டீன்-ஏஜ் பெண்களை வாட்டும் பிரச்சனைகள்

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
[h=1]டீன்-ஏஜ் பெண்களை வாட்டும் பிரச்சனைகள்[/h]பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும்.

இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும்.

இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும். இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள்.

இதனால்இரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப்படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
hi Nisha,
Ovvoru ammavum, than kulandhayai friend pola treat panninaale podhum... paadhi prachanai solved.... ippo irukkara amma ellorume(mostly) friendlya thaan irukkaanga...meedhi ullavangalum maaritta... endha oru visayathayum than pen kulandhaikku puriya vaikka mudiyumnu nambaren...

Anitha.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#3
Very good post nisha:) ithula innoru vishayam... Peer pressure in maintaining lean figure..
Athunaala breakfast saapdaama irukurathu, lunch or dinner skip pannitu verum junk fooda korikirathu... Main foodla kidaikum nutrients kidaikaama anorexic aarathu... Athunaala padipula concentration kpraiyuthu.... Teenagers or everybody should be advised not to skip bf as this is an important meal of the day which drives the whole day.

And the other thing is how to handle with the situations where you cant avoid boys eg., school as how to maintain the distance and also be friendly.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
wow latchu.... superpa.....neenga sonnadhu ellam kandippa kadaipidikka vendiyavaye... thanks for sharing friend.....

joke mattum illaamal
seriousaavum pesi
ella visayathilum
pugundhu vilayaadum
latchuvukku 'o' podaren naan;
friends neengalum 'o' pottudunga....

Anitha.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#5
thanks ani, i am a Women and A mother and a sister and a daughter and we all know how stressfull is to maintain our body during school and college days....:)
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,542
Location
Hosur
#6
thanks ani, i am a Women and A mother and a sister and a daughter and we all know how stressfull is to maintain our body during school and college days....:)
Well said Lakshmi
.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.