ஜலதோஷத்துக்கு சீஸன் உண்டா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஜலதோஷத்துக்கு சீஸன் உண்டா?​
பி.எம்.கலைச்செல்வன்
பொது மருத்துவர்
“ப
னி காலத்துலதான் சளி பிடிக்கும். ஆனால், இந்த சம்மர்லகூட ஜலதோஷமும் தும்மலுமா அவஸ்தைப்படறான் டாக்டர்” என்று தன் மகனைப் பற்றி சொன்னார் ஒரு நண்பர். வெயில் காலத்தில் சளி பிடிக்காது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையில் கோடையில்தான் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.

வெப்பத்தால் அவதிப்படும்போது, குளிர்பானங்கள் அல்லது ஐஸ் வாட்டரை விரும்பிக் குடிக்கின்றனர். இது தவறு. வெப்பம் காரணமாக, நமது தொண்டை இருக்கும் பேரின்க்ஸ் (Pharynx) என்ற பகுதி சற்று வெப்பமாக இருக்கும். அப்போது, குளிர்ந்த நீரையோ பானத்தையோ குடிக்கும்போது, தொண்டை கட்டிவிடும்.

கார்பனேட்டட் பானங்கள் தொண்டைக்கு இதமாக இருப்பது போல தோன்றினாலும், அவை நமது தொண்டையில் இருக்கும், மெல்லிய திசுக்களை அரித்துவிடும். இதனால், தொண்டையில் எளிதில் நோய்த் தொற்று வரலாம்.

வியர்வை சொட்டச் சொட்ட தலைக்குக் குளிப்பது, குளித்த பின் தலையைச் சரியாகத் துவட்டாமல் இருப்பது, வெயிலில் அலைந்துவிட்டு, உடனடியாக ஏ.சி அறைக்குள் நுழைவது போன்றவற்றால் கண்டிப்பாக ஜலதோஷம் ஏற்படும்.
சென்ட்ரலைஸ்டு ஏ.சியினாலும், ஜலதோஷம் வர அதிக வாய்ப்பு உண்டு. ஏ.சி காற்று வெளியே செல்லாதிருக்க, ஜன்னல்களும் மூடப்பட்டே இருக்கும்.

அலுவலகத்தில் யாருக்கேனும் ஜலதோஷம் இருந்து, அவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அந்தக் காற்று ஏ.சி மூலமாக, அலுவலகத்தின் மற்ற இடங்களுக்குச் சுழலும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்தக் காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷம் தொற்றும்.

கடும் வெயிலில், காற்றில் உள்ள ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால், காற்று லேசாகி தூசி, துரும்புகள் மற்ற காலத்தைவிட பெருமளவு காற்றில் சுழலும். இந்த தூசுக்களால் அலர்ஜியும் ஜலதோஷமும் வரலாம்.

- ச.சந்திரமௌலி
[HR][/HR]


ஜலதோஷம் தவிர்க்க...
வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும் குளிர்ச்சியாக எதையும் பருகக் கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, இளநீர், ஜூஸ், மோர் பருகலாம்.

‘ஜில்’லெனக் குடித்தால் தாகம் தணியும் என்று, நம் தேவையைவிட குறைவாகவே நீரை அருந்துவோம். இதனால், உடல் டீஹைட்ரேட் ஆகலாம்.

சளி பிடித்தால் மிதமான வெந்நீரில் குளித்து, மூக்கினை லேசாகச் சிந்துங்கள். தலைக்குக் குளிப்பதை ஓரிரு நாட்கள் தவிர்க்கவும்.

வியர்வையுடன் வந்தாலும், சிறிது நேரம் கழித்த பிறகே குளிக்கச் செல்லவும்.

தலை வியர்த்து இருந்தால், நன்றாக உலர்த்திய பிறகு தலைக்குக் குளிக்கவும்.

தலைக்குக் குளித்தவுடன் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தலையைத் துவட்டுவது நல்லது.

நாம் தும்மும்போது மட்டுமின்றி, பிறர் தும்மும்போதும் நம் மூக்கையும் வாயையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.

இளநீர், நீர் மோர், வெள்ளரிப் பிஞ்சு, பழ வகைகளை மிதமாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.

வாய் கொப்பளிக்க வெந்நீரும், குடிப்பதற்குக் கதகதப்பான நீரும் நல்லது.

துளசி, ஓமவல்லி இலைகளை வெந்நீரில் போட்டு, ஆவி பிடிப்பது மூக்கடைப்புக்கு நல்ல தீர்வைத் தரும்.
[HR][/HR]

“கடந்த எட்டு ஆண்டுகளாக எனக்கு ஒற்றைத் தலைவலி பிரச்னை இருக்கிறது. மருத்துவரிடம் சென்று மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டேன். ஸ்கேன் செய்ததில் நார்மல் என்று வந்தது. வெயிலில் அலைந்தால், பசித்தால், ஏ.சியில் இருந்தால், டென்ஷன் அதிகமானால் மற்றும் தலைக்குக் குளித்தால், ஒற்றைத் தலைவலி வருகிறது. இதற்கு, சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் இருக்கிறதா?”
டாக்டர் ராமலிங்கசாமி,
சித்த மருத்துவர்,
உத்தமபாளையம்.
“சி
லருக்கு, சூரியன் உதயமாகும்போது ஒற்றைத் தலைவலி ஆரம்பித்து, சூரியன் மறையும்போது வலி குறையும். இதனை ‘சூரியவர்த்தம்’ என்பர். அதுபோல், சிலருக்கு இரவில் தலைவலி வந்து, விடியற்காலையில் குறையும். இதனை ‘சந்திரவர்த்தம்’ என்பர். இதனைச் சரிசெய்ய, ‘தைவேளை’ எனும் மூலிகையைக் கசக்கி, எந்தப் பகுதியில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பகுதியில் உள்ள காதில், பஞ்சு போல உருட்டிவைத்தால், தலைவலி சரியாகும். வலி சரியானதும் இலையை எடுத்துவிடலாம்.

அரக்குத் தைலம், அஸ்வகந்தா தைலம், டிக்காமல்லித் தைலம் ஆகியவற்றை வாரத்துக்கு ஒரு முறை, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், தலைவலிப் பிரச்னை குறையும். தலைவலியுடன் சேர்ந்து, வாந்தி எடுப்பவராக இருந்தால், சதகுப்பை, ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்துக் கசாயமாக்கிக் குடிக்க, ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் நிற்கும்.

சிலருக்குக் கண் மற்றும் மூளையில் உள்ள ரத்த குழாய்களின் பிரச்னையால், ஒற்றைத் தலைவலி வரலாம். இவர்கள் கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது.”
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.