டீன்-ஏஜ் பருவம் இன்பம் நிறைந்ததே!

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரது உடலிலும் மாற்றங்கள் ஏற்பட துவங்குகிறது. சிலர் 10 வயதாகும்போதே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் விதிவிலக்காக 14 வயதுக்குமேல் உடல் மாற்றங்களை சந்திக்கிறார்கள்.
இருவரின் வளர்ச்சிக்கும் வெவ்வேறு ஹார்மோன்கள் தேவைப்படுகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைப்படும். அதேநேரத்தில், ஆண்களுக்கு புரோஜெஸ்டீரான் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது.
பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அவளது மார்பகத்தை பெரிதாக்குகிறது. உடலை மென்மையாக்குகிறது. கூடவே, அவளது குரலையும் இனிமையாக்குகிறது. ஆணுக்கான ஹார்மோன், அவனது குரலை கம்பீரமானதாக மாற்றுகிறது. முகத்தில் மீசை முளைக்கிறது.
இப்படி ஹார்மோன் மாற்றங்களால்-தூண்டுதலால் ஆண், பெண் இருவரது உடலும் அழகாக மாறுகிறது. மென்மைத் தன்மைக்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்மையை இன்னும் அழகாக்குகிறது.
அழகு ஆபத்தானது என்று சொல்வார்கள். டீன்-ஏஜில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்களும் ஒரு வகையில் ஆபத்தை தருகின்றன. அதாவது, மன அளவில் சில பிரச்சினைகளையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.
சிறு வயதில் ஏற்படாத மாற்றம், இப்போது திடீரென்று ஏற்படுவது ஏன்? என்று குழம்பிப் போய்விடுகிறார்கள் இந்த பருவ வயதினர்.
ஆணைக் காட்டிலும் பெண்தான் இந்த டீன் ஏஜில் அதிகம் குழம்பிப் போகிறாள் என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள். காரணம், அவள் பூப்படைவதுதான்.
அதுவரை ஆண், பெண் வேறுபாடு பார்க்காமல் ஓடியாடித் திரிந்தவள், உடலில் இருந்து முதன் முறையாக கரு முட்டையானது வெடித்து ரத்தப்போக்காக வெளிப்படும்போது அவள் பயந்தே போய்விடுகிறாள். அந்தநேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற வயிற்றுவலி அவளை இன்னும் பயம்கொள்ள வைத்துவிடுகிறது.
இந்தநேரத்தில் அவளுக்கு சரியான ஆலோசனை சொல்லப்பட வேண்டும் என்பது டாக்டர்கள் மற்றும் மனோதத்துவ நிபுணர்களின் கருத்து.
முதன் முதலாக தன்னிடம் இருந்து வெளிப்பட்ட மாதாந்திர ரத்தப்போக்கை (பீரியட்ஸ்) கண்டு அந்த வயதுக்கு வந்த பெண் மிரளும்போது, "அதனால் ஆபத்து ஏதும் கிடையாது; எல்லாப் பெண்களுக்குமே அவ்வாறு வரும்; எனக்கும் அப்படித்தான்" என்று அவளது தாய் கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு ஆதரவாக பேசும்போது பூப்படைந்த பெண்ணானவள் மனம் தெளிவடைகிறாள். பெண்களுக்கு என்று விதிக்கப்பட்ட அந்த இயற்கை நியதியை ஏற்றுக்கொள்ள தயாராகிறாள்.
இதேபோல்தான், பையன்கள் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. பெண்களைப் போன்று பயப்படும்படியாக மாற்றங்கள் எதுவும் இவர்களது உடலில் ஏற்படுவது இல்லை.
முகத்தில் மீசை அரும்பும். குரல் கரகரப்பாகும். மறைவான இடங்களில் ரோமங்கள் முளைக்கும். உடல் வளர்ச்சியும் சற்று அதிகமாக இருக்கும். மற்றபடி, சந்தேகப்படும் அளவுக்கு மாற்றங்கள் இவர்களிடம் ஏற்படாது என்பதால், அவர்கள் டீன் ஏஜ் பற்றி அச்சம்கொள்ளத் தேவையில்லாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் காதல் வலையில் விழுந்தால் அல்லது விரித்தால்தான் அங்கே அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படும்.
அதேநேரம், இவர்களது குரல் அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றம் அவர்களிடம் சந்தேகக் கேள்வியை ஏற்படுத்தலாம். அதற்கு அவர்களது பெற்றோரே விளக்கம் கொடுக்கலாம்.
"நீ பெரிய பையன் ஆகிவிட்டாய். அதனால்தான் என்னைப்போல் உன் குரலும் மாறி வருகிறது" என்று அந்த பையனின் தந்தை கவுன்சலிங் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
- இப்படி பருவம் ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கையாக இருந்தாலும், மிகச்சில பெண்கள் விதிவிலக்காக பருவம் அடையாமல் இருந்து விடுகிறார்கள். பரம்பரைத்தன்மை, உடல் வளர்ச்சியின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருப்பதால், அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
இப்போதைய உணவு பழக்க வழக்கங்களால் சில பெண் குழந்தைகள் 10 வயதிலேயே 16 வயதிற்குரிய வளர்ச்சியை எட்டி விடுகிறார்கள். ஆனால், உரிய காலம் வந்தும் பூப்படையாத பெண்கள் 17-18 வயதை அடைந்தாலும் உடல் வளர்ச்சி இல்லாமல் காணப்படுவார்கள்.
உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் கிடைக்காததுதான் இவர்களது உடல் வளர்ச்சி இன்மைக்கும், பூப்படையாத தன்மைக்கும் காரணமாக அமைகிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணலாம்.
இந்த டீன்-ஏஜின் அடுத்த தொல்லை வியர்வை நாற்றம். ஆண், பெண் இருவருமே இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள் என்றாலும், ஆண்கள்தான் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாலுறவு தூண்டலுக்கான அறிகுறிதான் இந்த வியர்வை நாற்றம்.
விலங்குகள் இதுபோன்ற வாசனையை உணர்ந்துதான் தங்களது பாலுறவை வைத்துக்கொள்கின்றன. மற்ற நேரங்களில் அதுபற்றி அவைகள் நினைப்பதே கிடையாது. ஆனால், மனிதன் அப்படியல்ல; அவனால் எப்போதும், எந்த நேரத்திலும் பாலுறவு கொள்ள முடியும். அதனால், அவனுக்கு வியர்வை நாற்றம் எப்போதும் இருக்கிறது.
பெண்களுக்கு இது சற்று வேறுபடுகிறது. கருமுட்டை வெளியாகும் நேரத்திலும், கருத்தரிக்கும் நிலையிலும் அவர்களது உடலில் இதுபோன்ற வாசனை தோன்றுகிறது.
ஆண்களைப் பொறுத்தவரையில், அவர்களில் சிலரது உடலில் வியர்வை நாற்றம் அளவுக்கு அதிகமாக இருக்கும். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல், அவர்கள் சற்று தொலைவில் வந்தாலே 'கப்'பென்று வியர்வை நாற்றம் வந்துவிடும்.
தினமும் நன்றாக உடலை தேய்த்து குளித்தாலே வியர்வை நாற்றத்தை போக்கிவிடலாம். அப்படியும் அந்த நாற்றம் போகாவிட்டால் டியோடெரண்டுகளை பயன்படுத்துங்கள்.
- மேற்படி மாற்றங்கள் மட்டுமல்ல, இன்னும் பல மாற்றங்கள் இந்த டீன்-ஏஜில் ஒருவருக்குள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களை பக்குவத்தோடு அணுகினால், டீன்-ஏஜ் பருவம் இன்பம் நிறைந்ததே!
 

Sujatha Suji

Friends's of Penmai
Joined
Jul 30, 2011
Messages
465
Likes
264
Location
Chennai, India
#2
Neatly explained.

Harmones are the culprit for many things at those ages.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.