டயட் பரோட்டா / Diet Parotta

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#1
டயட் பரோட்டா

20161020_130451.jpg

பரோட்டா பெருபானவங்களுக்கு பிடிச்ச உணவு ..ஆனா அதை கடைகளில் வாங்கி அடிக்கடி சாப்பிடறது உடம்புக்கு கெடுதல் . பரோட்டா செய்ய அதிகம் எண்ணெய் உபயோக படுத்துவாங்க . என் பசங்களுக்கு பரோட்டா ரொம்ப விருப்பம் .எனக்கு கடைகளில் வாங்கி கொடுக்க பிடிக்கலை ..அதனால நான் கொஞ்சமா எண்ணெய்/நெய் போட்டு செய்ய முயற்சி பண்ணேன் .நல்லா வந்தது ..அதை உங்களோட ஷேர் பண்றேன் ..

தேவையான பொருட்கள் :

கோதுமை /மைதா/multigrain மாவு - 1 கப்

நெய் - தேவைகேற்ப (நெய் good cholesterol தான் . ரொம்ப diet conscious உள்ளவங்க நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் எதுவேன்னா use பண்ணிக்கலாம் .

உப்பு - சுவைகேற்ப

தண்ணீர் மாவு பிசைய .

செய்முறை :

பரோட்டா மைதா மாவில் தான் செய்வாங்க ...நான் கோதுமை மாவில் தான் செய்தேன்..
..
மாவில் உப்பு சேர்த்து , ஒரு ஸ்பூன் நெய் (அல்லது எண்ணெய்) சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் .கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .


குறைந்த பட்சம் அரைமணி நேரம் ஊற விடவும் .

கொஞ்சம் பெரிய உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்

உருண்டை மாவை முடிந்த அளவு பெரிய சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும் .(சப்பாத்தி கட்டை உருட்ட பத்தலைன்னா kitchen டாப் சுத்தம் பண்ணி அங்க செய்ங்க .வசதியா இருக்கும் )
20161020_121820.jpg


தேய்த்த சப்பாத்தியில் ஒரு ஸ்பூன் நெய்(அல்லது எண்ணெய்) விட்டு முழுவதுமாக பரப்பி விடவும்.

20161020_121946.jpg

பிறகு சின்ன கத்தி எடுத்து நீள வாக்குல சின்ன சின்ன ரிப்பன் போல போல கீறி விடவும் .
20161020_122054.jpg


அந்த சின்ன சின்ன ரிப்பன்கலை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கவும் .
20161020_122304.jpg


20161020_122356.jpg
அவை எல்லாவற்றையும் சுருட்டி ரௌண்டாக வைத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும் .மேல கொஞ்சம் நெய் தடவி கொள்ளவும் .

20161020_124211.jpg

இப்படி மற்ற உருண்டைகளையும் செய்தவுடன் .அவற்றை ஒரு 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற விடவும் .அவை ஊறியவுடன் ஒரு உருண்டையை எடுத்து கையாலே சப்பாத்தி போல பரப்பி விடவும் .(உங்களுக்கும் வரலைனா ரொம்ப அழுத்தாமா சப்பாத்தி கட்டயால தேய்த்து கோங்க..அழுத்தி தேக்க கூடாது )
20161020_125804.jpgபின் தவாவை சூடு பண்ணி போட்டு எடுங்க .ஏற்கனவே நெய் போட் தால சுடும் பொது நெய்யோ எண்ணெயோ விட வேண்டியதில்லை. முதல் பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி போட்டு எடுங்க .சுட்டு எடுக்கும் பொது வேண்டும் என்றால் லைட்டா மேல நெய் தடவி கொள்ளலாம் .
20161020_131224.jpg


சுட்டு எடுத்தவுடன் அதை இரண்டு கைகளாம் சைடுல வைத்து தட்டனிங்கனா லேயர் லேயரா வரும் .
 

Attachments

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#8
ரொம்ப விளக்கமா படங்கள் போட்டு அழகா சொல்லி இருக்கீங்க உமா... மிக்க நன்றி :).
நன்றி சுமதி அக்கா..
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#9
Hi Uma
Thank you very much for the easy and detailed method of parotta making. It is everybody's favourite dish.
Thank you Prema சிஸ்..செய்து பார்த்துட்டு சொல்லுங்க ..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,468
Location
Bangalore
#10
நான் கூட பராத்தாவை கோதுமை மாவில் மட்டுமே செய்வேன் .


இந்த செய்முறை ரொம்ப வித்தியாசமா இருக்கு உமா . படங்கள் ரொம்ப நல்லா விளக்குது . ரொம்ப தேங்க்ஸ் உமா அருமையான படங்கள் மற்றும் செய்முறைக்கு .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.