டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#21
[h=2]ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு- ராகுல் காந்தி மீது தமிழிசை பாய்ச்சல்[/h]
ராகுல் காந்திக்கு, யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வகையில் இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

ராஜீவ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்ற ஒரே குரூர உணர்வோடு மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போது செயல்பட்டது. இலங்கையில் மிகப் பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்தார்கள்.

முழுக்க முழுக்க இந்திய அரசு துணை நின்று தமிழினத்தை அழித்தனர். இந்திய அரசின் துணையோடுதான் தமிழர்களை அழிக்க முடிந்ததாக இலங்கை ராணுவ தளபதி வெளிப்படையாக கூறினார்.

அன்று வராத உணர்வு இன்று எப்படி திடீரென்று வந்தது? அதே உணர்வை அன்று வெளிப்படுத்தி இருந்தால் 2 லட்சம் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்க மாட்டார்களே? தமிழர்களை அழித்த பிறகு இப்படி ஒரு போலி நடிப்பு ஏன்?

பிரியங்கா காந்தி வேலூர் ஜெயிலில் நளினியை ரகசியமாக சந்தித்து பேசினாரே, அது என்ன நோக்கத்துக்காக? அதன் பிறகுதானே இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க மத்திய அரசு துணை போனது. அதன் வெளிப்பாடுதானே பிரபாகரனின் மரணமும், இப்போது பிரபாகரன் கொடூரமாக கொல்லப்பட்டது வருத்தமாக உள்ளது என்றால் மக்கள் ஏற்பார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#22
கமல் கட்சியில் நான்?
தமிழிசை அதிர்ச்சி
''மக்கள் நீதி மையத்தில், என்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக, 'இ - மெயில்' வந்துள்ளது,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.


விமர்சனம்

திருப்பூரில், நேற்று அவர் அளித்த பேட்டி: 'மாற்றத்தை கொடுப்போம்' எனக் கூறும் தினகரன், சிறையில் இருப்பவரின் படத்தை போட்டு, கட்சி துவங்குகிறார். வெற்றிடத்தை நிரப்புவதாகக் கூறி, புதிது புதிதாக பலர் கட்சி துவக்குகின்றனர்.

கமல், நெசவாளர், மீனவர் பிரச்னை பற்றி பேசி வருகிறார். அரசியல் யாரும் செய்யலாம்;

தீர்வை, அரசுகளால் மட்டுமே தர முடியும். கமல், தன் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறார்; மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக, என்னை சேர்த்துள்ளதாக, எனக்கு மெயில் வந்துள்ளது. பா.ஜ., மாநில தலைவரையே கட்சியில் சேர்த்துள்ளனர். பொய்யான கட்சியை, அவர் நடத்தி வருகிறார்.

சினிமா துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாதவரா, மாநில பிரச்னைகளுக்கு தீர்வு காணப் போகிறார். ரஜினி,முழுமையாக அரசியலில் இறங்கினால், அவரையும் விமர்சனம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.


கோரிக்கை

சென்னை விமான நிலையத்தில், தமிழிசை அளித்த பேட்டி: குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காட்டிற்குள் மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் செல்பவர்களை கண்காணிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருக்கும் ஆபத்து ஏற்படாத வகையில், பயிற்சி இருக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விஷயத்தில், தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மத்திய அரசு செயல்படும்.

சென்னை-க்கும், மியான்மருக்கும் இடையே, நேரடி விமான சேவை துவங்க, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், சுரேஷ் பிரபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
#23
[h=2]அரசியல் நாகரீகமற்ற செயலை கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும்- தமிழிசை[/h]
அரசியல் நாகரீகமற்ற செயலை கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிக்கு வந்தார்.

தேனி மாவட்ட மலைப்பகுதியில் சுற்றுலா சென்ற கவுந்தப்பாடியை சேர்ந்த புதுமாப்பிள்ளை விவேக் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் மலைப் பகுதியில் நடந்த தீ விபத்தில் பலியானார்கள்.

அவர்களது வீட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்றார். அங்கு இருந்த விவேக் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.


இதே போல் தீ விபத்தில் பலியான விவேக்கின் நண்பர் தமிழ்செல்வன் வீட்டுக்கும் தமிழிசை சென்றார். அங்கு தங்களது ஒரே மகனை இழந்து வாடும் தமிழ்செல்வன் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு வந்த தமிழிசை ஈரோட்டில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நான் தமிழ் தாமரை யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்கிறேன். பொதுமக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. ஈரோடு எனக்கு 20-வது மாவட்டம் இங்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகத்தில் நாகரீகமான அரசியலை முன் எடுத்து செல்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். எங்களால் மட்டுமே ஊழலற்ற வளர்ச்சியான நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.

இன்று புதியவர்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் எதற்கு வருகிறோம்? என்று தெரியாமல் வருகிறார்கள். நாளைய தினம் கூட டி.டி.வி.தினகரன் புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக அறிவித்து உள்ளார்.


இன்னும் சிலர் தமிழகத்தை தலை நிமிர செய்ய வருகிறோம் என்கிறார்கள். சிறைக்கு சென்றவர்கள் படத்தை வைத்து கொண்டு வருகிறார்கள். இவர்களால் தமிழகத்தை எப்படி தலை நிமிர செய்ய முடியும்?

நேற்றைய தினம் கூட நான் ஒரு கருத்தை கூறி இருந்தேன். கமல்ஹாசன் கட்சியில் இருந்து என்னை உறுப்பினராக சேர்த்து கொண்டார்கள் என்று கூறியதாக சொன்னேன். நான் ஒரு தேசிய கட்சிக்கு மாநில தலைவர் என்னை எப்படி அவர்கள் கட்சியில் சேர்த்தார்கள்? என்று தெரியவில்லை.

முதலில் அவர்கள் தவறை ஒத்து கொள்ள வேண்டும். தவறு நடந்து விட்டது. அதை பார்த்து கொள்கிறேன் என்பது தான் ஆரோக்கியமான வி‌ஷயம் ஆகும். சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று.

அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்கள். அதில் அவர்கள் எனது போன் எண்ணில் கரியை பூசி விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு உங்களது பழைய முதலாளி என்றும் கூறி இருக்கிறார்கள். இது என்ன வார்த்தை? என்ன அரசியல் நாகரீகம்? எனது போன் எண்ணை நான் 25 வருடமாக பயன்படுத்தி வருகிறேன். என் இ-மெயில் முகவரியும் அனைவருக்கும் தெரிந்ததே. நான் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு மருத்துவரும் கூட. என்னை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசி கொண்டு தான் வருகிறார்கள். என்ன ஏமாற்று வேலை இது?

இந்த பிரச்சனையை இதோடு முற்று புள்ளி வைக்க நான் விரும்புகிறேன். வளர்க்க விரும்பவில்லை.

சகோதரர் கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த மாதிரியான அரசியல் நாகரீகமற்ற செயலை நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும் உங்கள் இணைய தளத்தில் யாரோ பதிவு செய்த அசிங்கமான வார்த்தைகள் உள்ளது. நீங்கள் இதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசன் கட்சியில் நான் ஏன் உறுப்பினராக வேண்டும்?

சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். காட்டுகிறார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாவால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். பாரதீய ஜனதா தயவு இல்லாமல் தமிழகத்தில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

தேனி மலை தீ விபத்து சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உயிரிழந்த விவேக், திவ்யா, தமிழ்செல்வன் வீட்டுக்கு நான் சென்று வந்தேன். மலை ஏற செல்லும் போது பாதுகாப்பு வழிமுறையை செய்ய வேண்டும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். கன்னியாகுமரி பகுதியில் கடலுக்கு சென்ற 500 மீனவர்கள் மீண்டும் கரைக்கு வரவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறது.

நேற்று சோனியா காந்தி டெல்லியில் 20 கட்சி தலைவர்களுக்கு டீ-பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் சோனியா மகன் கலைஞர் மகள், லாலு மகன் இப்படி சிலர் தான் கலந்து கொண்டார்கள். இவர்களால் பாரதிய ஜனதா கட்சியின் உறுதி தன்மையை மாற்ற முடியாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி ஆரம்பித்துவிட்டது என்று மத்திய மந்திரி கூறிவிட்டார். இந்த விசயத்தில் தேவையற்ற விவாதங்களை கிளப்ப வேண்டாம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
#24
[h=2]ராகுல்காந்தி மீது தமிழிசை பாய்ச்சல் - காவிரி பிரச்சினை பற்றி வாய்திறக்காதது ஏன்?[/h]


அழகான தமிழ் மொழியை விட்டு மாற்றாக இந்தி மொழியை பா.ஜ.க. திணிப்பதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்திக்கு, காவிரி விவகாரம் குறித்து வாய்திறக்காதது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.


அழகான மொழி தமிழ். ஆனால் மாற்று மொழியை திணிக்க முயற்சிக்கிறது பா.ஜனதா என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது:-

தமிழ் அழகான மொழி. தமிழர்கள் நல்லவர்கள் என்பதெல்லாம் ராகுல் காந்திக்கு இப்போதுதான் தெரிந்து இருக்கிறது. என் தாய்மொழி தமிழை அழகான தமிழ்மொழி என்று பாராட்டியதற்காக மகிழ்கிறேன்.

இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி காங்கிரஸ். ஆனால் இப்போதுதான் தமிழ் அழகான மொழியாக கண்ணுக்கு தெரிந்து இருக்கிறது.

ஆனால் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தியாவிலேயே மூத்த மொழி. சமஸ்கிருதத்துக்கும், முந்தைய மொழி என்ற உண்மையை தைரியமாக சொன்னவர் பிரதமர் மோடி.

ஆனால் காங்கிரஸ் செய்த துரோகத்தை தமிழர்கள் மறந்துவிடுவார்கள் என்றோ, மறைத்துவிடலாம் என்றோ ராகுல் கருதினால் ஏமாந்துபோவார்.தமிழகத்தில் இந்தியை திணித்த ஆட்சி காங்கிரஸ் ஆட்சி. மாற்று மொழி திணிப்பில் இருந்து அன்னை தமிழுக்காக போராடிய தமிழர்களை சுட்டு கொன்றது கங்கிரஸ் ஆட்சி. அழகான தமிழ்பேசும் அழகிய தமிழர்களை இலங்கையில் பலி கொடுத்து ஆத்திரத்தை தீர்த்து கொண்டது காங்கிரஸ்.

இது நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு அல்ல. நேற்று எங்கள் கண்முன்னால் நீங்கள் நடத்திய கொடூரம். அதை இன்றே மறந்துவிடுவோம் என்று எப்படி நம்புகிறீர்கள்?

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பச்சை துரோகம் செய்துவிட்டு தமிழையும், தமிழர்களையும் காக்க வந்தவர்கள் போல் பகல் வே‌ஷம் போடவேண்டாம்.

தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினை காவிரி பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு மறுக்கிறதே, அங்கு காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கலாமே. அதுபற்றி காங்கிரஸ் பொதுக்குழுவில் ராகுல் வாய்திறக்காதது ஏன்? பிரித்தாளும் அரசியல் செய்வது காங்கிரசா? பா.ஜனதாவா?

தேர்தல் நேரத்தில் எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காண வேண்டாம்

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#25
[h=2]ராமர் ரதயாத்திரை எதிர்ப்பு இந்துக்களை அவமானப்படுத்துவது - தமிழிசை கண்டனம்[/h]


அமைதியமான முறையில் நடந்துவரும் ராமர் ரதயாத்திரையை எதிர்ப்பது இந்துக்களை அவமானப்படுத்துவது என்று பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

ராமர், சிலையுடன் ஒரு ரதம் கடந்த பல நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று இன்று தமிழகத்துக்கு வருகிறது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கைதாகும் அளவுக்கு என்ன இருக்கிறது?

நாடு முழுவதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. ஒரு அமைப்பு தங்கள் கருத்துக்களுடன் ஒரு ரத யாத்திரையை நடத்துகிறது. அதில் நாட்டுக்கோ, மதத்துக்கோ சமூகத்துக்கோ எதிரான எந்த கருத்தும் பரப்பப்படவில்லை. ராமர் சிலையை மட்டும் வைத்து யாத்திரை செய்கிறார்கள்.

இது தவறா? 85 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரு தெய்வ சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லகூட அனுமதிக்க கூடாது என்று சொல்வதும், எதிர்ப்பு தெரிவித்து கைதாவதும் இந்துக்கள் நம்பிக்கை சார்ந்த எந்த வி‌ஷயங்களும் தமிழ்நாட்டில் நடைபெற கூடாது என்று திட்டமிட்டு அப்பட்டமாக செயல்படுவது தெரிகிறது.

ஒருவேளை மற்ற மதத்துக்கு எதிரான கருத்துக்களையோ, ஒவ்வாத கருத்துக்களையோ தெரிவித்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ராமர் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் வரவேற்கட்டும். வணங்கட்டும். உங்களுக்கு விருப்பமில்லையா முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட வேண்டியது தானே?

ரதத்தையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? மு.க.ஸ்டாலினுக்கும் ரத யாத்திரை தடுப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்துக்களின் உரிமையை பறிக்க நீங்கள் யார்? இவர்கள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே இருக்க கூடாது. கடவுள் வழிபாட்டு செயல்களே நடைபெற கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் இருக்கிறது. ஒட்டுமொத்த தேசம் சார்ந்த உரிமையை தமிழ்நாட்டில் மட்டும் பறிப்போம் என்ற உணர்வு அபாயகரமான விளைவுகளை உருவாக்கும்.

அமைதியாக தங்கள் வழிபாட்டு நிகழ்வுகளை கொண்டாடும் இந்துக்களை அவமானப்படுத்தாதீர்கள். உங்கள் அரசியலுக்காக மத வழிபாடுகளை கொச்சைப்படுத்தாதீர்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#26
[h=1]'யார் பெரியவர் என்று பார்த்துவிடுவோம்!'- சவால்விடும் தமிழிசை[/h]


“இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். பெரியார் பிறந்தது பெரிதா ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்தது பெரிதா என்று எதிர்காலத்தில் தெரியும்” என்று கோவையில் ஆவேசமாகப் பேசியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.


கோவை மாவட்ட பி.ஜே.பி தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தகுமார் வீட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்ட தமிழிசை செளந்தரராஜன், “கடந்த 7ம் தேதி, கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். வீசியவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இப்படியான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

மாவட்டத் தலைவர் வீட்டிலேயே தாக்குதல் நடப்பது போலீஸின் அஜாக்கிரதையைக் காட்டுகிறது. இந்தச் சம்பவத்துக்கு இதுவரைக்கும் ஒரு அரசியல்கட்சியில் இருந்துகூட கண்டனங்கள் வரவில்லை. பி.ஜே.பி தாக்குதலுக்கு ஆளாவதற்காகவே இருக்கிற இயக்கமா? இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதுதான் பாஜகவினர் மீது நடத்தப்படுகின்ற கடைசித் தாக்குதலாக இருக்க வேண்டும். நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது. ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை. ரத யாத்திரை வரக்கூடாது என்று சொல்லி பிரச்னை செய்பவர்களால்தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது.

இந்துக்கள் அத்தனைபேரும் சிந்தனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. ஏனெனில், உங்களது ராமரையும், சீதாவையும், அனுமனையும் தாங்கிக் கொண்டு ஒரு ரதம்கூட தமிழகத்திற்குள் வரக் கூடாது என்று சொல்பவர்களுக்கு இந்துக்கள் எதற்காக ஓட்டுப் போடவேண்டும்?. உங்களுக்கு ஓட்டு மட்டும் வேண்டும் ரதம் வேண்டாமா. கேட்டால், இது பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ். இங்கு பெரியார் மட்டும்தான் பிறந்தாரா? ஆழ்வார்களும் நாயன்மார்களும் இங்கேதான் பிறந்தார்கள். பெரியார் பிறந்தது பெரிதா? இல்லை நாயன்மார்கள், ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்று வருங்காலத்தில் பார்ப்போம். வரும் 23-ம் தேதி, பி.ஜே.பியினர் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலை கண்டித்து கோவையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போகிறோம். அன்றைக்கு தமிழகமே குலுங்கும். இந்தியாவே திரும்பிப் பார்க்கும். இனிமேல் பி.ஜே.பியினரைத் தொடும் துணிச்சல் யாருக்கும் வரக் கூடாது'' என்றார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#27
[h=2]காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே - தமிழிசை சவால்[/h]


காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே என்று தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்தார்.பெரம்பலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோட்டில் மண்டல மாநாடு என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு மாநாட்டினை நடத்தி உள்ளது. இதில் இருந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உள்ளது என்பது தெரிகிறது. தமிழகத்தில் வலுப்பெற்று வரும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் நம்ப தொடங்கி விட்டார்கள்.சென்னை விமான நிலையத்தில் டீ குடிக்க சென்ற முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விலையை கேட்டு விட்டு டீ குடிக்காமல் சென்றுள்ளார். இதில் இருந்து அவர் மக்களை விட்டு எவ்வளவு விலகி இருக்கிறார் என்பது தெரியவருகிறது. கிராமப்புறத்தில் டீ விலை எவ்வளவு, விமான நிலையத்தில் எவ்வளவு என்பது கூட தெரியாமல் இருக்கிறார்.

தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் (டி.டி.வி.தினகரன் அணியினர்) நன்றி மறக்காமல் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி உள்ளனர். அதை படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். ஆதரவாக படம் எடுத்தால் மாலை போடுவார்கள், எதிராக எடுத்தால் தாக்குவார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கால அவகாசம் உள்ளது. அதுவரை பொறுமையோடு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக பயமுறுத்துகிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் அவர் விரைந்து சென்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
#28
[h=1]தடம் மாறும் தமிழிசை... காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு கொடி பிடிக்கும் தமிழக பி.ஜே.பி!’ #WeWantCMB[/h]
முன்பைப்போலவே... இப்போது இன்னும் அதிகமாகத் தமிழகத்தில் காவிரிக்கு ஆதரவாய்க் குரல் எழுந்திருக்கிறது. அதில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்பதே வாதமாய் இருக்கிறது. ஆனாலும், கர்நாடகச் சட்டசபைத் தேர்தலால் மெளனம் காக்கிறது, மத்திய அரசு... அந்த அரசைச் சார்ந்திருப்பதால் காய் நகர்த்த முடியாமல் இருக்கிறது, தமிழக அரசு. இதன் விளைவு, கொதித்து எழுகின்றன எதிர்க்கட்சிகளும்... விவசாயச் சங்க அமைப்புகளும்.உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு!
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில், “காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான திட்டத்தை ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” எனக் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் விதித்த இந்தக் கெடு நேற்றுடன் (29-ம்) முடிவடைந்தது. இந்த நிலையில், ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்பதற்குப் பதிலாக, ‘காவிரி மேற்பார்வைக் குழு’ என்ற ஒன்றை மத்திய அரசு அமைக்கவிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. இதன் காரணமாகவே காவிரிக்கு ஆதரவாகக் குரல்கள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன.


“மோடி வஞ்சித்துவிட்டார்!”
இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி நதிநீர்ப் பிரச்னையில் மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக வேறு எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம். பதவியில் நீடிப்பதற்குக் கைம்மாறாக மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்றார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, “காவிரி வழக்கில் தீர்ப்பின் மூலம் தமிழகத்தைப் பிரதமர் மோடி வஞ்சித்துவிட்டார்.

தமிழகத்தைச் சிதைக்க வேண்டும், கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதே அவருடைய திட்டமாக இருக்கிறது. அதுவே, காவிரி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலிக்கிறது” என்றார்.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்குக் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மட்டுமே பிரதானமாகத் தெரிவதால் காவிரிப் பிரச்னையில், தெரிந்தே தமிழகத்துக்குத் துரோகம் செய்கின்றன. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கு நாற்காலியே பிரதானம் என்று கருதுவதால், அவையும் தங்களின் லாபத்துக்காகக் காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளைத் தாரைவார்க்கின்றன” என்றார்.


“தற்கொலை செய்துகொள்வோம்!”
இப்படி ஒருபுறம், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் வேளையில்... மறுபுறம், மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 15 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தை நடத்திவருகின்றனர், அ.தி.மு.க எம்.பி-க்கள்.

அவர்களது போராட்டத்தால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. “மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அ.தி.மு.க எம்.பி-க்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்றும், ராஜினாமா செய்வோம்” என்றும் அவர்கள் பேசினர். எனினும், அவர்களது போராட்டத்துக்குச் செவி கொடுக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.


அதிலும் குறிப்பாக... பிரதமர் மோடி இதுகுறித்து அறவே வாய் திறக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியஸ்தராய் இருக்க வேண்டிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குக் காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி. அது எப்போது அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது” என்கிறார். மத்திய அமைச்சர்தான் அப்படியென்றால், தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரபலங்கள் சொல்லும் கருத்துகள் அதற்குமேல் இருக்கின்றன.


“காவிரி விவகாரத்தில் நடப்பது அரசியலா?”
பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா,“காவிரி நதிநீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தைகள் இல்லை. நதிநீர்ப் பங்கீடு குறித்த திட்டம் வேண்டும் என்றுதான் இருக்கிறது” என்கிறார். மத்திய இணையமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், “காவிரிப் பிரச்னையை இந்த அளவுக்கு மோசமாக எடுத்துச் சென்றதற்கு முழுக் காரணம் காங்கிரஸ்” என்று அந்தக் கட்சி மீது குற்றஞ்சாட்டுகிறார்.


மேலும் அவர், “நவநீதகிருஷ்ணன் எம்பி. (காவிரி விவகாரம் குறித்துப் பேசியபோது) தற்கொலை செய்யப்போவதாகக் கூறுகிறார். அவர் வீட்டில் உள்ளவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா; கட்சிக்கார்கள் ஒப்புக்கொள்வார்களா; தமிழ்நாடு ஒப்புக்கொள்ளுமா அல்லது விவசாயிகள்தான் ஒப்புக்கொள்வார்களா” என்று நம்மிடமே கேள்வி கேட்கும் அவர்... கடைசியில், “ ‘எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப்போவதாகச் சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை ஏமாற்றவேண்டும்? இப்போது நடந்துகொண்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல்” என்கிறார். ஆம், உண்மையிலேயே காவிரி விவகாரத்தில் நடப்பது அரசியல்தான்" என்கிறார்
“பி.ஜே.பி-யால்தான் முடியும்!”
தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “ராஜினாமா செய்யச் சொன்னாலே ஒருவர்கூட வரமாட்டார்கள்; தற்கொலை செய்யவா அ.தி.மு.க எம்.பி-க்கள் வருவார்கள்” என்று கிண்டலடிக்கிறார்.

மேலும் அவர், “மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தாலும்... குழு அமைத்தாலும் தமிழகம் அதை ஏற்க வேண்டும்” என்கிறார். அதேவேளையில், ‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது’ என்று கருத்து தெரிவித்திருந்த தமிழக அரசியல் தலைவர்களுக்கு.... தன் முகநூல் பக்கத்தில், “தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் சிறிதளவும் பி.ஜே.பி-க்கு இல்லை. காவிரி மேலாண்மை அமைய வேண்டும் என்றால், அது பி.ஜே.பி-யால்தான் முடியும். இன்று தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது எனக் கூறுபவர்கள் தமிழகத்தை நெடுநாள் வஞ்சித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி, மத்திய அரசுக்குச் சாதகமாய்க் காய் நகர்த்துவதுதானே மாநிலத்தில் இருக்கும் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளுடைய கடமை. அதைத்தானே அவர்கள் செய்கிறார்கள்; செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மத்திய அரசின் முழுக்கவனமும் கர்நாடகத் தேர்தல் மீதே இருக்கிறது என்பதைக் காட்டுவதோடு, காவிரி மேலாண்மை வாரியம் என்பது கைகழுவப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#29
[h=2]காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்காக பாடுபடுவேன்- தமிழிசை பேட்டி[/h]


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்காக பாடுபடுவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஓசூரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார்.


பா.ஜ.க.வினர் அவரை வரவேற்றனர். அதன் பிறகு, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 13 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்காக பாடுபடுவேன்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. அந்த ஆலையை மூடும் விவகாரத்தில் மத்திய அரசு தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
#30
எஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்

1524337280624.png

சேலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண் பத்திரிக்கையாளர்ளுக்கு எதிராக எந்த கட்சியை சேர்ந்தவர்களும் தவறான கருத்துக்களை வெளியிட்டால் அது கண்டிக்கத்தக்கது.

ஒரு பெண் பத்திரிக்கையாளர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினார். நான் உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 நிமிடங்களில் அந்த பதிவுகள் அழிக்கப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கருத்துகளை தவறுதலாக பதிவு செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்க செயலாகும். இணையதளத்தில் வரம்பு மீறி கருத்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் பத்திரிகையாளர் குறித்த கருத்துக்கு எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.