சைவம் என்பது சைவமே அல்ல!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சைவம் என்பது சைவமே அல்ல!
ஷாக் ரிப்போர்ட்
‘‘சைவ உணவுகளில் அசைவம் கலப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் அதிகமான புரதம், கொழுப்பு போன்றவை மனிதர்களுக்குப் பலவிதமான நோய்களை ஏற்படுத்துபவை’’ - அச்சுறுத்தும் தகவலுடன் ஆரம்பிக்கிறார் ‘வீகன் டயட்’ என்ற பால்
இல்லாத உணவுமுறையைப் பிரபலப்படுத்தி வரும் மருத்துவர் சரவணன்.‘‘இன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதற்கு அசைவ
உணவுகள், பால் பொருட்கள் காரணமாக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட காலின் காம்பெல்லின் என்ற மருத்துவர் ‘த சைனா ஸ்டடி’ என்ற நூலில் இது குறித்து விரிவாகவிளக்கியிருக்கிறார்.


டாக்டர் மெலனி ஜாயின் என்பவர், ‘இயல்பிலேயே மனித உடல் அமைப்பும் உடல் இயக்கமும் அசைவ உணவுகளுக்கு ஏற்றதில்லை. மாமிசம் உண்ணும் விலங்குகளைப் போல கூர்மையான பற்களோ, நகங்களோ, தாடை அமைப்போ மனிதர்களுக்கு இல்லை. அதோடு மனித இரைப்பையின் அளவு,அமிலத் தன்மை, சிறுகுடலின் நீளம் ஆகியவையும் அசைவ உணவுகளை ஏற்பதற்கு ஏதுவாக அமைக்கப்படவில்லை. நம் உமிழ்நீரில் காணப்படும் காரத்தன்மையும் அசைவ உணவை ஜீரணிப்பதற்கு ஏற்றதல்ல.

மனோதத்துவரீதியாகப் பார்த்தாலும் அசைவ உணவுகள் நமக்கு ஏற்றதல்ல. இது தவிர, உணவுக்காக விலங்குகளோ, பறவைகளோ கொல்லப்படுவதை பார்த்துப் பதற்றமடையாதவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். பழக்கத்தினால் மட்டுமே மனிதர்கள் அசைவ உணவை உண்டு வருகின்றனர்’ என்று கூறியிருக்கிறார்’’ என்கிற சரவணன், வீகன் டயட் பற்றியும் கூறுகிறார்.

‘‘இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றோடு மிருகங்களிடமிருந்து பெறப்படும் பால், நெய், வெண்ணெய், தயிர், மோர், பாலாடைக்கட்டி, தேன் போன்ற எந்தவித உணவையும் தவிர்ப்பதே வீகன் டயட். தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவுகளையே அடிப்படையாகக் கொண்டது இது.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வீகன் டயட்டில் மாவுச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பைட்டோ நியூட்ரியன்ட் சத்துகள் போன்றவை நிறைந்துள்ளன.

இந்த உணவு முறையைப் பின்பற்றிஎளிதாக பருமனைக் குறைக்கலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களை இந்த உணவு முறையின் மூலம் தவிர்க்க முடியும். ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தாலும் பாதிப்பிலிருந்தும் மீண்டு வர முடியும். இதை பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலைநாடுகளில் பலரும் இந்த உணவு முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் கூட வீகன் டயட்டை விரும்பிப் பின்பற்றுகின்றனர். நடிகை அமலாவும் வீகன் டயட் பின்பற்று பவர்தான்...’’ என்கிறவர், அடுத்து சொல்கிற தகவல்கள், 101 சதவிகித சைவம் என பெருமை பேசுபவர்களுக்கான ஷாக் நியூஸ்!

‘‘சைவம் என்கிற பச்சைக் குறியீட்டுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில்தான் அசைவ வகைகளை அதிகம் கலப்படம் செய்கிறார்கள். சிப்ஸ், நூடுல்ஸ், ஐஸ்க்ரீம், பேக்கரி உணவுகளில் அசைவம் கலக்கப்படுகிறது. சில இனிப்புமிட்டாய்கள் மற்றும் ஜெல்லி வகைகளிலும் மிருகங்களிடமிருந்து பெறப்படும் ஜெலட்டின் போன்ற அசைவப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

மாட்டின் குடலில் இருந்து எடுக்கப்படும் மாமிசத்தைத்தான் வெள்ளித்தாள் (Silver Varakh ) என்ற பெயரில் இனிப்புகளின் மேல் பூசுவதற்குப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆன்டி கேக்கிங் ஏஜென்ட்டான கால்சியம், ஸ்டியரேட், போன் பாஸ்பேட் போன்றவை வெள்ளை சர்க்கரை, உடனடி பவுடர்கள் ஆகியவற்றில் கலக்கப்படலாம். ஏ-120 என்றழைக்கப்படும் கார்மைன் எனும் சாயம் ஒரு வகைப் பூச்சி இனத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த சாயம் குளிர்பானங்களில் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. வெனிலா நறுமணத்துக்காக காஸ்டோரியம் என்ற அசைவப் பொருள் துரித உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மிரிஸ்டிக் ஆசிட், லார்ட் போன்றவை பேக்கரி உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து தயாரிக்கப்படும் லூட்டின், சில ரெடிமேட் உணவுகளில் நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. மீன், இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஈ-631 சுவையூட்டியாகவும், கேஸின், லாக்டோஸ், வே புரோட்டீன் போன்றவை உடனடி சத்துபானங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. லேக்டிக் ஆசிட்டை ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்...’’

சைவ உணவுகளில் அசைவம் கலந்திருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

‘‘பொதுவாக அசைவக் கலப்பினை லேபிள்களில் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், பல அசைவப் பொருட்கள் மறைமுகமாகவே கலக்கப்படுவதால் குறிப்பிடப்படுவதில்லை. இதனால், வெளிப்படையாகக் கண்டுபிடிப்பது சிரமம்தான். பாக்கெட் உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் துரித உணவுகளையும் தவிர்த்துவிடுவதே சிறந்த வழி. இவ்வகை உணவுகளில்தான் அசைவக் கலப்படம் அதிகம். ஆரோக்கியம் தரும் பழங்கள், கீரைகள், முழுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை உண்பது இன்னும் சிறந்த வழி!’’

உணவியல் நிபுணர் புவனேஸ்வரி ஷங்கர் என்ன சொல்கிறார்?

‘‘சைவ உணவுகளில் அதிகம் கலக்கப்படுவது முட்டைதான். குறிப்பாக பேக்கரி உணவுகளில் அதிகம் கலக்க வாய்ப்பு இருக்கிறது. கேக்வாங்கினாலும் சரி, புட்டிங் வாங்கினாலும் சரி... ‘ப்யூர் வெஜிடேரியனா’ என்று கேட்டுத்தான் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருக்கும் கொடுப்பது போல கொடுப்பார்கள்.

சூப் வகைகளில் கூட ஸ்டாக் (ஷிtஷீநீளீ) என்று சொல்கிற எலும்புகள், கோழி இறைச்சியை வேக வைத்த தண்ணீர் கலக்கப்படுகிறது. இதை சுவைக்காக சேர்ப்பார்கள். சூப் சாப்பிடும்போதும் வெஜிடேரியன் சூப் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டால்தான் உண்டு. அசைவக் கலப்பு உடல்ரீதியாக சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது.

விரதம் இருக்கிறவரோ, அசைவத்தை விரும்பாதவரோ சாப்பிட்ட பிறகு அது அசைவம் என்பது தெரிந்தால் மனரீதியாக வருத்தப்படுவார்கள். சுத்தமான சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களால் இதுபோல் அசைவக் கலப்பு ஏதும் இருந்தால் அந்த வித்தியாசத்தை ஓரளவு கண்டுபிடித்துவிட முடியும். ஆனாலும், கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது நம்முடைய கடமைதான்...’’

அசைவக் கலப்பைக் கண்டிபிடிப்பது எப்படி?

மறைமுகமாக அசைவம் கலப்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை. அதிகாரப்பூர்வமாகக் கலப்படம் செய்யும் சில நிறுவனங்கள் அதை மறைமுகமாக ணி ழிuனீதீமீக்ஷீs என்ற குறியீடாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த எண்களை வைத்து ஓரளவு கண்டுபிடித்து தவிர்க்க முடியும்.

120 - காக்கினியல் என்ற பூச்சியினத்திலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு நிறமூட்டி இது. குளிர்பானங்கள், ஜாம், சீஸ் போன்றவற்றில் கலக்கப்படுகிறது.

153 - கார்பன் ப்ளாக் என்றழைக்கப்படும் இது, விலங்கிலிருந்து பெறப்படும் நிறமூட்டி.

161ஜி - காந்தாக்ஸாந்தின் என்பது மீன் மற்றும் முதுகெலும்பற்ற விலங்குகளிடமிருந்து பெறப்படுகிறது. இதுவும் நிறத்துக்காகப் பயன்படுகிறது.

252 - பொட்டாசியம் நைட்ரேட் என்பது விலங்குகளின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டு உணவுப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
பால் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் லாக்டிக் ஆசிட் 325, 326, 327 என்று குறிப்பிடப்படுகிறது. இவை ஆன்டி ஆக்சிடன்டுகளாக குளிர்பானங்களிலும் டின் உணவுகளிலும் கலக்கப்படுகிறது.

322 - லெஸிதின்ஸ் என்பது மஞ்சள் கருவிலிருந்து எடுக்கப்பட்டு உணவு குழைவாகச் சேர்க்கப்படுகிறது.

422 - க்ளிசரால் என்பது விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டு, இனிப்புக்காக சேர்க்கப்படுகிறது.

430 முதல் 436 வரை குறிப்பிடப்படும் பாலி ஆக்ஸி எத்திலீன், விலங்குகளிலிருந்து பெறப்பட்டு உணவுப் பொருட்களைக் குழைவாக்கவும் ஒரே வடிவத்தில் வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

441 - விலங்குகளின் தோல் மற்றும் குளம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின், பால் உணவுப்பொருட்களிலும் இனிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

442 - விலங்கு கொழுப்பிலிருந்து வரும் அம்மோனியம் பாஸ்பேட்டிடைட்ஸ் குழைவாக்கப் பயன்படுகிறது.

470 ஏ மற்றும் 470 பி - சோடியம், பொட்டாசியம், கால்சியம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதுவும் விலங்குகளிடமிருந்து பெறப்படுபவையே. இவை கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

471 - உணவுப் பொருட்களை குழைவாக்குவதற்காக விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் மோனோ அண்ட் டைகிளிசிரைட்ஸ். இதே போல் உணவுப்பொருட்களைக் குழைவாக்குவதற்காகப் பயன்படும்

472ஏ முதல் 472எஃப் வரையும், 473, 474, 475, 476, 477, 478, 479 பி மற்றும் 481, 482, 483 ஆகியவையும் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டு உணவுப் பொருட்களைக் குழைவாக்கப் பயன்படுகின்றன.

491, 492, 493, 494, 495 - விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்பட்டு புளிப்பூட்ட ஸ்டீரிக் அமிலமாக மாறுகிறது.

542 - போன் பாஸ்பேட் கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

570 மற்றும் 572 - இதுவும் புளிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டீரிக் வகை அமிலம்தான்.

585 - பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் நிறமூட்டி இது.

631, 635, 640 - சுவையூட்டியாகப் பயன்படும் சோடியம் வகையைச் சேர்ந்த பொருட்கள். இந்தப் பொருட்கள் மீன், விலங்குகள், ஜெலட்டின் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

901, 904 - உணவுப் பொருட்களை அலங்கரிக்கப் பயன்படுபவை. பூச்சியினங்களிலிருந்து இவைதயாரிக்கப்படுகின்றன.

910, 920, 921 - விலங்குகளின் முடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டு சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. எல் சிஸ்டின் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

966 - லாஸிட்டோல் என்ற பால் பொருள், இனிப்பு சேர்க்கப் பயன்படுகிறது.

ஐஸ்க்ரீமில் மாட்டுக் கொழுப்பு?


மாட்டு இறைச்சி விற்பவர்கள் கறியோடு விற்பது போக ஜவ்வு, கால் குளம்பு, எலும்புகளை சேகரித்து எலும்பு பவுடர் தயாரிப் பவர்களிடம் விற்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே இதுபோல இருபதுக்கும் அதிக தொழிற்சாலைகள் இயங்குவதாகக் கூறுகிறார்கள்.

இவர்கள் இந்த இறைச்சி பொருட்களைப் பதப்படுத்தி பவுடராக்கி, கேக் வகைகள், குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தருவதாகச் சொல்லப்படும் பவுடர்களில் கலந்துவிடுகிறார்கள். கால்சியம் சத்து கொண்ட உணவு, புரதம் கொண்ட உணவு வகைகள் எல்லாம் இப்படி வருபவைதான். கோழி, ஆடு, பன்றி இறைச்சிகளும் இதுபோல கலக்கப்படுவது சாதாரணமாம்.

இதை வெளிப்படையாக சொன்னால் அசைவ விரும்பிகள் கூட அருவெறுப்பு அடைவார்கள், விற்பனை பாதிக்கப்படும் என்பதாலேயே வியாபாரிகள் சொல்வதில்லை. இந்த மிருகங்களின் கொழுப்புகள் மாத்திரைகள், சிரப்புகளையும் விட்டு வைக்காமல் கலந்துவிடுகின்றன. மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின்கள்தான் மாத்திரைகளில் உறையாக இருக்கின்றன. சில நாடுகள் இந்த வகை மாத்திரைகளுக்குத் தடைவிதித்துள்ளன.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.