டாஸ்மாக் கடைகளை மூடுங்கம்மா....!!!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#1

இன்று தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடும் பணம் கொழுக்கும்.... நாட்டிற்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் ஒரே தொழில் -- டாஸ்மாக்..!!அந்த காலத்துல "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"ன்னு சொல்லுவாங்க... ஆனா இப்போ அதை கொஞ்சம் மாற்றி.., "டாஸ்மாக் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்"ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க...!இதனால எத்தனை குடும்பம் சீரழியுதுன்னு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக தெரிந்து, மிகவும் மனம் வருந்தி.... இதற்கு என்னதான் தீர்வு என யோசிக்கும் நேரத்தில் தான்... இப்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கு போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது...! அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனைகள், பொது பிரச்சனைகள் எல்லாம் பேசி, தீர்க்கப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு எல்லாம் மூல காரணம் "குடி"..!!"குடி குடியை கெடுக்கும்" என்று சும்மா ஒரு லைனை அந்த பாட்டிலின் ஒரு ஓரத்தில் கடமைக்கு மிக சின்னதாக போட்டுவிட்டு..., எல்லாரும் நல்லா குடிச்சு சாகுங்கடான்னு வீதிக்கு ஒரு கடையை திறந்து வைச்சுட்டாங்க....!! முன்பு வீதிக்கு ஒரு நாடார் கடை, ஒரு டாக்டர், கோவில், கொஞ்சம் தூரம் போனா ஒரு ஸ்கூல் என இருந்தது போய்..., இப்போ டாஸ்மாக் தான் பிரதானமாக இருக்கு...!!ஆண்கள் குடித்தது போக... இப்போ பெண்களும், பள்ளி மாணவர்களும் குடிச்சு சீரழிஞ்சு... வீட்டையும், நாட்டையும் கெடுக்குறாங்க...! "இந்தியா இளைஞர்களின் கையில் இருக்கிறது" ன்னு சொல்லிட்டு போன மறைந்த அப்துல் கலாம்..., அந்த இளைஞர்களே மதுவின் கையில் இருக்காங்க என்பதை கவனிக்க தவறி விட்டார்...!~~ அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது என்பதற்காக குடிமக்களின் நலனை கவனிக்காமல் விட்டால் எப்படி...??

~~ இதை கேள்வி கேட்பார் யாருமே இல்லையா....??

~~ எதிர்கட்சிகள் கேட்கலாமே...!! ஆனா அப்படி கேட்டா, அடுத்த எலெக்க்ஷனுக்கு மக்களை ஓட்டு போட வைக்க..., பிரியாணியும், குவார்ட்டரும் வாங்கி தர முடியாம போய்டுமே...!

~~ நாட்டை ஆளும் முதல்வர் யாருன்னே தெரியலை...?? அவங்களை நாம கேட்க முடியாது.... கேட்டாலும் பதில் வராது... அப்படியே பதில் வந்தாலும், அதைக் கேட்க நாம வெளியில இருக்க மாட்டோம்... ஜெயிலில் களி தின்னுக்கிட்டு இருப்போம்.. இல்லேன்னா..., அடையாளம் தெரியாத பிணம் எங்காவது கிடக்கும்...!!

~~ அமைச்சர்களிடம் கேட்கலாமா...?? மூச்...

~~ அவர்களுக்கு அடுத்து, அதிகாரிகள், காவல்துறை .... இவர்களிடம் அடுத்த மூச்....வேற என்னதான் செய்யுறது..., மக்களே போராடலாமா....?? போராடிய மக்களை ஒடுக்கிய... அடித்து விரட்டிய போலீஸ்னு அடுத்தநாள் பேப்பர்ல நியூஸ் வரும்...


அட ஆண்டவா.... இதுக்கு என்னதாண்டா வழி...?? இப்படியே குடிச்சு குடிச்சு ஜனங்க சாக வேண்டியது தானா...?? குடியால ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் அப்படியே இருக்க வேண்டியது தானா...?? அதனால பல குடும்பங்கள் அழிஞ்சு நாசமா போகுதே... பள்ளி பிள்ளைகள் கூட குடி பழக்கத்துக்கு ஆளாகி வீணாகுதேன்னு எல்லாரும் புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தானா...??இப்படி ஏகப்பட்ட "தானா" க்கள் என் மண்டைக்குள் வண்டு குடைவது போல ரீங்காரம் இட்டுக்கிட்டே இருந்துச்சு.... வெறுத்துப் போய்.., நமக்குத்தான் இப்படி இருக்கா..., மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு பார்க்க..., வழக்கம் போல இணையத்தை குடைஞ்சா...!! ஏகப்பட்ட பேரோட ஆதங்கம் எழுத்தா வருது....!! அதையெல்லாம் இங்க ஷேர் பண்ணுறேன்.... பாருங்க மக்களே...!! அப்படியே உங்களின் கருத்தையும் ஓரிரு வரிகளில் பதிவு செய்யுங்க...!! 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#2

உலகத்திலேயே குடிகிறதுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்ட ஒரே அரசு நம்ம தமிழ்நாடு அரசு தான்... வாழ்க அம்மா ஆட்சி... 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#3
தமிழக அரசின் இலவச பொருட்கள்....ஆந்திரா நெல்லூரில் கூவி கூவி விற்கப்படும் அற்புதகாட்சி ..

எல்லோருக்கும் ஏன் கிடைக்கவில்லை என்று இப்போ தெரியுதா ? 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#4
தமிழ் ஈழத்து இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்டம்..


மதுவிற்கு எதிரான மாணவர் போராட்டம்...


பணத்தை காட்டி ஒட்டு வாங்க முடியாத கூட்டம் இது, பிரியாணிக்கும் குவாட்டருக்கும் மயங்காத கூட்டம் இது, நல்லவை எதையும் செய்யாமல் காமராஜர், அண்ணா அவர்களின் பெயரை மட்டும் வைத்து ஏமாத்த முடியாத கூட்டம் இது, சாதிக்கு செவி சாய்க்காத கூட்டம் இது... 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#5
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கும் தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் பைக்கில் சம்பவ இடத்திற்கு சென்றேன்.


வழியெல்லாம் இருந்த அரசு சாராயக்கடைகளின் முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அதைக் கடந்து பச்சையப்பன் கல்லூரி அருகே இருந்த.. மாணவர்களால் சூறையாடப்பட்ட கடைக்கு சென்றேன். போர்களம் போல் இருந்தது. பாட்டில்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கடை மூடப்பட்டிருந்தது. போலீஸார் ஆட்சியாளர்களின் உத்தரவிற்கேற்ப பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அந்த கடை வழியா பலமுறை போய் வந்திருக்கிறேன். எப்போதும் கூட்டம் அள்ளும். ஒரு நாலு பேர் ரோட்டில் விழுந்து கிடப்பார்கள். இன்று மூடப்பட்ட அந்த கடையை பார்க்க உள்ளுக்குள் எக்கச்சக்க சந்தோசமாக இருந்தது.


கடை அருகே வண்டியை நிறுத்திவிட்டு அருகே நின்று கொண்டிருந்த காவலர் ஒருவரிடம் சும்மா பேச்சுக் கொடுத்தேன்..


``என்ன சார்.. நிலவரம் எப்படி இருக்கு..” என்று சிரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டேன்.


``என்ன சார் பண்றது.. ஐநூறு பேர் வந்தானுங்க.. நாங்க நாலுபேர் என்ன பண்ண முடியும்.. அடிச்சு நொறுக்கிட்டு போய்ட்டானுங்க...


கடையை மூடணுமா வேண்டாமானு அரசாங்கம் முடிவு செய்யணும்.. மாணவர்கள் எதுக்கு வர்றாங்க.. வாட்ஸ் தி கனெக்ஸன் பார் ஸ்டண்ட்ஸ்.. ? “ என்றார் கொதிப்பு அடங்காமல்.


``ஆமா.. உண்மை தான் சார்.. ஆனா கவர்மெண்டு கடைய மூட மாட்டேங்குதே.. அப்புறம் என்ன பண்ணுவாங்க..


பாருங்க.. முன்னாடியெல்லாம் உங்களைப் பார்த்தா சாராய வியாபாரிங்க ஓடி ஒளிவாங்க..


ஆனா இப்போ பாருங்க.. அவங்களோட சாராய கடைக்கு நீங்க பாதுக்காப்பு கொடுத்துட்டு நிக்குறீங்க.. எவ்வளவு அவமானமா இருக்கு.. உங்க மரியாதையை காப்பாத்தவும் தான் சார் அவங்க போராடியிருக்காங்க..” என்றேன்.


அவரிடமிருந்து பதில் எதுவும் இல்லை.. அமைதியாக இருந்தார்..


இன்று டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய போராட்டத்தை முன்னெடுத்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுக்கும்.. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் வாழ்த்துகள்..


தமிழகமெங்கும் டாஸ்மாக் அரக்கனை எரித்து தகர்க்கும் இந்த போராட்ட தீ பற்றி பரவட்டும் .


-கார்ட்டூனிஸ்ட் பாலா 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#6
இப்படியே நிறைய செய்திகள்....!!


டாஸ்மாக் கடையை மூட தமிழக அரசு யோசிப்பதற்கு காரணம் -- அதில் வேலை செய்யும் ஊழியர்களின் வேலை இழப்பு... இதெல்லாம் ஒரு காரணமா...?? அந்த 2 லட்சம் ஊழியர்களின் குடும்பத்திற்காக யோசிப்பவர்கள்..., மீதி உள்ள 7 கோடிக்கும் மேற்பட்டவர்களை பற்றி யோசிக்க தவறுவது ஏன்...??


இதைப் பற்றி ஒரு பதிவும் இணையத்தில் உள்ளது... அது...டாஸ்மாக் கடைகளை அடைத்தாலும் 2 லட்சம் பேருக்கு வேலை, தமிழக அரசுக்கு நஷ்டம் வராது... ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் சம்பாதிக்க அரசுக்கு சில யோசனைகள்.....டாஸ்மாக் கடைகளை அடைத்தால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு. அதனால் தான் டாஸ்மாக் கடைகளை அடைப்பதற்கு தமிழக அரசு தயங்கி வருகிறது. அதனால் "தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்கு ஓராண்டில் ஏற்படும் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டி, கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவது குறித்தும், வேலை இழக்கும் "டாஸ்மாக்" ஊழியர்கள் 30 ஆயிரம் பேருக்கு மாற்று வேலை வழங்குவது குறித்தும் 14 வழிமுறைகளை பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் பட்டியலிட்டு யோசனைகளை தெரிவித்துள்ளது.1. தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், அணைகள் ஆகியவற்றை தூர்வாரி மணலை விற்பனை செய்தால், ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


2. தென்மாவட்டங்களில் தாதுமணம் விற்பனை செய்வதை அரசு மயமாக்கினால், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


3. மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக கொள்முதல் விலை கொடுத்து வாங்காமல் இருந்தால், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 750 கோடி மிச்சமாகும்.


4. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புதுவீட்டுமனைகள்/ மனைப்பிரிவுக்கு திட்ட மற்றும் கட்டுமான ஒப்புதல் அளிக்க கட்டணம் வசூலித்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.


5. புதிய வீடுகளுக்கு சொத்துவரி/ விரிவாக்க பகுதிகளுக்கும் சொத்துவரி/ திருத்திய சொத்துவரி என வசூலித்தால், ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.


6. கோவில் நிலங்கள், கடைகளை முறைப்படுத்தி குத்தகை-வாடகை வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


7. அரசு புறம்போக்கு, காலி நிலங்களை வணிகப்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


8. வீதிகள், சாலைகளில் நிறுத்தப்படும் 1 கோடியே 30 லட்சம் வாகனங்களுக்கு வாடகை கட்டணம் வசூலித்தால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


9. சுற்றுலா தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா வரி வசூலித்தால், ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


10. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், தண்ணீர், மின்சாரம் வழங்குவதில் சலுகைகளை நிறுத்தினால், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் மிச்சமாகும்.


11. உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படாத நிலுவை வரியை நிதி இழப்பு தணிக்கை மூலம் செயல்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.


12. வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கி, ஆசிய வங்கிகளிடமிருந்து கடன் பெறாமல், நபார்டு உள்பட தேசியமயமாக்கப்பட்ட இந்திய வங்கிகளிடமிருந்து கடன் பெற்றால் ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வட்டி தொகை குறையும்.


13. மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். எனவே டாஸ்மாக கடைகளை மூடுவதால் வேலை இழக்கும் 30 ஆயிரம் பேருக்கு இத்திட்ட பணிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


14. 2 லட்சம் பேருக்கு மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என ஊதியம் வழங்கினால் கூட ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி மட்டுமே செலவாகும். இது மொத்த கூடுதல் வருவாயான ரூ.5 லட்சம் கோடியில் 1 சதவீதத்துக்கு குறைவானது தான்.
எனவே முழு மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த ஆளும் கட்சி முன்வந்து தமிழக மக்களை காத்திட வேண்டும்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,724
Location
CHROMEPET
#7
செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,672
Location
Malaysia
#8
Menakettu ivlo velaigal seivathai vida,
Summave irunthu, kodikaanakkil varumanam varuvathai viduvaangala enna.
Appadiye moodinaalum, athu kanthudaippa than irukkum.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#10
Menakettu ivlo velaigal seivathai vida,
Summave irunthu, kodikaanakkil varumanam varuvathai viduvaangala enna.
Appadiye moodinaalum, athu kanthudaippa than irukkum.சரியா சொன்னீங்க கோமதி க்கா....
நோகாமல் நொங்கு தின்ன யாருக்கு தான் கசக்கும்...??
இதுபோன்ற கண் துடைப்புகள் தான் நிறைய பார்த்து இருக்கோமே...!! அதேபோல இதையும் பார்க்க வேண்டியது தான்...!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.