ஞாபக மறதி - Memory Loss

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
நமது அன்றாட உணவிலும், குடிநீரிலும் நமக்குத் தெரியாமலே தாமிரம் அதிகமாக உடலில் சேர்கிறது. இது ஞாபக மறுதி நோய்க்குக் காரணமாக அமைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படையில், உடலுக்கும், மூளையின் திறனுக்கும் தாமிரம் பல நன்மைகளை அளிக்கிறது. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாக ஆகும் போது, மூளையின் நினைவாற்றலை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழாயில் வரும் தண்ணீர், தாமிர குழாய் வழியாக வருவதால், தண்ணீரில் தாமிரம் கலந்தே வருகிறது. அது மட்டும் இல்லாமல், இறைச்சி, சில வகை மீன்கள், காய்கறி மற்றும் பழங்களிலும் தாமிர சத்து கலந்திருக்கும்.

மூளையில் இருக்கும் அமைலாய்ட் இழப்பே, ஞாபக மறதி நோய்க்குக் காரணமாக அமைகிறது. இந்த நிலையில், அதிக தாமிர சக்தி உடலுக்குக் கிடைக்கும் போது அமைலாய்ட்டை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.

உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:

* அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:

நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

* நன்கு தூங்குங்கள்:

தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.

* வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:

ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.

* எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:

பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

* எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:

குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள். எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.

* நினைவூட்டும் தந்திரங்கள்:

ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
 

Attachments

Last edited:

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.