சுவை மருத்துவம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]சுவை மருத்துவம் -ஹீலர் பாஸ்கர்[/h]
நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். அப்போது நாம் ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடுவோம்.

சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா?

சாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும். ஆனால் அறிவியல்படி, நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்குச் சென்று, அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி, பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது.

எனவே நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைச் சோதனை செய்து பார்ப்பதற்கான காரணம் இதுதான்.
ஆனால், சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது.

இது எங்கிருந்து வருகிறது?

நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிராண சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதிப் பிராண சக்தி கிடைக்கிறது.

நாம் உணவை மெல்லும்பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளிப் புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள் (Taste Buds) மூலமாக உறிஞ்சப்பட்டு, சுவைகள் பிராண சக்தியாக மாறி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பப்படுகின்றன. மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதைப் பிரித்துக் கொடுக்கிறது.


 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
நமது உடலுக்குப் பல வகைகளில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும்பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.

நாம் உணவகத்தில் சாப்பிடும்பொழுது, சாப்பிட்டவுடன் தெம்பாக இருக்கிறோம். ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருக்கும். ஏனென்றால், உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவைச் சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள்.

எனவே, அந்தச் சுவை நாக்கின் மூலமாகப் பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் சோடா உப்பு, அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து, உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருட்களாக இருப்பதில்லை.

எனவே, ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.
வீட்டில் சாப்பிடும்பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒரு மணி கழித்து நன்றாக, தெம்பாக இருக்கும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், வீட்டில் சமைக்கும்பொழுது நாம் சுவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், உணவில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே, சுவை மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால், உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.

வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும். எனவே, வீடுகளில் இனிமேல் உணவகங்களைப் போன்று சுவையாகச் சமைக்க வேண்டும். அதே சமயம், உணவகங்களில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருட்களைச் சமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம்.

ஆம்! சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் அற்புதமான ஒரு விசயம்! எனவே, நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகைகளிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழலாம்.

நமது உடலில், ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்கிறது. இப்படி, மொத்தம் ஐந்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமான பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்பு வேலை செய்யும். இப்படி எந்தப் பிராண சக்திக்கும் எந்த உறுப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை இனி தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
உவர்ப்பு (உப்பு)

சிகிச்சை

உவர்ப்புச் சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் சிறுநீரகம், மூத்திரப்பை, காதுகள் ஆகியவை. இதற்கான உணர்ச்சி பயம்.

‘உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்’ என்று பழமொழி உள்ளது. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பு நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும்பொழுது நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருட்களை இரத்தத்தில் கலந்து, கெட்ட பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றுவது. எனவே, சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும்போது உடலுக்கு நீர்த் தேவை அதிகரிக்கிறது.

காதுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காதும் சிறுநீரகமும் வடிவத்தில் ஒரே மாதிரி இருக்கும்.

அதே போல், பயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உண்டு. ‘பயத்தில் சிறுநீர் கழித்து விட்டான்’ என்று நாம் வழக்கமாகக் கூறுவோம். பயம் வந்தால் ஏன் சிறுநீர் வெளியாகிறது? பயம் என்ற உணர்ச்சி மனதில் தோன்றினால் உடலில் உள்ள நீர்ப் பிராணனை அது சாப்பிட்டு விடும்.

உடலில் நீர் சக்தி இல்லையென்றால், சிறுநீர்ப்பை சிறுநீரைப் பிடித்து வைப்பதற்குத் தேவையான நீர் சக்தி கூட இல்லாமல் சிறுநீரை வெளியேற்றி விடுகிறது.

எனவே, மனதில் பயம் வரும்பொழுது காது, சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகியவை பலவீனம் அடைந்து நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் நோய் வந்தால் மனதில் பயம் வரும். மனதில் பயம் வந்தால் சிறுநீரகத்தில் நோய் வரும்.

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் அந்த நோயால் உயிரிழந்தவர்களை விட பயத்தால் உயிரிழப்பவர்களே அதிகம். இந்த உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து இல்லையென்று மருத்துவர்கள் நோயாளியைப் பயமுறுத்துகிறார்கள். இந்தச் செய்தி நோயாளியின் மனதில் ஆழமாகப் பதிந்து மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் நபர்கள் உள்ள உலகத்தில், “ஒரு நோய் வந்து விட்டது; அதைக் குணப்படுத்த முடியாது; நீங்கள் இறந்துதான் போவீர்கள்” என்று ஒரு மருத்துவர் கூறினால் நோயாளிக்குப் பயம்தான் வரும். இப்படி நோயாளி பயந்தால் அந்தப் பயம் நீர் சக்தியை மொத்தமாகத் தீர்த்து விடும். உடலில் நீர் சக்தி எப்பொழுது இல்லையோ சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பயம்தான் சிறுநீரகத்தில் உள்ள நோயைப் பெரிதுபடுத்தி, உயிரைக் குடிக்கிறது.


புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பது இதனால்தான். எனவே, எந்த நோயாக இருந்தாலும், தயவு செய்து முதலில் தைரியமாக இருங்கள்! பயப்பட்டால் நோய் பெரிதாகும். தைரியமாக இருந்தால் நோய் குணமாகும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை அதிகமாய் இருக்கின்றது.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
புளிப்புச் சிகிச்சை

புளிப்பு என்கிற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அந்தச் சுவையை ‘ஆகாயம்’ எனும் பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். இந்த சக்திக்குக் கல்லீரல், கண்கள், பித்தப்பை – இவை மூன்றும் வேலை செய்யும்.

கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்புச் சுவைக்கும் கூட சம்பந்தம் உண்டு.

புளியம்பழத்தை நாக்கில் வைத்தால் நம் கண்கள் கூசுகின்றன.
கண்களை மூடுகிறோம். ஏன்?

அதில் உள்ள புளிப்புச் சுவை நாக்கில் பட்டு ஆகாய சக்தியாக மாறி உடல் முழுவதும் பரவுகிறது. ஆகாய சக்தியால் வேலை செய்யும் கண்கள் அதிக சக்தி கிடைப்பதால் கூசுகின்றன.

சாராயம் போன்ற போதைப் பொருட்களைச் சாப்பிட்டவருக்கு அடுத்த நாள் காலை கண்கள் சிவப்பாக இருக்கும். ஏன்? ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள் இரத்தத்தில் கலந்தவுடன் அந்தக் கெட்ட பொருட்களைப் பிரிப்பதற்காகக் கல்லீரல் இரவு முழுவதும் அதிகமாக வேலை செய்திருக்கும்.

நச்சுப் பொருட்களை வெளியேற்றக் கல்லீரல் உடலில் உள்ள ஆகாய சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கும். இதனால், உடலில் ஆகாய சக்தி குறைந்து போயிருக்கும்.

காலையில் கண்கள் சிவந்திருக்கிறது என்றால் அது கண் சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. உடம்பில் ஆகாய சக்தி குறைவு என்பதே உண்மை.

கோபம் வந்தால் கண்கள் சிவப்பாகும். காரணம், கோபத்துக்கும் ஆகாய சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதால், அந்த உணர்ச்சி மனதில் எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது உடலில் உள்ள ஆகாய சக்தி முழுவதையும் சாப்பிட்டு விடும். இப்படி, உடலில் ஆகாய சக்தி குறைந்து விடுவதால் கண்கள் சிவந்து விடுகின்றன.

மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் கெட்டுப் போய்விடும் என்று கூறுவார்கள். கல்லீரல் கெட்டுப் போய்விட்டால் கோபம் அதிகமாக வரும். கோபம் அதிகமாக வந்தால் கல்லீரல் கெட்டுப் போகும். இப்படி புளிப்புக்கும் ஆகாயத்திற்கும், கல்லீரலுக்கும் பித்தப்பைக்கும், கண்ணுக்கும் கோபத்திற்கும் தொடர்பு உண்டு. இப்படித் தொடர்பு உண்டு என்று அறிந்த மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகளில் உள்ள நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கண்ணில் நோய் என்று ஒரு மருத்துவரைச் சந்தித்தால் அவர் கண்ணில் மட்டுமே ஆராய்ச்சி செய்கிறார், ஸ்கேன் செய்கிறார். அங்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இது சரியான சிகிச்சை அல்ல! ஒருவேளை அந்த நோயாளிக்குக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புளிப்பு அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிட்டிருக்கலாம். பித்தப்பையில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அல்லது, அடிக்கடி கோபப்படும் நபராக இருக்கலாம்.

அல்லது, மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படிப் பல வகையான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே நம் உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் மாங்காய் சாப்பிடுகிறார்கள்?

குழந்தை உண்டாகும் முன்பு சாப்பிடுவதில்லை; குழந்தை பெற்ற பிறகும் சாப்பிடுவதில்லை.

அது என்ன, கர்ப்ப காலத்தில் மட்டும் மாங்காய் சாப்பிடுகிறார்கள்?

ஏனென்றால், கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தையை முழுக் குழந்தையாக மாற்றுவது கல்லீரலின் முக்கியமான வேலை. எப்பொழுது கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறதோ அப்பொழுது மருந்து, சத்துபானம் போன்றவற்றை நம் உடம்பு கேட்காது. கல்லீரலுக்கு அதிக வேலை ஏற்பட்டால் உடலில் ஆகாய சக்தி தீர்ந்து விடுவதால் நாக்கு என்ற மருத்துவர் நம்மிடம் புளிப்பு என்ற மருந்தைத்தான் கேட்பார். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் புளிப்பு கொடுக்காமல் இருந்தால் குழந்தைக்கு, குழந்தை வளாச்சிக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, நாக்குதான் மருத்துவர், சுவைதான் மருந்து! எனவே, எப்பொழுது புளிப்பு சாப்பிட வேண்டும் என்று நாக்கு கேட்கிறதோ அப்பொழுது அதைச் சாப்பிடுவதன் மூலம் ஆகாய சக்தியை என்றுமே சீராக வைத்துக் கொள்ள முடியும். அதைச் சார்ந்த கண், கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளையும் நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியும்!

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, சோறு, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்புச் சுவை அதிகம் உள்ளது.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
காரச் சிகிச்சை

காரம் நாக்கில் பட்டதும் நாக்கு அதைக் காற்றுப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது. காற்றுப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல். இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம்.

மூக்கும் நுரையீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். மூக்கைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நுரையீரல் போலவும், நுரையீரலைச் சிறிதுபடுத்திப் பார்த்தால் மூக்குப் போலவும் தோன்றும். மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதே போல், பெருங்குடலுக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

மலச்சிக்கல் ஒருவருக்கு இருக்குமானால் அவரின் நுரையீரலில் குறை உள்ளது என்று பொருள். அதாவது, அவர் சுவாசிக்கும் காற்றில் குறை உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் கெட்டுப்போனால் மட்டுமே மலச்சிக்கல் வரும். அதே போல, மலச்சிக்கல் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங், நெஞ்சுச் சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். ஆக மூக்கு, நுரையீரல், பெருங்குடல் மூன்றுக்கும் தொடர்புள்ளது. மலச்சிக்கலைச் சரி செய்வதன் மூலமாக ஆஸ்துமாவைக் குணப்படுத்தலாம். நுரையீரலுக்குச் சரியான காற்றைக் கொடுப்பதன் மூலமாக மலச்சிக்கல் நோயாளிகளையும் குணப்படுத்தலாம்.

துக்கமான செய்திகளைக் கேட்கும்பொழுது, “ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் உறைந்து நின்று விட்டேன்” என்று கூறுவோம். ஏனென்றால், துக்கம் என்ற உணர்ச்சி உடலிலுள்ள காற்றுப் பிராணனை அதிகமாகச் சாப்பிட்டுத் தீர்த்துவிடும்.

சிலருக்குத் தங்களுடைய நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ இறந்து விட்டால் அதையே நினைத்து நினைத்து துக்கப்படும்பொழுது அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங் நோய்கள் சீக்கிரமாக வந்துவிடும்.

மொத்தத்தில், காரத்திற்கும், காற்றுப் பிராணனுக்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும், துக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பந்தங்களைப் புரிந்து கொண்ட மருத்துவரால்தான் இந்த உறுப்புகளில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

இது போல உறுப்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரியாத மருத்துவர்கள் பல வருடங்களாக மருந்து மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த நோயும் குணமாகாது. ஆஸ்துமா நோயாளிகள், சில சமயங்களில் அதிகப்படியான மூச்சு வாங்கும்பொழுது காரமான ஊறுகாய், குறுமிளகு போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடனே அவர்களுக்கு அந்த ஆஸ்துமா தீவிரம் குறையும்.

ஆனால், மலச்சிக்கல் உள்ளவர்களும், ஆஸ்துமா உள்ளவர்களும் காரமான பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். கண்டிப்பாக இது ஒரு தவறான அறிவுரை!

யார் நுரையீரலுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்களுக்குக் காரம் தேவைப்படும். சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நுரையீரலில்தான் அதிக வேலை.

எனவே, நுரையீரல் உடலிலுள்ள காற்றுப் பிராணனைத் தீர்த்து விடும். அதனால், அவர்களது நாக்கு என்ற மருத்துவர் காற்றுப் பிராணன் வேண்டி அதிகமாகக் காரத்தைச் சாப்பிடத் தூண்டுவார். எனவே, உங்கள் நாக்கு எவ்வளவு காரம் கேட்டாலும், உங்கள் மனதிற்கு எவ்வளவு பிடித்திருக்கிறதோ அவ்வளவு காரத்தைத் தயவு செய்து சாப்பிடுங்கள்.

மலச் சிக்கலுக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, வீசிங் நோய்களுக்கும் பாட்டி வைத்தியத்தில் சின்ன வெங்காயம், கருப்பு மிளகு, துளசி இலை, கற்பூரவல்லி இலை, இஞ்சிச் சாறு போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம். இவை அனைத்தும் காரம் உள்ள பொருட்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்! அதற்காக ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாகக் காரம் சாப்பிட்டாலும் நோய் பெரிதாகும். அளவாகச் சாப்பிட வேண்டும். அதற்குத்தான் நாம் ஓர் அளவைக் கொடுத்துள்ளோம்.

உங்கள் நாக்கு எவ்வளவு காரம் தேவைப்படுகிறது என்று கூறுகிறதோ அதுதான் உங்களுக்கு அளவான காரம்.
ஒரே வீட்டில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு காரம் தேவைப்படும். எனவே, காரம் சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நோய் வரும் என்ற எண்ணத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்!


வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
இனிப்பு சிகிச்சை
இனிப்பு என்ற சுவை நாக்கில் படும்பொழுது சுவை மொட்டுக்கள் அதை மண் பிராணசக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரைப்பை, மண்ணீரல், உதடுகள். இனிப்புக்கும் கவலைக்கும் சம்பந்தம் உண்டு.

நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே, உதட்டில் வரும் நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் குணம் பெற முடியாது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதால் மட்டுமே தீர்வு காண முடியும்.

கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால் சாப்பிட மாட்டார்கள். பசிக்கவில்லை என்று கூறுவார்கள். ஆனால், உடன் இருப்பவர்கள் “நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறாய். சாப்பிடு, சாப்பிடு” என்று வற்புறுத்தி உணவைக் கொடுப்பார்கள். கவலை என்ற உணர்ச்சி உடலில் மண் சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொள்வதால் ஜீரணத்திற்கான சுரப்பிகள் சுரப்பதில்லை. அதனால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக இருக்கும்பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு, கவலை அதிகமாகும். எனவே, கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள்! எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள்! எப்பொழுது பசி என்ற உணர்ச்சி இருக்கிறதோ அப்பொழுது கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும் எதிரிகள்.

நாம் அனைவரும் குடும்பம், வியாபாரம், பணம், புகழ் போன்ற பல விஷயங்களைப் பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்குக் காரணம் வயிற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளாததுதான். வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்கிற உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபருக்குக் கோபம் வராது. ஞானிகள், முனிவர்கள் ஆகியோருக்குக் கோபம், பதற்றம், பயம், கவலை ஆகியவை வருவதில்லை. ஏனென்றால், அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அவ்வளவு தயவு செய்து சாப்பிடுங்கள்! முதலில் இனிப்பு ஒரு துண்டு சாப்பிடுங்கள்! உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, இரண்டாவது துண்டும் சாப்பிடுங்கள்! பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, மூன்றாவது முறையும் சாப்பிடுங்கள்! மூன்றாவது முறை இனிப்பைச் சாப்பிடும்பொழுது திகட்டல் ஏற்பட்டால் அதன் பிறகு சாப்பிடக் கூடாது! திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிடும்பொழுது அது உடலுக்கு நோயை ஏற்படுத்தும். எவ்வளவு இனிப்புச் சாப்பிட்டால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிடலாம். ஏனென்றால் நாக்குதான் டாக்டர்! சுவைதான் மருந்து! இனிப்பு என்ற மருந்தை நமது நாக்கு என்ற டாக்டர் கேட்கும்பொழுது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்! இப்படி இனிப்புச் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நோய் வரும்!

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது

நன்றி – ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
சுவை மருத்துவம் - கசப்பு, துவர்ப்பு சிகிச்சை


கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுக்கள் அவற்றை நெருப்புப் பிராணனாக (சக்தி) மாற்றி உடல் முழுவதும் அனுப்பி வைக்கின்றன.

நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இதயம், இதயத்தின் மேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு ஆகியவை. இதற்கான வெளி உறுப்பு நாக்கு. இதற்கான உணர்ச்சி மகிழ்ச்சி.

நம்மில் பலருக்குத் திடீரென மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே நெஞ்சு படபடக்கும்; வியர்வை வரும். இது எதனால் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி உடலிலுள்ள நெருப்பு சக்தியைச் சாப்பிட்டு விடுகிறது. உடலில் நெருப்பு சக்தி குறைவதால் இதயத்திற்குத் தேவையான சக்தி கிடைக்காமல் அது படபடக்க ஆரம்பிக்கிறது.

திடீரென நம்மை யாராவது மேடையில் ஏறிப் பேசச் சொன்னாலோ, அனைவர் மத்தியிலும் நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும்பொழுதோ, பள்ளிகளில் கல்லூரிகளில் திடீரென மேடை ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ இந்தப் படபடப்பு ஏற்படும். ஆக, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

நாக்கும் இதயமும் ஒரே வடிவத்தில் இருக்கும். இதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும்.

இக்காலத்தில் நம்மில் பலருக்குத் துணிவு கிடையாது. நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம். பல விஷயங்களில் நாம் துணிந்து எந்த வேலையும் செய்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்ளாததுதான். கசப்பான பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் துணிவுடையவர்களாக இருப்பதைப் பாருங்கள்!

இன்றைய குழந்தைகள் கோழைத்தனமாக இருக்கிறார்கள். யாருக்கும் துணிச்சல் இல்லை. காரணம், குழந்தைகள் யாரும் கசப்பு, துவர்ப்புச் சாப்பிடுவதே கிடையாது.

எனவே, நமது நாக்கு எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான, துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் முலமாக இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். துணிவும் பெற முடியும்.

பாம்பு கடித்தால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவும். உடலிலுள்ள அனைத்து செல்களும் பாம்பு விஷத்தை வெளியேற்றுவதற்காக இதயத்திடம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் சொல்லும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்பொழுது உடலிலுள்ள நெருப்பு சக்தி குறையும். எப்பொழுது நெருப்பு சக்தி குறைகிறதோ நாக்கு என்ற மருத்துவர் கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளைக் கேட்பார்.

பாம்பு கடித்தால் கொடுக்கும் மூலிகைகளின் பெயர் சிறியா நங்கை, பெரியா நங்கை. இந்த மூலிகைகள் மிகவும் கசப்பாக இருக்கும். அவற்றில் மருந்து இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றிலுள்ள கசப்புச் சுவையே நாக்குக்கு நெருப்பு சக்தி கொடுத்து, அதை இதயத்திற்குக் கடத்துவதன் மூலமாக இதயத்தை நன்றாக வேலை செய்ய வைத்து, உடலிலுள்ள விஷத்தை வெளியேற்றப் போதுமானவை.

எனவே, யாருக்காவது பாம்பு கடித்தால், சிறியாநங்கை, பெரியாநங்கை போன்ற மூலிகைகளோ இன்ன பிற விஷ முறிவு மருந்துகளோ அருகில் இல்லாவிட்டால், பாகற்காய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுங்கள். பாம்பின் விஷம் உடலில் இருக்கும்பொழுது பாகற்காய் சாப்பிட்டால் கசக்காது. பாகற்காயும், வேப்பிலையையும் நிறையச் சாப்பிட வேண்டும். எப்பொழுது நாக்கில் கசப்புத் தெரிகிறதோ, மகிழுங்கள்; உடலில் உள்ள விஷம் வெளியேறி விட்டது என்று.

நாக்குக்குத் தெரியும் எப்பொழுது எந்தச் சுவை வேண்டுமென்று. விஷம் வெளியேறிய பிறகு கசப்புச் சுவையின் தேவை தீர்ந்து விடவே பாகற்காய் கசக்க ஆரம்பிக்கிறது. எனவே, பாம்பு கடித்தால் முதலில் நமக்குத் தேவைப்படுவது தைரியம். இரண்டாவது, கசப்பு.

பாம்பு விஷத்தால் இறப்பவர்களை விட, பாம்பு கடித்துவிட்டதே என்கிற பயத்தால் இறப்பவர்களே உலகில் அதிகம். பாம்பு கடித்து விட்டது என்ற எண்ணம் மனதில் பயத்தை ஏற்படுத்தி, பயம் சிறுநீரகத்தைப் பாதித்து,

சிறுநீரகம் வேலையை நிறுத்தி விட்டால், அதன் பின் விஷத்தை வெளியேற்ற முடியாது. ஏனென்றால், பாம்பின் விஷத்தை வெளியேற்றுவது சிறுநீரகம்.
எனவே, பாம்பு மட்டுமில்லை, எந்த விஷப்பூச்சி கடித்தாலும் முதலில் நாம், நம் உடல் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்! அப்பொழுதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஒருவருக்குத் தோட்டத்தில் வேலை செய்யும்பொழுது பாம்பு கடித்து விட்டது. அவர் அதைப் பார்க்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் காலைப் பார்த்து, "பாம்பு கடித்தது போல் இருக்கிறதே" என்று கேட்டார். அதைப் பார்த்தவுடன் அவரும், 'ஆமாம்! இது பாம்பு கடித்த தடயம் போல் இருக்கிறதே' என்று நினைத்து, உடனே மயங்கிக் கீழே விழுந்து இறந்து விட்டார்! இது போல நிறையக் கதைகள் உள்ளன. பாம்பு கடித்த விஷம் அவரைக் கொல்லவில்லை. பாம்பு கடித்து விட்டது என்று அவருக்கு எப்பொழுது புரிந்ததோ அவர் மனம் பயத்தை உண்டு செய்து, பயம் சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீரகம் வேலையை நிறுத்தியதும் உயிர் பிரிந்து விட்டது.

எந்த விஷப்பூச்சி கடித்தாலும் நம் உடம்பிற்கே அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது நாக்கு எந்தச் சுவையைக் கேட்கிறதோ அதை உடனே தாராளமாகக் கொடுப்பதும், அதன் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நம்புவதும்தான்.
அதற்காகப் பாம்பு கடித்தவுடன் வேப்பிலையும், பாகற்காயும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டாம்! இது ஒரு தற்காப்பு வைத்தியம் மட்டுமே! மனதில் தீர்க்கமான துணிச்சலுடன் கசப்பைச் சாப்பிட்டால் கண்டிப்பாகப் பாம்பு விஷத்தை முறியடிக்கலாம்.

இருந்தாலும், பாம்பு கடித்தால் பாகற்காயைச் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கும் செல்லுங்கள்! ஏனென்றால், சில பாம்புகளின் விஷம் இந்தக் கசப்புக்கும் மீறி வேலை செய்ய வாய்ப்புள்ளது.

கோவில்களில் திருவிழாவின்போது முதுகில் கொக்கி போட்டுத் தேரை இழுப்பது, வாயில் அலகு குத்துவது, நாக்கில் அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது போன்றவற்றைச் செய்பவர்கள் முழு எலுமிச்சம்பழத்தை வாயில் வைத்துச் சாப்பிடுவார்கள். வேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். ஏன் அவ்வாறு சாப்பிடுகிறார்கள்?

ஏனென்றால் உடலுக்குக் காயம் ஏற்படும்பொழுது அந்த உறுப்புகளிலுள்ள செல்கள் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்பொழுது உடலில் நெருப்பு சக்தி தீர்ந்து போகும். நெருப்புச் சக்தி மீண்டும் நம் உடலுக்குத் தேவைப்படும் என்பதால் நாக்கு கசப்பைக் கேட்கிறது. எனவே அவர்கள் கசப்பான பொருட்களை மென்று சாப்பிடும்பொழுது அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

அதே நபர்கள் அடுத்த நாள் வீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது வேப்பிலையைக் கொடுத்துப் பாருங்கள். அவருக்கு அது கசக்கும்!
எனவே, கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொடர்புகளைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே உங்கள் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருந்துவர்கள்தான் ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து காலத்துக்கும் மருந்து, மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

பாகற்காய்,
சுண்டக்காய்,
கத்தரிக்காய்,
வெந்தயம்,
பூண்டு,
எள்ளு,
வேப்பம்பூ,
ஓமம்,
போன்றவற்றில் இந்த கசப்புச் சுவை மிகுதியாய் உள்ளது

தேங்காய் மற்றும் தேன் இவற்றை நம் உடல் கசப்பு சுவையாக எடுத்துக்கொள்ளும்.
வாழைக்காய்,
மாதுளை,
மாவடு,
மஞ்சள்,
அவரை,
அத்திக்காய்
போன்ற காய் வகைகளில் துவர்ப்புச் சுவை மிகுதியாய் உள்ளது.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.