டயட் வெஜ் உப்புமா + கொள்ளுத் துவையல்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
#1
டயட் வெஜ் உப்புமா + கொள்ளுத் துவையல்

டயட் வெஜ் உப்புமா
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக அரிந்த பீன்ஸ், கேரட், கோஸ் சேர்த்து சிறிது வதக்கி, 1 1/2 கப் நீர் சேர்த்து, கொதிக்கையில் 1 கப் களைந்த கோதுமை ரவை, உப்பு சேர்த்து, நன்றாக வேகும்வரை கிளறவும்.


கொள்ளுத் துவையல்
வாணலியில், 4 டேபிள் ஸ்பூன் கொள்ளை படபடவென பொரியும் வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு, வறுத்த முழு உளுத்தம் பருப்பு-2 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகா வற்றல் - 4, பெருங்காயம், உப்பு சேர்த்து, 1 டீஸ்பூன் புளி விழுது, நீர் சேர்த்து துவையலாக அரைக்கவும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.