டயட்கள் பலவிதம்! - Various types of Diets

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
டயட்கள் பலவிதம்!
னுஷன் உழைக்கிறதே சாப்பிடுறதுக்குத்தான். அதை நிம்மதியா சாப்பிடவிடுறாங்களா? இலை நிறையக் கீரையை மட்டும் பரப்பிவிட்டு ‘இது ஃபேலியோ டயட்’ என்கிறார் ஒருவர். வெட்டிவைத்த ஆப்பிளும் அதன் நடுவே திணித்துவைத்த அவித்த முட்டையுமாய் ஒருவர் வந்து ‘இது வாரியர் டயட்’ எனப் பல் இளிக்கிறார். இப்படி ‘டயட்’ங்கிற பெயர்ல எத்தனை வெரைட்டி இருக்குனு தேடுனா, கொட்டோகொட்டுனு கொட்டுது லிஸ்ட். அதிலிருந்து பொறுக்கியெடுத்த சில வகை டயட்ஸ்!

லகமெங்கும் எடையைக் குறைக்கிறதுக்கு மட்டும் 400-க்கும் அதிகமான ‘டயட்ஸ்’ இருக்காம். அதுல ஒண்ணுதான் ‘டூகன் டயட்’. இத்தகைய டயட்டில் ப்ரௌவுன் பிரெட், ஓட்ஸ், கோதுமை இது மாதிரி உணவோடு மீன், நண்டு, இறால்னு தினம் ஒரு கடல் உயிரைச் சாப்பிடணுமாம். ‘அடடே’னு ஆர்வமாகி எதையுமே அள்ளி இறைக்கக் கூடாது என்பது கண்டிஷன். ஒரே ஒரு மீன், ரெண்டே ரெண்டு இறால், ஒரே ஒரு நண்டு. இப்படித்தான் சாப்பிடணும். (மோந்து பாத்துட்டு வெச்சாலும் நல்லதுங்கிறதைத்தான் அப்படிச் சொல்றாய்ங்க!). இப்படித் தொடர்ந்து செஞ்சுக்கிட்டே வந்தா, மாசத்துக்கு இரண்டு கிலோ குறையும்னு சொல்றாங்க. அவ்ளோதானானு கூடையைத் தூக்கிட்டுக் கௌம்பிடாதீங்க. இனிமேல்தான் வகுப்பே ஆரம்பம். மேலே சொன்னதெல்லாம் சாப்பிடும்போது மட்டும். மத்தபடி, காலையில எழுந்திரிச்சதும் வெதுவெதுப்பான இரண்டு டம்ளர் தண்ணியைக் குடிக்கணும். அதுபோக அஞ்சு லிட்டர் தண்ணியைக் குடிச்சே ஆகணும். தினமும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாம உடற்பயிற்சி செய்யணும். வாரத்துக்கு நாலு அவித்த முட்டையை சாப்பிட்டே ஆகணும். தப்பித் தவறிக்கூட பொறித்த சிக்கனைச் சாப்பிட்டுவிடக் கூடாதுனு லிஸ்ட் கிலோமீட்டர் கணக்குல போகுது. எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு செஞ்சா, ஆரோக்கியமான வழியில் எடை குறையுமாம்!


டல் எடையைக் குறைக்க ஒரே வழி, சாப்பிடாம இருக்கிறது. அதுக்கு தூக்கம் போதுமே என சூடான பாய்லரில் உட்கார்ந்து யோசித்த யாரோதான் இந்த ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ டயட்டைக் கண்டுபிடித்திருப்பார்னு நினைக்கிறேன். உடல் எடையைக் குறைக்கணும்னு நினைக்கிறவங்க தூங்கிக்கிட்டே இருங்க போதும் என்கிறது இந்த டயட். அதிகப்படியான தூக்க மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக்கொள்வது என்ற விதிகளுடன் ஆரம்பித்த இந்த டயட் 1970-களில் அதிகப் பிரபலமாம். மறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லி என்பவருக்கு குனிந்து தன் ஷூ கயிற்றைக் கட்ட முடியாத அளவுக்குத் தொப்பை இருந்ததாம். இந்த டயட்டை ஃபாலோ செய்த பிறகு ‘ஸ்லிம் அண்ட் பியூட்டி’ ஆகிவிட்டார் என்கிறார்கள். ஆனால், முதுமையில் அவருக்கு இருந்த அத்தனை தொந்தரவுகளுக்கும் இந்த டயட்தான் காரணம் என மருத்துவர்கள் சொல்ல பதறியடித்து நிறுத்தியிருக்கிறார்கள் குண்டர்கள்!
து காபி பிரியர்களுக்குப் பிடித்தது. பெயரே ‘பத்து மணி நேர காபி டயட்’தான். ரொம்பவே சிம்பிளான டயட் என பாராட்டுகளைப் பெற்ற இந்த டயட் என்னன்னா... சரியா பத்து மணி நேரத்துக்கு ஒரு தடவை காபி குடிங்க. அதுவே உங்கள் எடையைக் குறைக்கும் அத்தனை வேலையையும் செய்யும். தவிர, உடலும் ஆரோக்கியமாக இருக்குமாம். மற்ற எல்லா வகையான டயட்களையும் ஃபாலோ பண்ணணும்னா மாதச் சம்பளத்துல பாதியாவது செலவு பண்ணி வீட்டுல அடி வாங்கணும். அதுக்கு இது எவ்வளவோ பெட்டர் இல்லையா? என்கிறார்கள் ‘10 ஹவர் காபி டயட்’டை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியவர்கள்!

‘பழம் சாப்பிடுங்கள்’ என்கிறது ஃபுரூட்டரி யானிஸம். ‘ஓ வெறும் பழத்தை மட்டுமே திங்கணுமா’னு முடிவெடுத்துடாதீங்க. அப்படியும் ஒரு டயட் இருக்கிறது வேற கதை. இது 75 சதவிகிதம் மட்டும் பழங்களை எடுத்துக்கொள்ளச் சொல்லுது. உண்ணும் உணவு பெரும்பாலும் பழங்களாக இருந்தால் போதும் என்பதுதான் இந்த டயட்டின் அடிப்படை. இப்படியே பழக்கப் படுத்திக்கொண்டால் உடல் உடையைக் குறைப்பது மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ‘ஆதாம் - ஏவாள்’ காலத்தில் ஆப்பிள் கடித்த கதையை இந்த டயட்டோடு சேர்த்துவிட்டு ‘இது மிகத் தொன்மையான டயட்’ என்று ஹிஸ்டரியைப் புரட்டிக் காட்டியிருப்பதோடு, மகாத்மா காந்தியே இந்த டயட்டைத்தான் பின்பற்றினார் என சிகப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்!


காய்கறி, பழங்கள் இயற்கை உணவுகளைச் சாப்பிடுங்க. மற்றபடி சாப்பிடுறதுக்கு நேரம், காலம் குறிக்கிற டயட்டெல்லாம் எதுக்கு? ‘நல்லா சாப்பிட்டீங்களா, ஸ்பீக்கர் அலற பாட்டைப் போட்டு, அட்டகாசமான ஒரு டான்ஸைப் போட்டா போதும். உடல் எடை தானாகக் குறையும்’ என அதிரடி ஐடியா கொடுத்தால், அதுவே ‘டான்ஸர் டயட்’ எனப்படும். நடனக் கலைஞர்களின் உடலமைப்பு இயல்பாகவே ஒல்லியாகவே இருக்கும். அதற்கான காரணம் அவர்களது நடனப்பயிற்சிதான் என சிம்பிளாக விளக்கம் கொடுத்து சீன் வைக்கிறார்கள் இவர்கள்!
து மட்டுமா? சிரிக்கச் சொல்லும் ‘ஜோக் டயட்’, பெருமளவு முட்டையை உணவாகச் சாப்பிடச் சொல்லும் ‘எக் டயட்’, பழரசம் மட்டுமே போதும் எனச் சொல்லும் ‘ஜூஸ் டயட்’ என குறிப்பிட்ட சில டயட் ஃபார்முலாவில் சொன்ன விஷயத்தையே பெயரை மாற்றி பட்டி டிங்கரிங் வேலை பார்த்திருப்பதோடு, உடல் எடையைக் குறைக்க நினைக்கும் மக்களைச் சுத்தவிட்டு சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிக்கிறார்கள்!
கே.ஜி.மணிகண்டன்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.