டயட் வெஜ் குருமா - Diet Veg Kurma

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#1
[h=2]டயட் வெஜ் குருமா[/h]
தேங்காய் சேர்க்காத வெஜ் குருமா இது. எனவே டயட் குருமா என்றும் சொல்லலாம். செய்முறை இதோ:

தேவையான பொருட்கள்
காரட் -2
பச்சைப்பட்டாணி -1 கப்
பீன்ஸ் -10
உருளைக்கிழங்கு -2
காலிபிளவர் -சிறு துண்டு
முட்டைக்கோஸ் -சிறிதளவு
பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
பட்டை கிராம்பு, சோம்பு, ஏலக்காய் -சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழம் -1 மூடி
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர், கோஸ் ஆகியவற்றை பொடியாக அரிந்து பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு. ஏலக்காய் தாளித்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதங் கியதும், அவற்றுடன் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு வதக்கவும்.

குக்கரில் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வதக்கிய வெங்காய கலவை சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். இந்த மசாலாவை லேசாக மசித்து எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கி வைக்கவும். இதில் பச்சைக்கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம்.

தேங்காய் சேர்க்காததால் டயட் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்ற சத்தான குருமா இது. சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், தோசை வகைகளுக்கு ஏற்றது.
 

Revathivenu

Friends's of Penmai
Joined
Jul 12, 2012
Messages
377
Likes
272
Location
chennai
#2
thank u viji for the diet veg kurma. it's useful for me .because me and my husband is a diabetic patient. innum tips irunthal anuppavum.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.