சைக்கிள் ஓட்டுவோம்!!

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,755
Location
Chennai
#1
சைக்கிள் ஓட்டுவோம்

உலகம் முழுவதுமே கார், பைக்குகளுக்கு பதிலாக சைக்கிள்களை பயன்படுத்தும் திட்டம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதில்லை. இரண்டு, உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதால் மரணம் நெருங்குவதில்லை. ஒரே ஒரு நகரில் மட்டும் ஆண்டுக்கு 9000 டன் நச்சு வாயு வெளிப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12 பேரின் இறப்பும் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனின் போரீஸ் பைக்ஸ் சைக்கிள் திட்டம் மிகவும் பிரபலம். 400 ரயில் நிலையங்களில் உள்ள 6 ஆயிரம் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். மெட்ரோ ரயிலில் பயணம் செய்து இறங்கியபிறகு, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல, இந்த சைக்கிள்களை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையை முடித்த பிறகு வேறு எந்த ரயில் ந¤லையம் பக்கமோ அங்கு விட்டு விடலாம். இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோன்ற திட்டம்தான் ஸ்பெயினின் பார்சலோனாவில் இயங்கி வருகிறது.

1.82 லட்சம் உறுப்பினர்கள். சராசரியாக ஒவ்வொரு உறுப்பினரும் தினமும் 3 கி.மீ. வரை சைக்கிளை ஓட்டுகிறார். அதாவது 14 நிமிடங்கள். இதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். சைக்கிள் திட்டத்தால் இந்த நகரில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பது, சாலை விபத்துகள் குறைந்திருப்பது மற்றும் காற்று மாசுபடுவது குறைவது ஆகியவற்றால் இறப்பு விகிதமும் குறைந்திருக்கிறது. அதாவது மொத்தத்தில் ஆண்டுக்கு 12 பேர் இறப்பது தடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு.

ஒவ்வொருவரும் வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதாவது வாரத்துக்கு 5 நாட்களில் தினமும் 30 நிமிட நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது அவசியம் என்கிறது. சைக்கிள் திட்டத்தால் இது சாத்தியமாகிறது. அனைத்து பெரிய நகரங்களிலும் காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதும் இதுபோல் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைக் கொண்டு வருவதும் அவசியம். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறைந்து, மக்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Dinakaran

Ganga
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.