செயற்கை vs இயற்கை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
செயற்கை VS இயற்கை


கோடையை கூலாக்க...
கோடையில் அனைவரும் நாடுவது பாட்டில் குளிர்பானங்களைத்தான். அதைவிட, அதிக ஊட்டச்சத்து மிக்க இயற்கை பானங்கள் நம் ஊரில் நிறைய உள்ளன. குளிர்பானம் மற்றும் இயற்கை பானங்களில் உள்ள நன்மை தீமைகளைத் தெரிந்துகொள்வோமா...

*டயட் குளிர்பானங்களும் தீங்குதான். ஏனெனில், இதில் செயற்கை சர்க்கரையான அஸ்பார்டேம் (Aspartame) சேர்க்கப்படுகிறது. இதனால் வலிப்பு, மூளையில் கட்டி, ஹைப்பர்ஆக்டிவ் பிரச்னைகள், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

*சோடாவில் உள்ள பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை இரண்டும் இணைந்து பல்லின் எனாமலைப் பாதிக்கின்றன.

*கணையப் புற்றுநோய் வருவதற்கும், பேஃட்டி லிவர் உள்ளிட்ட கல்லீரல் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

*காஃபின் அதிகமான பானங்களை அருந்தும்போது மார்பகப் புற்றுநோய் முதலான சில புற்றுநோய்கள், சீரற்ற இதயச் செயல்பாடு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

*செயற்கை குளிர்பானங்களில் இருக்கும் அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களோடு கலக்கும்போது, இரண்டும் வினைபுரிந்து இரைப்பையைப் பாதிக்கின்றன. செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

*ஒரு பாட்டில் சோடாவில் (200 மி.லி) 10 டீஸ்பூன் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது.

*கார்போனேட்டட் பானங்களைக் கர்ப்பிணிகள் அருந்தினால், அதில் உள்ள நச்சுக்கள் காரணமாகக் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மொத்தத்தில் எந்த விதத்திலும் ஒரு சதவிகிதம்கூட உடலுக்கு நன்மையைத் தராத உணவுதான் செயற்கை குளிர்பானங்கள்.

*பாஸ்பாரிக் அமிலம் கார்போனேட்டட் குளிர்பானங்களில் அதிக அளவு இருக்கிறது. இது, உடலில் கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது. இதனால், ஆஸ்டியோபொரோசிஸ் முதலான எலும்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இளநீர்

இயற்கை பானங்கள் மூலம் உடலுக்குப் பல்வேறு சத்துக்கள் கிடைப்பதுடன், தாகம் தணிந்து உடலும் குளிர்ச்சி அடைகிறது.

எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. நீரிழப்பின்போது வெளியேறும் தாதுஉப்புக்கள் பற்றாக்குறையைப் போக்குகிறது.

சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றைத் தடுக்கும்.

உடலுக்கு உடனடி எனர்ஜி தருகிறது.

100 மி.லி இளநீரில் 250 மி.கிராம் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

கால்சியம், கந்தகம், பாஸ்பரஸ், குளோரைடு, இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன.

தர்பூசணி

92 சதவிகிதம் தண்ணீர் நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ, பி, சி நிறைந்தது.

லைக்கோபீன் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

இதய நோய்கள், ஆஸ்துமா, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

நீரில் கரையும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

நீர் இழப்புப் பிரச்னையை உடனடியாகச் சரிசெய்யும்.

மோர்

கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

வயிற்றுப்புண்களை ஆற்றுகிறது. அமிலத்தன்மை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

வயிற்றில் இருக்கும் மியூகஸைப் பாதுகாத்து, இரைப்பை சுவரில் சேரும் கொழுப்பு எண்ணெய்களை வெளியேற்றுகிறது.

நீர் வறட்சியைப் போக்கும், சிலருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்னை இருக்கும், அவர்களுக்கு மோர் உகந்தது.

நுங்கு - பதநீர்

உடலைக் குளிர்ச்சியாக்கி, எரிச்சலான உணர்வைப் போக்கும்.

சிறுநீர் கடுப்பு, எரிச்சல், வலியைக் குறைக்கும்.

தோல் செல்களைப் பாதுகாக்கும், வியர்க்குறு தடுக்கும்.

வாந்தி உணர்வைப் போக்கும், ஆன்டிஆ க்ஸிடன்ட் நிறைந்தது.

அல்சர், கல்லீரல் தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு மிகுந்த பலன் தரும்.

நுங்கை தோலில் தேய்த்தால், தோல் செல்கள் புத்துணர்ச்சி அடையும். உலர் சருமம் உள்ளவர்களுக்குப் பயனளிக்கும்.

துத்தநாகம், தயமின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம் நிறைந்துள்ளது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Very nice comparison la. Thanks for sharing ji :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.