ஜூலை 1: மருத்துவர்கள் தினம்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
இன்று - ஜூலை 1: மருத்துவர்கள் தினம்

மருத்துவர்களின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.

மருத்துவப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த பி.சி.ராய் பிறந்த தினத்தையே தேசிய மருத்துவ தினமாக கொண்டாடுகிறோம்.
பாரத ரத்னா டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களுக்கு: ஜென்மதினம்
ஜூலை 1,1882;
மறைந்த தினம்: அதே தினம்: 19
62.
கல்கொத்தா இந்தியாவிலேயே பெரிய
நகரம். அங்கு டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி
செலுத்த மலர் வளையங்களை உருவாக்க, புஷ்பங்கள் கிடைப்பது அரிது ஆகிவிட்டது

என்று நாளிதழ்களில் செய்தி. ஏன் தெரியுமா? அன்று அதிகாலையே அன்னாருக்கு
பூமாலைகள் சூட்ட எல்லா புஷ்பங்களும் வாங்கப்பட்டனவாம்


தன் வீட்டை மருத்துவத்துறைக்கு நன்கொடையாக அளித்தார்.
1928ல்
இந்திய மருத்துவ நிறுவனத்தை அமைத்து நிர்வஹித்தார். அதனுடைய மேல்தளமாகிய
மருத்துவ ஆலோசனை மன்றத்தை 1939ல் அமைத்து 1945 வரை அதை வழி நடத்தினார்.
காந்திஜி உண்ணாவிரதம் என்றால், ஐயா தான் டாக்டர். காந்திஜியை விரட்டுவார். தன்
இறுதி நாள் வரை, முதல்வர் மட்டுமல்ல, மருத்துவரும் தான். பிஸி ப்ரக்ட்டீஸ்;

காந்திஜி உள்பட. நேருவை, ‘ஹே! ஜவஹர்!’ என்று தான் விளிப்பார். அவர் மீது
அப்படி ஒரு பாசம். அவர் எதிர்பாராத விதமாக இறந்த போது, ஜனாதிபதியும்,
கவர்னரும் ஓடோடி வந்தனர்.

பிதான் தா ஆஜானுபாகு.
உருவத்திலும், கீர்த்தியிலும் பெரியவர். ஆணழகன் 80 வயதில்
. நாமாகவே
அடங்கியிருப்போம். அப்படியொரு பெர்ஸனாலிட்டி.
நேரு கேட்டுக்கொண்டும், அன்றே கல்கொத்தா திரும்பிவிட்டார். ‘துர்கா பூஜை
வருகிறது. நான் தலைநகரில் இருக்கவேண்டும்.’ என்றார். நாளிதழ் செய்தி: பிதான்
தா சித்தரஞ்சனிலிருந்து வந்த பின் தான் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும்
என்றன. தம்மாத்தூண்டு விஷயமோ, மாபெரும் சிக்கலோ, எல்லாம் பிதான் தா சொல்படி
தான் நடக்கும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Thank you sir for giving wonderful information on the great doctor P.C.Roy.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.