ஞாபக சக்தியை அதிகரிக்க சுலபமான வழி – ஹெல்&#298

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#1
ஞாபக சக்தியை அதிகரிக்க சுலபமான வழி – ஹெல்த் டிப்ஸ்


அடிக்கடி முக்கியமான விஷயங்களை மறந்து போய்விடுகிறீர்களா? மறதியால் உங்கள் படிப்போ அலுவலக பணியோ பாதிக்கப் படுகிறதா? நினைவாற்றல் இல்லாததால் சில சமயம் அவமானங்களை சந்திக்கிறீர்களா… அப்படின்னா இந்த கட்டுரை உங்களுக்குத்தான்… இதுல நாம ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன என்ன விஷயங்கள் சாப்பிடணும் / செய்யணும்னு சொல்றேன்..


மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ் !


* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ*ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.
அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். அதனால சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப் படாதீங்க ! இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக்கிட்டா நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
தற்போதைய ஆய்வு ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு நினைவாற்றலை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. ஆய்வுக்காக 55 வயதுக்கு உட்பட்ட 3486 ஆண்களும், 1341 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தொடர் ஆய்வுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இதில் உயர் ரத்த அழுத்தமும், அதிக கொழுப்பும் நினைவாற்றல் பாதிப்பை ஏற்படுத்தியது உறுதியாகி உள்ளது. ஆரம்ப கட்ட சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பது ஆராய்ச்சியாளர்கள் தரும் உத்தரவாதம். அதனால கொலஸ்ட்ரால கன்ட்ரோல் பண்றதும் ரொம்ப முக்கியங்க !
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.