம் “ என்று கூறியவன்.
“அம்மா!! அப்பா எங்க இருக்காரு” , என்று கேட்டுகொண்டே சென்றவனை பார்த்து அதிர்ந்து நின்றான். அதை பார்த்ததும் அவன் அருகில் வந்த மீரா, அத்தைக்கு ஒன்றும் இல்லை ஜஸ்ட் bp raise ஆயிருக்கு பயப்பட எதுவும் இல்லை என்று கூறினாள்.
மீராவிற்கு தெரியும் என்ன தான் கோபமாக இருந்தாலும் பெற்றவர்களின் மேல் அதிகமான பாசம் கொண்டவன். அவர்களின் மீது மதிப்பு மரியாதையை வைத்து இருப்பவன். இருந்தாலும் அவர்களுடன் பேச தோன்றவில்லை அதற்கு காரணமும் உண்டு. கிருஷ்ணாவின் பெற்றவர்கள் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ரணத்தை அளித்துவிட்டார்கள்.
ப்ரித்விக்கும் மீராவிற்கும் அது தெரிந்தும், கிருஷ்ணாவின் கோபம் நியாயமானதாகவே தோன்றியது. இவர்களுக்கும் அவர்களின் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களே தங்களின் தவற்றை எண்ணி வருந்துவதை பார்க்க முடியாமல், மன்னித்து குடும்பம் நிலைகுலையாமல் இருக்க எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரே வீட்டில் இருக்க வைத்திருந்தார்கள். ஆனால் கிருஷ்ணாவையும் அவனது பெற்றோர்களையும் ஒருவரிடம் மற்றவர் பேசுமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் தவறு பெற்றவர்களிடம் உள்ளது என நன்கு அறிந்திருந்தனர்.
மீரா கூறி சென்றவுடன் முகத்தை மாற்றிக் கொண்டு பிள்ளைகளை அழைத்தான்.
“சித்து, 2 நிமிஷம் தாத்தா, பாட்டி கிட்ட சொல்லிட்டு வரோம்” என்றான் பிரவின்.
தாத்தா பாட்டி நாங்க ஸ்கூல்க்கு போய்ட்டு வரோம் என்று கூறி விட்டு சிட்டாக பறந்தார்கள்.
கிருஷ்ணா அவர்கள் இருவர்களையும் காரில் பத்திரமாக உட்கார வைத்துவிட்டு வண்டியை கிளப்பினான்.
கார் கிளம்பியதும் தன் அறை ஜன்னலில் இருந்து பார்வையை விளக்கி தன் அறையில் இருந்தவர்களைப் பார்வையிட்டார் நந்தகோபால் கிருஷ்ணாவின் தந்தை. இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சிறை வாசம் என்பது போல இருந்தது அனைவரின் பார்வையும் அவர் மேல்.மேலும் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் தான் வேலைக்கு போய் வருவதாக சொல்லி கிளம்பினான் பிரித்வி.
போனவன் திரும்பி வந்து எல்லாம் சரியாகிடும் என்று கூறி மாலையில் தயாராக இருக்குமாறு தன் தாயிடம் கூறினான். அதற்கு தலையை மட்டும் ஆட்டினார்.
ப்ரித்வியும் இயலாமையால் பெருமூச்சை விட்டு சென்றான். மீராவிடம் அவர்களை பார்த்துகொள்ளுமாறு தலையை அசைத்து தன் காரில் பயணத்தை தொடங்கினான். என்ன தான் எல்லாருக்கும் தைரியம் கூறினாலும் அவன் மிகுந்த வேதனையில் இருந்தான். அதை அவள் மனையாள் மட்டுமே அறிவாள். அன்பாக இருந்த குடும்பம் இப்பொழுது சிதறி இருப்பதை ஒரு கையாலகாத தனத்தால் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது அவனால். தந்தை தன் அறையில் மட்டுமே இருந்து தான் செய்த தவறுக்கு சிறை வாசமிருக்கிறார். தாயோ ஒரு படி மேலே போய் மௌனத்தை கடைபிடிக்கிறார் அதுவும் இரண்டு ஆண்டுகளாக. இதற்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என்ற ஏக்கத்தோடு அவன் அலுவலகத்துக்கு சென்றான்.
கிருஷ்ணா பிள்ளைகளைப் பள்ளியில்விட்டு விட்டு தன் construction கம்பெனிக்கு செல்ல பயணித்தான்.
 
Thread starter Similar threads Forum Replies Date
sumathisrini Serial Stories Comments! 7

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.