டோனர்(Toner)

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
டோனர்(Toner)
ஆரோக்கியமான சருமத்துக்கு அடிப்படை கிளென்சிங், டோனிங், மாயிச்சரைசிங் .
கிளென்சிங் என்பது சருமத்தின் மேல் மற்றும் ஆழப் பகுதிகளை சுத்தப்படுத்துகிற வேலையைச் செய்வதையும் பார்த்தோம். கிளென்சர் உபயோகிப்பதால் திறந்து கொள்கிற சருமத் துவாரங்களை மூட வேண்டும் அல்லவா? மூடாமல் அப்படியே விட்டால் மறுபடி சுற்றுப்புற மாசும் தூசும் அந்தத் துவாரங்களில் போய் அடைந்து கொள்ளும். அதனால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்பட்டு அழகு கெட்டுப் போகும். அதைத் தவிர்த்து, சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதில் டோனரின் பங்கும் முக்கியமானது. டோனர் என்றால் என்ன? அது யாருக்கு, எப்படிப் பயன்படும்? எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்? எல்லா தகவல்களையும் விளக்கமாக விவரிக்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல்.
‘‘சருமப் பராமரிப்பு ரொட்டீனை சிஜிவி எனச் சொல்கிறோம். ஆனால், பலரும் சருமத்தை கிளென்ஸ் செய்கிறார்கள். மாயிச்சரைஸ் செய்கிறார்கள். டோனிங் செய்யத் தவறி விடுகிறார்கள். ஆனால், டோனிங் என்பது மிக முக்கியமான ஒரு அழகு அடிப்படை. சருமத்தை இளமையாக, மென்மையாக வைத்திருக்க முறையாக டோனர் உபயோகிக்க வேண்டியது அவசியம். அதனால்தான் டோனருக்கு ஸ்கின் டானிக் என ஒரு பெயரும் உண்டு. டோனரில் 3 வகைகள் உள்ளன.


ஆல்கஹால் கலந்த டோனர் தண்ணீர் கலந்த டோனர் கிளிசரின் மற்றும் தண்ணீர் கலந்த டோனர். டோனர் என்ன செய்யும்?

சருமத்தின் செல்களில் இயற்கையான ஈரப்பதத் தன்மை இருக்கும். அதற்கு Natural Moistening Factor (NMF) என்று பெயர். அடிக்கடி முகம் கழுவு வது, கிளென்ஸ் செய்வது போன்றவற்றின் மூலம் சருமத்தின் இயற்கையான இந்த ஈரப்பதம் பாதிக்கப்படும். டோனர் உபயோகிப்பதன் மூலம் சருமத்தின் இயற்கையான எண்ணெய் மற்றும் தண்ணீர் சத்து தக்க வைக்கப்படுவதுடன், சருமத் திசுக்களில் உள்ள ஈரப்பதத்தையும் காத்து, சருமம் வறண்டு போகாமல், வனப்புடன் இருக்கும்.

சருமத்தில் மாயிச்சரைசர் தடவுவதற்கு முன்பாக டோனர் தடவுவதன் மூலம் உடனடி புத்துணர்வும் பொலிவும் அடைவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
குழாய் தண்ணீரில் கலக்கப்படுகிற குளோரின், தாது உப்புகள் மற்றும் ரசாயனங்கள் தண்ணீரைக் குடிக்க ஏதுவானதாக பாதுகாப்பானதாக மாற்றுவது உண்மைதான். ஆனால், அந்தத் தண்ணீரில் குளிக்கும் போதும் முகம் கழுவும் போதும் குளோரின் உள்ளிட்ட பொருட்கள் சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதித்து, நிறத்தையும் குறைக்கும். சருமத்தில் படிகிற மெல்லிய வெண் படலத்தையும் டோனர் சுத்தமாக்கி விடும்.

சருமத்தின் பி.ஹெச். அளவை சமநிலையில் வைத்திருக்கவும் டோனர் உதவும். பி.ஹெச். அளவு மிக அதிகமாக உள்ள சோப் அல்லது நுரை தரக்கூடிய ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் போது, அதனால் ஏற்படக்கூடிய சரும வறட்சியையும் பி.ஹெச். சமநிலையின்மையையும் டோனர் சரிப்படுத்தும்.சருமத்துக்கு டோனர் செய்யக்கூடிய நன்மை என்பது அதில் அடங்கியுள்ள மூலப் பொருட்களைப் பொறுத்து வேறுபடும். உதாரணத்துக்கு அதிலுள்ள யூகலிப்டஸ், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். hyaluronic acid and sodium PCA ஆகிய இரண்டும் சருமத்தின் ஈரப்பதத்தை காக்கும்.

ஜின்செங் சாரம் சேர்க்கப்பட்டிருந்தால், அது சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். Witch hazel பருக்களுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கும். Elderberry fruit extract சேர்க்கப்பட்டிருந்தால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படும். வறண்ட சருமத்தைவிட ஈரப்பதம் உள்ள சருமத்தில்தான் ஊடுருவும் சக்தி அதிக மாக இருக்கும். உங்கள் சருமத்துக்கு நீங்கள் உபயோகிக்கிற சீரம் அல்லது மாயிச்சரைசர் உள்ளிட்ட எதுவும் உள்ளே ஊடுருவிச் சென்று முழுப்பலனைத் தர வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் டோனர் உபயோகிக்கப் பழக வேண்டும்.

டோனர் உபயோகிப்பதன் மூலம் சருமத்துக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டங்களும் நீர்ச்சத்தும் கிடைத்து விடுகிறது. இது சருமத்துக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போல செயல்படுகிறது. சுற்றுப்புறச் சூழலை உண்டாக்கும் மாசுகளின் பாதிப்பும் தவிர்க்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், சருமத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய ரகசியங்களில் டோனருக்கு மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. ஒரு சிலருக்கு பருக்கள் அதிகமிருக்கும். முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். இவர்கள் அதிகபட்ச மேக்கப்பின் மூலம் அவற்றை மறைக்க முனைவார்கள். அதற்குப் பதில் மைல்டான டோனர் உபயோகிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் அதனால் படிகிற அழுக்கும் நீக்கப்பட்டு, பருக்களும் மறையும். அதிகபட்ச மேக்கப் உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பவர்களுக்கும் டோனர் மிக மிக அவசியம்...’’

டோனர் உபயோகிப்பதன் மூலம் சருமத்தின் இயற்கையான எண்ணெய் மற்றும் தண்ணீர் சத்து தக்க வைக்கப்படுவதுடன், சருமத் திசுக்களில் உள்ள ஈரப்பதத்தையும் காத்து, சருமம் வறண்டு போகாமல், வனப்புடன் இருக்கும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
டோனர் (Toner)

சருமத் துவாரங்களை சுருக்குகிறது. சருமத்தின் பி.ஹெச். பேலன்ஸை சமநிலையில் வைக்கிறது. கிளென்ஸ் செய்யப்பட்ட பிறகு சருமத்தின் செல்களுக்கு இடையில் ஏற்படுகிற இடைவெளியை மூட வைக்கிறது டோனர். அதன் மூலம் வெளிப்புற மாசுகள் எதுவும் சருமத் துவாரங்களில் ஊடுருவி, சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. சில வகை டோனர்கள், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை.சட்டென வெளியே கிளம்ப வேண்டியிருக்கும் போது, சருமத்துக்கு இன்ஸ்டன்ட் பொலிவைக் கொடுக்கக் கூடியது டோனர்.

அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப சரியான டோனர்களை பார்த்துத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டியது அவசியம். டோனர் உபயோகிக்கும் முறைடோனர் என்பதை தண்ணீர் மாதிரி நிறைய எடுத்து உபயோகிக்கக் கூடாது. 6 முதல் 10 துளிகள் எடுத்து சுத்தமான பஞ்சில் விட்டு, பிழிந்த பிறகே உபயோகிக்க வேண்டும். இப்போது சில வகை டோனர்கள் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கின்றன. நார்மல், ஆயிலி, ட்ரை மற்றும் காம்பினேஷன் சருமங்களுக்கேற்ப, அதையும் தேர்ந்தெடுத்து, கிளென்ஸ் செய்த பிறகு ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

வெளியில் டோனர் வாங்க விருப்பமும் வசதியும் இல்லாதவர்கள், வீட்டிலேயே எளிய முறையில் டோனர் தயாரித்தும் உபயோகிக்கலாம்.சிறிதளவு வெள்ளரித் துருவலுடன், தயிரை கலந்து கொள்ளவும். கிளென்ஸ் செய்யப்பட்ட சருமத்தில் இந்தக் கலவையைத் தடவி, 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த தயிர், சருமத்தின் கருமையைப் போக்கும். வெள்ளரிக்காய் மைல்டான பிளீச்சிங் ஏஜென்டாக செயல்படுவதுடன், சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் பசையையும் நீக்கும். இது எண்ணெய் பசை சருமத்துக்கு உகந்த டோனர்.

ஒரு கைப்பிடி புதினாவை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் இரவில் கிளென்ஸ் செய்த சருமத்தில் தடவிக் கொள்ளலாம். பஞ்சில் நனைத்து, கண்களுக்கு மேல் வைத்துக் கொள்ளலாம். இது சருமத்தின் களைப்பை நீக்கி, ஊட்டம் தரும்.100 கிராம் கிளிசரினில் 6 டீஸ்பூன் பன்னீரும் கால் டீஸ்பூன் படிகாரத் தூளும் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் டோனராக உபயோகிக்கலாம். இது எல்லா வகையான சருமங்களுக்கும் ஏற்றது.

100 மி.லி. வினிகரில் 50 மி.லி. பன்னீர் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, டோனராக உபயோகிக்கலாம். இதில் கலக்கப்படுகிற வினிகர், டீப் கிளென்சராகவும் செயல்படும். அரை கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறும் 1 டீஸ்பூன் பன்னீரும் கலந்து உடனடியாக நெற்றி, கழுத்து, கன்னங்களில் தடவவும். இந்த டோனர், சருமத்தின் கருமையைப் போக்கி, பருக்களையும் விரட்டும். மிக அதிகமாக எண்ணெய் வடிகிற சருமத்துக்கு உகந்தது.

லெமன் ஆயில், லேவண்டர் ஆயில் இரண்டும் தலா 2 சொட்டுகள் எடுத்து 2 சொட்டுகள் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து, உள்ளங்கைகளில் தேய்த்து, சட்டென முகத்திலும் கழுத்திலும் தடவித் துடைக்கவும். இது சருமத்தின் அழுக்குகளை நீக்கி, அதன் ஈரப்பதத்தையும் தக்க வைக்கும். சிலருக்கு சருமத்தின் துவாரங்கள் பெரிது பெரிதாகத் தெரியும். இவர்கள் ரோஸ்மெரி மற்றும் மின் ஆயில் இரண்டிலும் தலா 2 துளிகள் எடுத்து 2 துளிகள் டிஸ்டில்டு வாட்டரில் கலந்து முகத்தில் தடவினால், சருமத் துவாரங்கள் உடனடியாக சுருங்கும்.

டோனர் என்பது தினசரி உபயோகப்படுத்த வேண்டியது. டோனர் மாஸ்க் என்பதையும் வீட்டிலேயே தயாரிக்கலாம். சருமத்தை டைட் ஆக்கக் கூடிய இதை வாரம் ஒரு முறை உபயோகித்தாலே போதும். 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சைச்சாறு, 1 முட்டை ஆகிய மூன்றையும் கலந்து, முகத்திலும் கழுத்திலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது சருமத் தசைகளை டைட் ஆக்குவதுடன், களைப்பையும் நீக்கும். தேன் பிளீச் செய்யவும், எலுமிச்சைச்சாறு புத்துணர்வு தரவும், முட்டை சருமத்தை டைட் ஆக்கவும் உதவும்.

டோனர் என்பது தினசரி உபயோகப்படுத்த வேண்டியது. டோனர் மாஸ்க் என்பது சருமத்தை டைட் ஆக்கக் கூடியது. இதை வாரம் ஒரு முறை உபயோகித்தாலே போதும்.

டோனரில் 3 வகைகள்!

ஸ்கின் பிரேஸர்ஸ் அல்லது ஃப்ரெஷ்னர்ஸ்...மிகவும் மைல்டானது இது. கிளிசரின் மற்றும் மிகக் குறைந்த அளவு ஆல்கஹால் (10%) கலந்திருக்கும். ரோஸ்வாட்டர் எனப்படுகிற பன்னீர் இதற்கான சரியான உதாரணம். மிகவும் வறண்ட சருமத்துக்கு உகந்தது.

ஸ்கின் டானிக்...

முதல் வகையைவிட சற்றே ஸ்ட்ராங்கானது. 20% ஆல்கஹால் கலந்திருக்கும். ஆரஞ்சுப் பூ தண்ணீர் இந்த வகையைச் சேர்ந்தது. நார்மல், காம்பினேஷன் மற்றும் எண்ணெய்பசையான சருமத்துக்கு உகந்தது.

அஸ்ட்ரின்ஜென்ட்...

முதல் இரண்டையும் விட இன்னும் ஸ்ட்ராங்கானது. 20 முதல் 60% வரை ஆல்கஹால் கலந்திருக்கும். சட்டென உலர்ந்துவிடக்கூடியது என்பதால் எண்ணெய் பசையான சருமத்துக்குப் பரிந்துரைக்கப்படும்.

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.