டால்கம் பவுடரில் இருக்கும் நச்சு மூலம் ஏ

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]டால்கம் பவுடரில் இருக்கும் நச்சு மூலம் ஏற்படும் அபாயங்கள்![/h]மிருதுவானது, வெண்மையானது, நறுமணம் வீசக்கூடியது என கூவிக் கூவி கலர் படம் ஓட்டி விற்கப்படும் டால்கம் பவுடரில் எண்ணற்ற நச்சுப் பொருட்களின் கலப்படம் தான் அதிகம் இருக்கிறது. வியர்வையைக் கட்டுப்படுத்தும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும் என கூறும் டால்கம் பவுடரில் உண்மையாக நிறைய தீமைகள் தான் நிறைந்திருக்கிறது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றும் நிறைய டால்கம் பவுடர் தயாரிப்பு நிறுவனங்கள் இது பாதுகாப்பானது தான் என்று கூறினாலும், இதில் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையிலான அபாயங்கள் இருக்கத் தான் செய்கிறது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்...

டால்கம் பவுடர் - விஷம்!
டால்கம் பவுடரில் டால்க் எனப்படும் கனிமம் உள்ளது. இதை தப்பித் தவறியும் வாயில் அல்லது உணவிலோ கலந்துவிட்டாலோ, விழுங்கிவிட்டாலோ ஆபத்து தான் மிஞ்சும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் அனைத்து வகை டால்கம் பவுடர்களுக்கும் பொருந்தும்.

டால்கம் பவுடரினால் ஏற்படும் பிரச்சனைகளின் அறிகுறிகள்

கண் மற்றும் தொண்டையில் எரிச்சல்

வயிற்று போக்கு

வாந்தி

இருமல்

நெஞ்செரிச்சல் காய்ச்சல்

சுவாசப் பிரச்சனைகள்
தொடர்ந்து டால்கம் பவுடர் உபயோகப்படுத்துவதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

நிமோனியா

டால்கம் பவுடரை சுவாசிக்கும் போது உள் இழுப்பதால், குழந்தைகளுக்கு நிறைய நிமோனியா பிரச்சனை வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு உடல் முழுக்க டால்கம் பவுடர் பூசும் போது. கவனமாக இருக்கவும்

டால்கோசிஸ் (Talcosis)


டால்கம் பவுடர் உபயோகப்படுத்தும் போது அதன் துகள்கள் காற்றில் பறக்கின்றன. அவை நாம் சுவாசிக்கும் போது நாசியின் வழியே உடலினுள் செல்கின்றன. இதனால், வீசிங், இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள் வருகின்றன.

கருப்பைப் பிரச்சனை

பெரும்பாலான பெண்கள் பிறப்புறுப்பில் டால்கம் பவுடர் உபயோகிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கருப்பை வாயில் அலர்ஜி மற்றும் புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கருப்பை வாய் புற்றுநோய்

பெண்கள் அவர்களது பிறப்புறுப்பில் டால்கம் பவுடர் உபயோகப்படுத்தும் போது, அதன் வழியாக டால்கம் பவுடரின் நச்சுத்தன்மை பிறப்புறுப்பின் உள்ளே செல்கிறது. இதன் காரணமாய், பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என அமெரிக்க மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

கருப்பை அகப்படலப் புற்றுநோய்

மாதவிடாய் முடிவில் இருக்கும் பெண்களுக்கு டால்கம் பவுடர் உபயோகப்படுத்துவதன் மூலம் கருப்பை அகப்படலப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாய் ஹார்வேர்ட் மருத்துவ பள்ளியில் கண்டுபிடித்துள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய்

சுவாசிக்கும் போது நாசியின் மூலம் உள்செல்லும் டால்கம் பவுடரின் காரணமாக நுரையீரல் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மற்றும் இதன் அதிகப்பட்ச நிலையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்புகள் இருப்பதாய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: டால்கம் பவுடரில் இருக்கும் நச்சு மூலம் &#2

really very important information you have shared. thank you!
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
Re: டால்கம் பவுடரில் இருக்கும் நச்சு மூலம் &#2

Thanks for sharing this information.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.