தங்க பேஷியல் தந்திரம் - Gold Facial Trick

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தங்க பேஷியல் தந்திரம்!


தங்கம் எப்படி இருந்தாலும் பெண்களைக் கவர்ந்து விடுகிறது. பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள பிணைப்பு மற்றும் பற்று காரணமாகவே அலங்காரம் முதல் அழகியல் வரை தங்கத்தின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. தங்கத்தின் பக்கம் பெண்களை ஈர்க்கும் பல்வேறு டெக்னிக்குகளில் ஒன்றுதான் தங்கத்தின் பெயர் சொல்லி செய்யப்படுகிற அழகு சிகிச்சைகள். அதிலும் மணப்பெண்களை ஒரே இரவில் தேவதைகளாக உருமாற்றுவதாக சொல்லும் தங்க ஃபேஷியல்களுக்கு இன்று ஏகப்பட்ட வரவேற்பு!

பொதுவாக பியூட்டி பார்லர்களில் கோல்ட் ஃபேஷியல் செய்யப்படுகிற விதம் தெரியுமா? முதலில் முகத்தை சுத்தப்படுத்துகிற கிளென்சிங் மில்க் உபயோகித்து துடைத்துவிட்டு, சில பல க்ரீம்களை கொண்டு மசாஜ் செய்துவிட்டு, கோல்ட்ஸ்க்ரப் கொண்டு ஸ்க்ரப் செய்யப்படும். கடைசியாக கோல்ட் ரேக் எனப்படும் கோல்ட் ஃபாயில் ஷீட் - அதாவது, 24 கேரட் என சொல்லப்படுகிற கோல்ட் ஷீட்டை முகத்தின் மேலே ஒட்டி, கோல்ட் ஜெல் கொண்டு மசாஜ் செய்த பிறகு அது சருமத்தின் உள்ளே ஊடுருவிய பிறகே துடைத்து எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், தங்கம் சருமத்தின் உள்ளே ஊடுருவக்கூடிய தன்மை கொண்டதே இல்லை. பார்லர்களில் சொல்லப்படுவது போல தங்க ஃபாயிலாக ஒட்டப்படுகிற தங்கம், சருமத்தின் உள்ளே ஊடுருவாது!

அப்படியானால் கோல்ட் ஃபேஷியல் என்பதில் என்னதான் கலக்கிறார்கள்? கோல்ட் ஃபேஷியல் கிட் எனப்படுவது 99 ரூபாய் முதல் 9999 ரூபாய் வரை ஆன்லைன் ஸ்டோர்களிலும் பியூட்டி பார்லர்களிலும் கிடைக்கின்றன. 24 கேரட் கோல்ட் ஃபேஷியல் கிட்டில் கோல்ட் கிளென்சர், கோல்ட் க்ரீம், கோல்ட் ஜெல், கோல்ட்ஸ்க்ரப் மற்றும் 24 கேரட் பீல் ஆஃப் மாஸ்க் (மெல்லிய ஷீட்) ஆகிய ஐந்தும் கொண்ட பேக். அது பிராண்டுக்கு ஏற்ப வேறு ேவறு விலைகளில்விற்கப்படுகின்றன.



ஆயுர்வேதிக் கோல்ட் ஃபேஷியல் முறைப்படி செய்யப்படும் கோல்ட் கிட்டில் என்னென்ன அடங்கியிருக்கின்றன என்று பார்ப்போம். ஏனென்றால், ஆயுர்வேத முறையில்தான் முதன் முதலில் தங்கத்தை நானோ துகள்களாக மாற்றி, அவற்றை சருமத்துக்குள் ஊடுருவும் அளவுக்கு ஜெல்லாக செய்கிற முறை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஏற்கனவே பார்த்தோம். 24 கேரட் கோல்ட் டஸ்ட் அதாவது, மிக நுண்ணிய துகள்களாக, பவுடர் போன்று செய்யப்பட்ட தங்கம், குங்குமப்பூ, தேன், சந்தனத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீமாக செய்யப்படுகிறது.

Gold Based Gel மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை சேர்த்து செய்யப்படுகிறது. அடுத்தது கோல்ட் ஃபாயில். 24 கேரட் ரெடிமேட் ஃபாயில்களாக செய்யப்பட்டு, பேக் செய்யப்பட்டு தனியாகவே விற்கப்படுகிறது. ஆனால், அந்த கோல்ட் ஷீட்டை யாரும் தனியே வாங்கி ஒட்டிக் கொள்வதில்லை. பார்லர்களில் மசாஜ் உள்பட பல கட்டங்களுக்குப் பிறகே இந்த ஃபாயிலை ஒட்டுகிறார்கள்.


ஆயுர்வேதிக் கோல்ட் க்ரீமில், கற்றாழையின் சாரம், சந்தனத்தூள், திராட்சை, மஞ்சள் தூள், Zanthan Gum, Dimethicon, Triclosan (Triclosan என்கிற கெமிக்கல் பொதுவாக பாக்டீரியாவில் இருந்தே தயாரிக்கப்படுவது. பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இது பற்பசை, சோப், க்ரீம் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.) - இவற்றுடன் கோல்ட் ஆக்சைடும் சேர்க்கப்படும். தவிர ரோஜா இதழ்கள், வைட்டமின் சி மற்றும் இயும் கலக்கப்படுகின்றன. கோல்ட் ஃபேஷியல் என்பது சமீப காலமாக அழகுத் துறையில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக திருமணத்துக்குத் தயாராகிற பெண்களுக்கு இந்த கோல்ட் ஃபேஷியலே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

அப்படி என்னதான் ஸ்பெஷல் இதில்? கோல்ட் ஃபேஷியல் செய்து கொண்டதும் முகம் தங்கம் மாதிரி ஜொலிக்கிறது. பளபளக்கிறது. சருமத்தில் வறட்சி நீங்கி, ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதாகவும், சருமத்தின் மீள்தன்மை (Elasticity) அதிகரிப்பதாகவும், முதுமைத் தோற்றம் தள்ளிப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது Midas Touch எனப்படுகிற தொட்டதும் தங்கமாக்குகிற மாயவித்தை அல்ல. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவே இல்லை. தங்கம் சருமத்தின் உள்ளே ஊடுருவும் சக்தி அற்றது என்கிறார்கள் தேர்ந்த மருத்துவர்கள். தங்க ஃபேஷியல் செய்யும் போதும், அதற்குப் பயன்படுத்தப்படுகிற மற்ற உப பொருட்கள் மற்றும் மசாஜின் மூலம் அந்த நேரத்துக்கு சருமம் ஊட்டம் பெற்று, பொலிவடைகிறதே தவிர, அது எதுவும் தங்கத்தினால் வருவது அல்ல என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமின்றி, இயல்பிலேயே நமக்கு தங்கத்தின் மீதுள்ள மதிப்பு மற்றும் மோகத்தின் காரணமாக அதன் பெயரில் செய்யப்படுகிற இந்த சிகிச்சையும் உளவியல் ரீதியாக திருப்தியானதாக இருக்கலாம்.

மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்றுக்கு ஏன் இத்தனை மவுசு? பொதுவாக ஒப்பனைப் பொருட்கள் ஒருசில ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட உடனேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன. விளம்பர உத்திகளின் உதவியோடு அமோகமாக விற்பனை ஆகின்றன. மக்களும் அதன் சாதக பாதகங்களைப் பற்றி யோசிக்காமல் உடனே அதை வாங்கி உபயோகிக்கிறார்கள். தென்னிந்தியரை பொறுத்த வரை தங்களது சரும நிறத்தைப் பற்றிய தாழ்வுமனப்பான்மை பலருக்கும் உண்டு. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற தேடலில், சரும நிறத்தைக் கூட்டுவதாக விளம்பரப்படுத்தப்படுகிற பொருட்களை உடனே வாங்கி உபயோகிக்கிற மனநிலை உண்டு.

இன்று சரும அழகை மேம்படுத்துவதில் போடாக்ஸ் என்கிற சிகிச்சை பிரபலமாக இருக்கிறது. ஊசி மூலம் செய்யப்படுகிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சருமம் இளமையாக மாறுவதாக சொல்லப்பட்டாலும் எல்லோருக்கும் இது ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு பயங்கரமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. முகம் வீங்குவது, கண் இமைகளும் உதடுகளும் தடித்துப் போவது உள்பட நிறைய பக்க விளைவுகள் வருவதாகச் சொல்லப்படுகின்றன. காஸ்மெடிக் அறுவை சிகிச்சையின் மூலம் இளமையான தோற்றம் பெறுவது என்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகாதது. தங்க பஸ்பம் உட்கொள்வதால் உண்டாகிற உடல்நலக் கேடுகளைப்பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். இப்படி எந்த வித பக்கவிளைவுகளும் கோல்ட் ஃபேஷியலில் இல்லை. மேலே பூசப்படுகிற தங்கப்பூச்சானது சருமத்தின் உள்ளே ஊடுருவி, உடலின் எந்த உள் உறுப்புகளையும் பாதிக்கப் போவதில்லை. மாறாக சருமத்துக்கு உடனடியாக ஒரு பொலிவு கிடைக்கிறது. இதையெல்லாம் பார்க்கையில் கோல்ட் ஃபேஷியல் மக்களிடம் வரவேற்பைப் பெற்றதில் ஆச்சரியமே இல்லை! அணிந்து கொள்ளவே தங்கம் இல்லாதவர்கள், அழகை மேம்படுத்தும் தங்க ஃபேஷியலுக்கு, அதுவும் ஆயிரங்களைக் கொட்ட எங்கே போவார்கள்?

சருமத்தை கிளென்ஸ் செய்யக்கூடிய லாக்டிக் அமிலம் அடங்கிய பால், சருமத்தின் இறந்த செல்களை அகற்றக்கூடிய கடலை மாவு, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளீச்சிங் தன்மைகள் கொண்ட மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், கண்களுக்கு அடியில் உள்ள அதிகப்படியான தண்ணீரையும், கருமையையும் நீக்கி அழகாக்கக்கூடிய வெள்ளரிக்காய், கரும்புள்ளிகளைப் போக்கும் தக்காளி, முல்தானிமிட்டி போன்றவை சீனர்களாலும் ஜப்பானி யராலும் அதிகம் விரும்பப்பட்டு, உபயோகிக்கப்படுகின்றன. சீனரும் ஜப்பானியரும் தங்கம் அணிந்தோ, தங்க ஃபேஷியல் செய்து கொண்டோ அழகாகக் காட்சியளிக்கவில்லை. அந்த இயற்கையான அழகு நமக்கும் சாத்தியம்தானே!

"சீனரும் ஜப்பானியரும் தங்கம் அணிந்தோ, தங்க ஃபேஷியல் செய்து கொண்டோ அழகாகக் காட்சியளிக்கவில்லை. அந்த இயற்கையான அழகு நமக்கும் சாத்தியம்தானே!"
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
நல்ல பகிர்வு லட்சுமி.
நம்மவர்களும் அவர்களைப் போல் வெள்ளை நிறமாக இருந்திருந்தால் இவ்வளவு மெனக்கட மாட்டார்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.