ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா? இதைப் படிங்க

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#1
ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.

பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிடும்.

ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர்.

ஜீரணம் பாதிக்கும்

நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்மைக் குறைபாடு

பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்' என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். ஆண்களின்

இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது ஆண்களின் விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருக்கமான உடை அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரோக்கியமான உடை

ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.

`ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும். தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.