சோகத்திலும் சுகம்....?

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
சோகத்திலும் சுகம்....?


வாழ்க்கையில் இன்று பலரும் தலைமேல் கைவைத்துக் கொண்டு வேதனைப் படுவதிலும் சுகம் காண்கின்றார்கள். தங்களைத் தாங்களே வேதனைப்படுத்தி வருத்திக் கொள்வதிலும் ஒரு குரூர மகிழ்ச்சி சிலருக்கு. இதை, “சுயவலியில் சுகம்’ என அழைக்கலாம்.
இயல்பான ஓர் உண்மை நிலையை இந்த சுயவலியில் சுகம் என்ற விந்தை நிலை குழப்பிவிடுகின்றது. அதாவது சுகம் என்ற நல்ல அனுபவம் வேதனை எனும்கெட்ட அனுபவத்தின் தெளிவான எதிரி என்ற உண்மை நிலையைத்தான் குழப்பி விடுகின்றது.
ஆக, இது சுக அனுபவம் பெறுதல் என்பதை ஆராய்வதையே குழப்பிச் சிக்கலாக்குகின்றது.
பல்வேறு மனிதர்கள் பல்வேறு தூண்டுதல்களினால் சுகம் அடைகின்றார்கள். அவர்களை சுகம் உணரச் செய்யும் வினை மூளையினுள்தான் நிகழ்கின்றது. ஆனால், இறுதியில் அத ஒன்றாகவே உள்ளது என்கின்றார் “தேசிய மூளை ஆய்வு மையத்’தின் உறுபிபனரான பேராசிரியர் நீரஜ் ஜெய்ன்.
இயல்யான மகிழ்ச்சி மனநிலையில் ஏற்படுகின்ற குதூகலத்திற்கும், எல்லாம் நல்லதாகவே முடியும் என்ற அசட்டுமயக்க ஆனந்தபிராந்திக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார், பெங்களூரின் “தேசிய மனநலம்’ நரம்பு அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராகிய டாக்டர் சத்தீஜ் சந்திரா. E upho ria என ஆங்கிலத்தில் சொல்லப்படுவது, அடிப்படையே இல்லாமல் ஏதோ இருப்பதாக ஏற்படும் அதிகப் பிரசங்கி ஆனந்தக் குதிப்பாகும்.
சுகத்தைத் தூண்டிவிடும் பல மையங்கள் உடலில் இருக்கின்றன. ஆனால், எல்லாமே இதுவரையில் திட்டமாக ஆராயப்படவில்லை. உணர்ச்சி கட்டுப்பாட்டு வினையில் “ஹைப்போத்தேலமஸ்’ என்பதும், மூளையின் முன்பகுதியும் முக்கிய வினையாற்றுகின்றன என்ற விவரங்களைத் தெரிவிக்கின்றார் டாக்டர் சத்தீஷ் சந்திரா.
சுகம் என்பது உயிரினங்களின் நலம் நாடும் “தகவலமைப்பு’ விளைவாகும். உயிரினங்கள் தாங்கள் ஏற்கெனவே அடைந்த சுகத்திற்கான சூழலை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றன. அவ்வண்ணமே, வலி, வேதனை முதலிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலைத் தவிர்க்கின்றன.
சுகானுபவம் உணரும் தன்மை வெவ்வேறு ஆளுக்கு வெவ்வேறு வகையில் உள்ளது. ஒரே சூழலில் வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு அளவான, வெவ்வேறு வகையான சுகானுபவத்தை உணர்கின்றார்கள்.
சுகானுபவம் என்பது ஒரு தனிச் செயலின் வடிவமல்ல. அது, நாட்டம், விருப்பம், அறிந்து கொள்ளுதல் முதலிய பல மூளைச் செயல்கள் தெளிவாக வேறுபடும், அதே சமயம் ஓரளவு ஒன்றையொன்று ஒட்டியும் அமைந்த மூளையின் பின்னல் தொடர்புகளால் ஏற்படுவன.
சுகானுபவம் தூண்டும் செயற்கை மருந்துகள் மனிதனைத் தங்களுக்கு அடிமையாக்குகின்றன.
“மெஸோலிம்பிக் டோப்பேமைன் சிஸ்டத்தைத்’ (மூளையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு டோப்பேமைனைக் கொண்டு செல்லும் மூளை வழி) தூண்டி விடுவதன் மூலம் மனிதனின் “தேவை’ அமைப்பைப் பிடித்து வைத்துக் கொள்ளும் மருந்துகளினால் மனிதன் போதைதேடும் அடிமையாகின்றான்.
சில ரசாயனப் பொருள்கள் மனிதனின் மூளையை சுகானுபவத்திற்குத் தூண்டுகின்றன. டோப்பேமைனும், பலவேறு எண்டார்ஃபின்களும் அவற்றும் அடங்கும்.
மூளையின் சுகானுபவ அமைப்பைத் தூண்டிவிடும் வினையை இயல்பான நடத்தையின் இயற்கைக் கூறு எனச் சொல்லமுடியும் உண்மையில், இயல்பாக நன்மை தரக்கூடியனவும்; தனிமனிதன் நீடித்து வாழ்க; செய்வனவும் ஆகிய நோக்கங்களுக்காக மூளையின் சுகானுபவ அமைப்புகள் மனிதனுக்குத் தூண்டுதல் தந்து உதவுகின்றன.
ஆனால் - ரசாயன மருந்தும் மூலமும், இயற்கையான மனித நாட்டங்களின் மூலமும் மூளையில் ஏற்படும் சுகானுபவங்கள் ஒன்றாகவே தோன்றினாலும், சமூகத்தில் அந்தத் தூண்டுதல்கள் வெவ்வேறு விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன?

மன அழுத்தத்துக்கு மருந்து வேண்டாம்!
நல்ல புத்தகங்கள் வாசியுங்கள்...
ஓய்வே இல்லாமல் வேலை, வேலை என்று நேரம் பார்க்காமல் பணத்திற்காக மட்டுமே நேரத்தைப் பயன்படுத்தும் சிலர் உண்டு. அவர்களைக் கனடாவில் பணம் கொடுத்து இசை கேட்கச் செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சிக்காக கரும்பு தின்னக் கூலிதான்.
மக்களின் மன அழுத்தத்துக்குக் காரணம், தங்கள் நேரத்தைப் பணம் சம்பாதிப்பதுடன் அதிக அளவு பிணைத்திருப்பதாகக் கனடா டொராண்டோ பல்கலைக் கழகத்தில் கண்டுபிடித்துள்ளனர். இங்குள்ள ராட்மன் நிர்வாக இயல் கழக ஆய்வாளர்கள்.
“நேரத்தை பணத்துடன் தொடர்புபடுத்திவிட்டு. பொழுது போக்காக நல்ல இசை கேட்பது, வாசிப்பது போன்ற விஷயங்களில் மகிழ்ச்சி கொள்ளாமல் இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகக்கூடும்’ என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
ஓய்வு நேரத்தை உண்டாக்கிக் கொண்டு அவற்றைச் சந்தோஷமாகக் கழிக்கும் திறனோ, வாய்ப்போ இல்லாதவர்களுக்குப் பொறுமையின்மை அதிகரித்து மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வாளர்கள் சான்போர்டிலோ, ஜுலியன் ஹவுஸ் ஆகியோர் அறிவுறுத்துகிறார்கள்.

...பசுமை சூழலில் வசியுங்கள்!
வேலை இல்லாதவர்களுக்கும் வேலை இழந்தவர்களுமான மன நெருக்கடி உள்ளவர்கள்; வேலை செய்தும் உரிய வருவாய் இல்லாமல் குறைவாகப் பெறுகின்றவர்கள்; தீவிரமான படபடப்பு உள்ளவர்கள் இத்தகையவர்களாக 35 வயது முதல் 55 வயது வரையானவர்கள் சிலரின் உமிழ் நீர் மாதிரிகளைப் பெற்று ஆராய்ச்சி செய்தனர்.
மன அழுத்தத்துக்கு ஏற்ப வெளியாகும் கார்ட்டிசோலின் என்ற ஹார்மோனை வெளிவிட்டனர். அவர்களில் மிகக்குறைந்த பசுமைச் சூழலில் வசிக்காதவர்களின் கார்டிசோல்ஸ் ஆரோக்கியமில்லாதிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி ஆராய்ச்சிமையம் இந்த விந்தையான ஆராய்ச்சியை நடத்தியது. இதன் இயக்குநர் கேத்ரீன் வார்டு தாம்சன் “பசுமை சூழ்நிலையை உருவாக்கி, அந்தச் சூழலில் வசிப்பதன் மூலம், பக்கவிளைவுகள் தரக்கூடிய மன அழுத்த மருந்துகள் இல்லாமலேயே அமைதியும் ஆனந்தமுமான வாழ்க்கை பெறலாம்’ என்று கூறுகின்றார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.