சேற்றுப்புண் குணமாக...

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சேற்றுப்புண் குணமாக...

ருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

அம்மான் பச்சரிசி இலையை வெறுமனே அரைத்துப் பூசலாம்.

மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.

வேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம்.

மேற்சொன்ன நான்கில் ஏதேனும் ஒன்றைச் செய்து, சேற்றுப்புண்ணில் பூசுவதன் மூலமாக குணமாகலாம்.

தலைவலி, சளி: விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால்... மூக்கடைப்பு, நாசி ஒழுகுதல், தலைவலி போன்றவை சரியாகும். தும்பை இலைச்சாற்றை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் தேங்கியிருக்கும் நீர், கபால நீர், மண்டைக்குத்தல், மண்டையிடி போன்றவை குணமாகும். தும்பை இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் சளி விலகும். 20 தும்பைப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால்... தலைபாரம், ஜலதோஷம் போன்றவை சரியாகும்.

மெட்ராஸ் ஐ: மஞ்சள்பொடியை நீரில் கலந்து மெல்லிய பருத்தித் துணியில் நனைத்து நிழலில் காயவைத்து கண்களை துடைத்து வருவதன் மூலம் `மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் வலி, கண் சிவத்தல் போன்றவை சரியாகும்.

சொறி, படை: மஞ்சளுடன் வேப்பங்கொழுந்தை சேர்த்து அரைத்துப் பசையாகக் குழைத்து பூசி வந்தால்... சொறி, அரிப்பு, படை மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
 
Last edited:

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#3
தகவலுக்கு மிக்க நன்றி மேடம்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
தற்காலத்திற்கு தேவையான பதிவு . நன்றி .
 

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#5
useful share...TFS :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.