சைனஸ் பிரச்சனை - Remedy for Sinus

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,847
Likes
2,776
Location
Bangalore
#1
[h=3]சைனஸ் பிரச்சனை[/h]குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் உடலின் வெப்பத்தன்மையினால் ஜலதோஷம் ஏற்படும்.சிலருக்கு உடனே சரியாகிவிடும் ஆனால் சிலருக்கோ நீண்ட நாட்கள் இருந்து, அது சைனஸாக மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க சில வீட்டு மருந்து இருக்கின்றன.சைனஸ் பிரச்சனையை போக்க...* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம் போன்றவை சரியாகும்.* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை சுலபமான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம். மேலும் ஃப்ரிட்ஜ்ல் வைத்த பொருட்களை உடனே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தினமும் 10 நிமிடம் சூரிய ஒளியில் நிற்பது சைனஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.