தக்காளி பழச்சாறு பேசியல் மசாஜ் (முரட்டு &#2990

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
[font=arial, helvetica, ]தக்காளி பழச்சாறு பேசியல் மசாஜ் (முரட்டு முகத் தொலை மிருதுவாக்கும்)[/font][font=arial, helvetica, ]
[/font]
கதாசிரியர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் பெண்களை பற்றி வர்ணிக்கும் பொது தக்காளி பழம் போல சிவப்பாக இருப்பாள். சுண்டினால் ரத்தம் வரும் அளவில் சிவப்பாக இருப்பாள் என்றெல்லாம் வர்ணிப்பார்கள்.

தக்காளியை முறையாக பயன்படுத்தினால், மென்மையான சரும அழகை பெறலாம்.

தக்காளியை சாறு பிழிந்து அதில் முகத்திற்கு தினசரி மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாக, மிருதுவாக மாறும். வறட்சி அடையாது.

பழுத்த தக்காளி பழத்தை அரைத்து கூழ் செய்து முகத்தில் பருக்களின் மேல் தடவி, சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர, பருக்கள் மறையும். பருத்தொல்லை, பருக்களால் வரும் தழும்புகளில் இருந்து மீண்டு விடலாம்.

இரண்டு , மூன்று தக்காளிப் பழங்களை எடுத்து நன்கு நறுக்கி சிறு சிறு வில்லைகளாக செய்து கொள்ள வேண்டும். இதை பாலாடைக்கட்டியில் போட்டு குலைத்து அத்துடன் ஓட்ஸ் பவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலைக்க வேண்டும். பிறது இதை இருபது நிமிடம் கொதிக்க வைத்து, ஆற விட வேண்டும். அப்போது அடியில் படியும் படிமத்தை தனியாக எடுத்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.

தக்காளி வில்லைகளை கண்களின் மேல் வைத்து வரலாம். சுமார் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர முகம் பளிச்சென மாறும்.

கன்னங்கள், கழுத்து, நெற்றி, உதடுகள் யாவும் கவர்ச்சியாக, மொழு, மொழுவென்று மாறிவிடும். பருத்தொல்லையால் பாதிக்கப் படுபவர்களும் தொடர்ந்து செய்து வர பரு தொல்லையில் இருந்து தப்பலாம்.

ஆப்பிள் போன்ற தோற்றம், தக்காளி பழத்திற்கு இருப்பதால் இதை "ஆப்பிளின் காதலி" என்று தான் ஆங்கிலேயர்கள் அழைப்பார்கள். நன்கு பழுத்த தக்காளி பழத்தில் நமது உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்கலான a, b,c, மினரல்கள், தாதுப்புகள் தக்காளியில் அபரிமிதமாக காணப்படுகின்றன.

தக்காளியை உணவிலும் சேர்த்துக்கொண்டால் அதிக பயன் நிச்சயம்.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#2
Re: தக்காளி பழச்சாறு பேசியல் மசாஜ் (முரட்டு &a

தக்காளியில் இவ்வளவு பயன்களா? நன்றி பகிர்ந்தமைக்கு!
 
Joined
Jul 12, 2011
Messages
18
Likes
5
Location
chennai
#3
Re: தக்காளி பழச்சாறு பேசியல் மசாஜ் (முரட்டு &a

Thanks for your tips really useful tips i like you so much for your tips.
 
Last edited by a moderator:

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
Re: தக்காளி பழச்சாறு பேசியல் மசாஜ் (முரட்டு &a

Thank u vijayalakshmi for ur comment....
 

Mallee1974

Friends's of Penmai
Joined
Aug 31, 2011
Messages
396
Likes
621
Location
Rourkela
#5
Re: தக்காளி பழச்சாறு பேசியல் மசாஜ் (முரட்டு &a

hi anitha...
nice
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.