ஜெட்லாக் - Jet lag

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஜெட்லாக்​

[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏற்படுகிற ஒருவித சிக்கலைத்தான் நேரக் குழப்படி (ஜெட்லாக்) என்கிறோம். நேரக் குழப்படியைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னர் உயிரியல் கடிகாரம்பற்றிப் பேசியாக வேண்டும்.
ஒவ்வோர் உயிரினத்தின் உள்ளேயும் உயிரியல் கடிகாரம் எனப்படும் 'இன்டர்னல் க்ளாக்’ (Internal clock) ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது.

காலை-மாலை-இரவு என 24 மணி நேரமும் உடல் இயக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த உயிரியல் கடிகாரத்தின் வேலை. அந்த வகையில், ஒருவரது வாழ்க்கைச் சூழலைப் பொருத்து, அவரது தூக்கம் மற்றும் விழிப்பு நிலை, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், ஹார்மோன் சுரப்பு உள்ளிட்ட உடல் இயக்கச் செயல்பாடுகளும் மாறுபடும்.


உதாரணமாக பகல் நேரத்தில், இந்தியர் ஒருவர் இங்கிருந்து விமானப் பயணம் மூலம் தூர தேசங்களுக்குச் சென்று சேருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது இந்திய நேரப்படி இரவாக இருந்தாலும் சென்று இறங்கிய தேசத்தில் பகல் வேளையாக இருக்கலாம். ஆனால், அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உயிரியல் கடிகாரமோ அதனை இரவுச் சூழலாகவே உணர்ந்துகொண்டு அதற்கேற்பவே செயல்படும்.

இதனால் வேளை கெட்ட வேளையில் தூக்கம் வரும். படபடப்பு, கோபம், உடல் உஷ்ணம், தலைவலி, செரிமானம் இன்மை, மலச் சிக்கல் எனப் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றைத்தான் நேரக் குழப்படி என்கிறோம். வெளிநாடுகளுக்குப் பயணிக்கிற எல்லோருக்குமே நேரக் குழப்படிப் பிரச்னை ஏற்படும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அந்தந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி எந்தவிதப் பிரச்னையும் இன்றி உடல்நிலை மாறிக்கொள்ளும்.


நேரக் குழப்படி வருவதற்கான வாய்ப்புகள் எப்போது அதிகரிக்கின்றன? பொதுவாக வடக்கு - தெற்காகப் பயணிக்கும்போது ஏற்படும் நேரக் குழப்படிப் பிரச்னை மிகவும் குறைவு. ஆனால், மேற்கில் இருந்து கிழக்காகவோ அல்லது கிழக்கில் இருந்து மேற்குத் திசை நோக்கிப் பயணிக்கும்போதோ நேரக் குழப்படிப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

கிழக்கு மேற்காகப் பரந்து விரிந்திருக்கும் அமெரிக்காவில் உள்ளூர் நேரம் என்பது ஒவ்வொரு மாகாணத்துக்கும் வித்தியாசப்படும்.

உதாரணமாக மேற்குப் பகுதியில் இருக்கும் கலிஃபோர்னியாவில் இருந்து கிழக்கில் இருக்கும் நியூயார்க் நகரத்துக்குப் பயணிக்கும்போது நேரக் குழப்படி ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், இந்த நகரங்களுக்கு இடையே உள்ளூர் நேரமானது சுமார் நான்கு மணி நேரம் வித்தியாசப்படும். ஆனால், இந்தியா பரந்துவிரிந்த தேசமாக இருந்தபோதும் உள்ளூர் நேரம் என்பது இங்கே ஒரேவிதமாகவே இருக்கிறது.

ஆதலால், இந்தியாவுக்குள் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பயணித்தாலும்கூட நேரக் குழப்படிப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, எவ்வளவு மணி நேரம் பயணிக்கிறோம் என்பதைப் பொருத்து நேரக் குழப்படி வருவதில்லை.

எத்தனை நேர மண்டலங்களைக் (Time Zone) கடந்து பயணிக்கிறோம் என்பதனைப் பொருத்தே நேரக் குழப்படிப் பிரச்னை ஏற்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டு நேர மண்டலங்களைத் தாண்டிப் பயணித்தால், நேரக் குழப்படி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன.

நாடுவிட்டு நாடு செல்லும்போது ஏற்படும் பிரச்னைகள் எல்லாம் இருக்கட்டும்... பணிச் சூழல் காரணமாக இரவில் விழித்திருப்பதும் பகலில் தூங்குவதுமாக நம்மில் எத்தனைபேர் தினம்தினம் அவதியுறுகிறோம்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.