சோடாவாஆஆஆஆஆஆ!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சோடாவாஆஆஆஆஆஆ!


தெரியுமா?

இயற்கை பானங்களைத் தவிர்த்து மற்ற எல்லாமே ஆபத்துதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது மற்றுமொரு எச்சரிக்கை. சோடா எப்படி எல்லாம் நம்மைப் பாதிக்கிறது என்பதை ஒவ்வோர் உறுப்பின் அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுவலி, செரிமானமின்மை, களைப்பு போன்ற காரணங்களுக்காக அடிக்கடி சோடா குடிப்பவர்கள் அலர்ட் ஆகிக் கொள்ளுங்கள்...

எடை

வருடத்துக்கு 17 கிலோ 690 கிராம்
சர்க்கரையை சாப்பிடுவது… தினமும் ஒரு சோடா குடிப்பது… இரண்டுமே ஒன்றுதான். காரணம், ஒரு சோடா பாட்டிலில் கொட்டிக் கிடப்பது 6 டீஸ்பூன் சர்க்கரை. இன்று பருமனால் பலரும் அவதிப்படுவதற்குப்
பின்னால் சோடாவும் இருக்கிறது.

மூளை

சோடாவில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை, மூளையின் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் ஞாபகசக்தியைப் பெரிதும் பாதிக்கிறது. முக்கியமாக, இன்சுலின் உற்பத்தியும் சோடாவால் கெட்டுப் போகிறது.

நுரையீரல்

அடிக்கடி சோடா குடிப்பவர்கள் ஆஸ்துமாவை விலைக்கு வாங்குகிறார்கள். இதற்கு சோடாவில் கலக்கப்படும் அளவுக்கு
அதிகமான சல்பர் டை ஆக்ஸைடுதான் காரணம். சல்பரின் புண்ணியத்தால் மூச்சுவிட சிரமப்படும் COPD என்ற சுவாசப் பிரச்னையும் உருவாகும்.

சிறுநீரகங்கள்

சர்க்கரை, சல்பர் போலவே சோடாவில் அதிகம் இருக்கும் பாஸ்போரிக் அமிலம் சிறுநீரகக்கல்லை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இத்துடன் சிறுநீரகம் தொடர்பான மற்ற பிரச்னைகளுக்கும் காரணமாகிறது சோடா.

ஜீரண மண்டலம்

கார்பனேற்றம் செய்யப்பட்ட சோடாவினால் வாயுத்தொல்லை, உடல் வீக்கம், தசைப்பிடிப்பு போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. பல்வேறு வயிற்றுப் பிரச்னைகளை உள்ளடக்கிய இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோமை தூண்டுகிற வேலையையும் சோடா செய்கிறது.

எலும்புகள்

சோடா குடிப்பதற்கும் ஆஸ்டியோபொரோசிஸ் என்ற எலும்பு தொடர்பான குறைபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோடாவில் இருக்கும் பாஸ்போரிக் அமிலமும் கஃபைனும் எலும்பின் அடர்த்தியைக் குறைக்கிறது.

இதயம்

நீண்ட நாட்களாக சோடா குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்களும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

பற்கள்

பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலத்துக்கு இணையானது சோடாவில் பயன்படுத்தப்படும் அமிலங்கள். இந்த அமிலங்கள் உங்கள் பற்களைத் தின்று விடுகிறது.எனவே, முழிச்சுக்கோ... பிழைச்சுக்கோ!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.