ஜலதோஷம் குறைய

#1
ஜலதோஷம் குறைய

1. கொள்ளை அவித்து, நீரை வடித்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

2. ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு பெருஞ் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாகத் தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும்.

3. சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்.

4. யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் ஜலதோஷம், இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

5. மாதுளம் பழத்தை எடுத்து கழுவி அதை தினமும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

6. துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால் ஜலதோஷம், கோழை மற்றும் இருமல் குறையும்.


7. தூதுவளை செடியை(இலை, தண்டு, பூ, காய்,) ரசம் வைத்து மதியம் உணவுடன் சாப்பிட்டால் ஜலதோஷம் குறையும்.

8. துளசி இலைச்சாறு மற்றும் சிறிது இஞ்சிச்சாறு கலந்து பருக ஜலதோஷம் குறையும்.

9. கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும்.

10.வேப்பிலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளித் தொல்லையால் மூக்கில் நீர் வடிதல் குறையும்.

11.அரைக்கீரையுடன் மிளகு பொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர ஜலதோஷம் குறையும்.

12.மஞ்சள் பொடியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.

13.வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.

14.சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

 
Last edited:

dhivyasathi

Well-Known Member
#7
Warm milk la turmeric powder wit pepper powder add pani kudichalum cold Wil cure. Without pepper also can. One week ah cold Ala romba kastam. Just one day I drink milk wit turmeric. Now it's curing. Somewat relief kidaichuthu. Hot water la eculyputus oil potu aavi pidichalum cold la irunthu relief kidaikum mainly (nose block).
 
#8
Warm milk la turmeric powder wit pepper powder add pani kudichalum cold Wil cure. Without pepper also can. One week ah cold Ala romba kastam. Just one day I drink milk wit turmeric. Now it's curing. Somewat relief kidaichuthu. Hot water la eculyputus oil potu aavi pidichalum cold la irunthu relief kidaikum mainly (nose block).
Thanks for the tips Satya :)