சூரிய வணக்கம்!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
சூரிய நமஸ்கார பயிற்சியை யாரெல்லாம் செய்யலாம், யார் செய்யக்கூடாது, எப்போது செய்யலாம், எப்படி செய்யலாம்? கேள்விகள் மட்டுமல்ல, அதற்கான விடைகளும் இதோ உங்களுக்காக...
* ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அனைவரும் தவறாமல் தொடர்ந்து செய்யலாம். சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து செய்வது நல்லது. காலையில் வெறும் வயிற்றுடன் செய்வது மிகவும் நல்லது.
* தனியாகவோ, ஒரு குழுவாகவோ செய்யலாம்.
* ஒரு ஜமுக்காளம், ஒரு துண்டு, நான்கு சதுர மீட்டர் அமைதியான இடம் வேண்டும்.
* சூரியனை பார்த்துக் கொண்டே செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், கிழக்கு நோக்கி நின்றுக் கொண்டு, சூரியனை மனதில் கற்பனை செய்து கொண்டு செய்ய வேண்டும்.
* கர்ப்பினி பெண்கள், முதல் மூன்று மாதம் வரை செய்யலாம். குழந்தை பிறப்பிற்கு பின், டாக்டரின் வழிகாட்டுதல்படி மீண்டும் துவக்கலாம்.
* ரத்தக் கொதிப்பு, தண்டுவட பிரச்னை மற்றும் குடலிறக்க நோய் உள்ளவர்கள், மருத்துவர் அறிவுரைப்படி செய்யலாம்.
* மற்ற உடற்பயிற்சிகள் மற்றும் யோகா ஆகியவற்றுக்கு முன், சூரிய நமஸ்காரம் செய்வது ஒரு, 'வார்ம் அப்' போல் சோம்பலை
துரத்தி விடும்.
* முதன் முதலில் பழக விரும்புவோர், முதல் ஒரு வாரமாவது, நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது.
* 12 இயக்கங்களையும், 20 நொடியில் முடிக்க முயல வேண்டும். காலையில் ஐந்து நிமிடம், மாலையில் ஐந்து நிமிடம் போதுமானது.
* 12 ஆசனங்களின் வரிசையில் மொத்தம், எட்டு ஆசனங்கள் உள்ளன.

01. இறைவணக்க ஆசனம்
இரண்டு கால்களையும் நன்றாக சேர்த்து, நேராக நிமிர்ந்து நின்று, கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து, நமஸ்காரம் செய்வது போல கைகளை ஒன்றாக சேர்த்து, மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின், மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.

02. கைகளை உயரே துாக்கி, பின்னால் வளையும் ஆசனம்
மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேலே துாக்கி, இடுப்பை சற்று பின்னே வளைத்து, இரு கைகளையும், காதுகளை ஒட்டி இருக்கும்படி செய்யவும். வானத்தை எட்டிப்பிடிக்க முயலும் பாவனை போல், இருக்க வேண்டும்.

03. முன்னோக்கிய நிலையில், குனிந்தவாறு செய்யும் ஆசனம்
மூச்சை வெளியே விடும்படியாக கைகள் இரண்டையும், தரையை தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும். தலை வளைந்து, மூக்கும், நெற்றியும் முழங்காலை முட்ட முயலட்டும். முழங்கால் வளையாமல் செய்ய வேண்டும்.

04. குதிரையேற்றம் சார்ந்த ஆசனம்
மூச்சை உள்ளிழுத்தபடி, வலது காலை பின்னோக்கி வைத்து, இடது காலை முன்னோக்கி வைத்து, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை மேலே துாக்கி, சில வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும்.

05. நான்கு கைகள் உள்ளது போல் ஆசனம்
மூச்சை வெளியே விட்டபடி, இரண்டு கால்களை பின்னே வைத்தும், இரண்டு கைகளை முன்னே வைத்தும், இடுப்பை மேலே துாக்கி,
முக்கோண வடிவத்தில் முழு உடம்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

06. எட்டு அங்கங்கள் ஆசனம்
மூச்சை உள்ளிழுத்து, தரையில் சாஷ்டாங்கமாக படுத்துக் கொள்ள வேண்டும். இரு கால் விரல்கள், இரு முழங்கால்கள், மார்பு, நெற்றி, இரு உள்ளங்கைகள் ஆக எட்டு அங்கங்களும், தரையை தொடும்படி இருக்க வேண்டும்.

07. நல்ல பாம்பு படம் எடுப்பது போல் ஆசனம்
மூச்சை உள்ளிழுத்து, தரையில் குப்புறப்படுத்து, தலையை துாக்கி, முதுகை பின்னால் இடுப்பின் பலத்தில் வளைக்க வேண்டும். முதுகு தண்டு இப்போது வெளிப்புறமாக வளைகின்றது. உடலின் பளு முழுவதும் உள்ளங்கைகளிலும், கால் விரல்களிலும் இருக்கும்.

08. முகம் கீழ் நோக்கி பார்க்கும் ஆசனம்
இது, ஐந்தாம் நிலை போன்றதே. மூச்சை உள்ளே நிறுத்தி, இடுப்பை உயர்த்தி, கைகளை தரையில் நன்கு ஊன்றி, முழு ஓய்வும், தளர்ச்சியும், நாடி, நரம்புகளுக்கும் கொடுக்க வேண்டும்.

09. குதிரையேற்றம் சார்ந்த ஆசனம்
இது, நான்காம் நிலை சார்ந்ததே. கால்கள் மட்டும் மாறியிருக்கும். வலது காலை முன்னால் கொண்டு வருவதால், நாபிச் சக்கரம், பால் கோளங்கள், விந்து பைகள் சரிவர இயங்கும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே செய்ய வேண்டும்.

10. முன்புறம் குனிந்து தரை நோக்கும் ஆசனம்
இது, மூன்றாம் நிலை போன்றதே. கைகள், பாதங்களுக்கு பக்கத்தில்; ஆனால், சற்று முன்னால் இருக்கட்டும். மூச்சை வெளியில் விட்டபடியே செய்ய வேண்டும்.

11. உயர்த்தப்பட்ட கைகளுடன் ஆசனம்
இது, இரண்டாம் நிலையே. மூச்சை நன்கு உள்ளிழுத்தப்படியே செய்ய வேண்டும்.

12. இறைவணக்க ஆசனம்
முதல் நிலையே, இறுதியிலும் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடும்படி செய்ய வேண்டும்.

இந்த, 12 நிலைகளும் சேர்ந்து ஒரு நமஸ்காரம்.
'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போது, மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். பீஜ மந்திரங்கள் ஆறு; சூரியனின் பெயர்கள் 12. இவற்றுடன், 'ஓம்' சேர்த்து சத்தமாக உச்சரித்தபடியே இந்த சூரிய நமஸ்காரத்தை செய்வது, நம் மனதை தட்டி எழுப்புவதற்கும், அதற்கு உரமூட்டுவதற்கும் உதவும்.
ஆசனம், பிராணாயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி சாதனாவாக
உள்ள இந்த சூரிய வணக்க முறையை, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டு, தினமும், 10 நிமிடங்கள் ஒதுக்கினால், நம் ஊனுடல் பிரணவ தேகமாக மாறி அமையும் என்பது நிச்சயம். சென்றதை பற்றிய கவலையும், வரப்போவதை பற்றிய அலட்டலும் இன்றி மனம் அமைதியடைகிறது.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
good shairng sir.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.