சொரியசிஸ் - Psoriasis

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சொரியசிஸ்ருமத்தில் சிறிது, செதில்செதிலாகக் காணப்பட்டாலோ, சருமத்தில் ஏதேனும் சிறிய மாறுதல் தென்பட்டாலோ, அது சொரியாசிஸ் பிரச்னையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது அதிகரித்திருக்கிறது. நிறையப் பேர் இந்தப் பிரச்னைக்கு ஆளாவதும் இதற்கு ஒரு காரணம். உலக அளவில், 100-ல் இரண்டு முதல் நான்கு பேருக்கு சொரியாசிஸ் பிரச்னை உண்டாகிறது. சொரியாசிஸ் பிரச்னைக்கு என்ன தீர்வு... எங்கே சிகிச்சை பெறுவது போன்ற பொதுவான விவரம்கூட தெரியாமல், போலி மருத்துவர்களிடம் பணத்தைத் தொலைப்பவர்கள்தான் இங்கே அதிகம். சொரியாசிஸ் எப்படி ஏற்படுகிறது, தடுப்பது எப்படி போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வோமா?

சொரியாசிஸ் என்பது என்ன?

சரும செல்களில் ஏற்படும் மாற்றம்தான் சொரியாசிஸ். நமது தோலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்படாதபோது, தோலில் உள்ள செல்கள் மிக விரைவாக முதிர்ச்சி அடையும். பொதுவாக, நமது சரும செல்களின் வாழ்க்கை 28 நாட்கள்தான். சருமத்தில், 28 நாட்களுக்கு ஒருமுறை பழைய செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் உருவாகும். இந்த சுழற்சி மூன்று நான்கு நாட்களிலேயே நடைபெற்றால், தோல் செல்கள் முழுமையான முதிர்ச்சித்தன்மையை அடைந்திருக்காது. அதனால் தோல் தடித்து, செதில் செதிலாக மாறும். இதுதான் சொரியாசிஸ்.

பொதுவாக கை, கால் மூட்டுப் பகுதிகள், தலை, இடுப்புக்குக் கீழ் பகுதி, முதுகு போன்றவற்றில் சொரியாசிஸ் அதிகமாக ஏற்படும். சொரியாசிஸ் பிரச்னையை பெரும்பாலும் மருத்துவர்கள் பார்த்ததுமே கண்டுபிடித்துவிடுவார்கள். பயாப்ஸி டெஸ்ட் தேவைப்படாது. இந்தப் பிரச்னை ஆண், பெண் இருபாலரையும், எந்த வயதிலும் தாக்கும்.


சொரியாசிஸ் பரம்பரை வியாதியா?

ஆம். சொரியாசிஸ் பிரச்னை வருவதற்கு மரபணுக் கோளாறு ஒரு முக்கிய காரணம்.சொரியாசிஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்களில் பெரும்பாலும் மரபுவழியாக வருகிறது. சொரியாசிஸ், ஒரே ஒரு மரபணுக் கோளாறால் வரக்கூடிய நோய் அல்ல. ஏறக்குறைய, 25 வகையான மரபணுக்கள் சொரியாசிஸ் பிரச்னைக்குக் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாகவும் மரபணுக்கள் தூண்டப்பட்டு சொரியாசிஸ் ஏற்படுகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு சொரியாசிஸ் பிரச்னை இருந்தால், மற்றவர்களுக்கு வருமா?
அம்மா, அப்பா யாராவது ஒருவருக்கு சொரியாசிஸ் பிரச்னை இருந்தால், குழந்தைக்கும் எதிர்காலத்தில் சொரியாசிஸ் பிரச்னை வருவதற்கு 10 - 16 சதவிகித வாய்ப்பு உள்ளது.

சொரியாசிஸ் பிரச்னையை அதிகப்படுத்தும் காரணிகள் என்னென்ன?
புகைப்பழக்கம், ஆல்கஹால், உடல்பருமன், மனஅழுத்தம், குளிர்காலம், தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகள் காரணமாக சிலருக்கு சொரியாசிஸ் வருகிறது.

சொரியாசிஸ் ஒரு தொற்றுநோயா?
இல்லை. ஒருவரைத் தொடுவதால் சொரியாசிஸ் நோய் பரவாது. நம் சமூகத்தில் சொரியாசிஸ் பற்றி நிலவும் தவறான புரிதல்களில் இதுவும் ஒன்று. தவறானமுறையில் உடலுறவு கொண்டவர்களுக்குத்தான் சொரியாசிஸ் பிரச்னை வருகிறது என்பதும் மூடநம்பிக்கையே. சொரியாசிஸ் பிரச்னைக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் இல்லை. சொரியாசிஸ் பிரச்னை இருப்பவர்களின் அருகில் நிற்கவோ, அவர்களுடனா பழகவோ, கூச்சப்பட, பயப்படத் தேவை இல்லை. அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே!

சொரியாசிஸ் பிரச்னைக்கு என்ன சிகிச்சை?
ஆரம்பநிலையில் கண்டுபிடிக்கப் பட்டால், அதை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும். சொரியாசிஸ் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். மிதமான சொரியாசிஸ் இருந்தால், சில க்ரீம்கள், ஷாம்புக்கள் மூலமாகவே கட்டுப்படுத்திவிட முடியும். சற்று தீவிரமான நிலையில் இருந்தால், போட்டோதெரப்பி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். புற ஊதாக் கதிர்கள் - பி ஒளி தெரப்பி சொரியாசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

மிகவும் மோசமான அளவில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தால், தோல் மருத்துவர் அறிவுரைப்படி அவரது மேற்பார்வையில் சிலவகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பயோலாஜிக் தெரப்பி என்பது நவீன சிகிச்சை. ஆனால், இந்த சிகிச்சைக்கு செலவு அதிகம். நவீன முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் சொரியாசிஸ் பிரச்னை எந்த நிலையில் இருந்தாலும் கட்டுப்படுத்தி, சொரியாசிஸ் பிரச்னை உள்ளவரை மற்றவர்கள் போல நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.


[HR][/HR]
*சொரியாசிஸைக் கட்டுக்குள்வைக்க!

*வாழ்வியல்முறை மாற்றம் அவசியம்.சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

*சிகரெட் மதுவை அறவே கைவிட வேண்டும்.

*குளிர்பிரதேசங்களில் வசிப்பதை, செல்வதைத் தவிர்க்கவும். குளிர் காலங்களில், வீட்டுக்குள் கதகதப்பான சீதோஷ்ணத்தைப் பராமரிக்க வேண்டும்.

*தினமும் அரை மணி நேரமாவது சூரிய ஒளி உடலில் படுமாறு நடக்க வேண்டும்.

*நம் பாரம்பர்ய பழக்கமான எண்ணெய்க் குளியலை அவ்வப்போது எடுப்பது அவசியம்.
 
Last edited:
Thread starter Similar threads Forum Replies Date
R Hair Care & Hair Removal 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.