தண்ணீர் மருத்துவம்

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
தண்ணீர் மருத்துவம்

கேட்பதற்கு அதிசயமாய் இருக்கிறதல்லவா? நம் உடலின் பலவிதமான பிணிகளை தீர்க்க தண்ணீர் மருத்துவம் மிகுந்த பலனை தருகிறது. மிகவும் எளிதான, செலவில்லாத, ஆரோக்கியமான வைத்திய முறை இது.

தண்ணீர் மருத்துவ முறைகள்:

காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பாகவே 650 மி.லி. அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகரமோ எதுவும் உட்கொள்ள கூடாது.

45 நிமிடங்களுக்கு பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

காலை உணவுக்கு பின்னர் 15 நிமிடங்களுக்கும், மதியம், இரவு உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரத்திற்கும் எந்த வகையான உணவோ அல்லது பானமோ அருந்தக் கூடாது.

650 மி.லி. அளவு தண்ணீரை தொடக்கத்திலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 650 மி.லி. அளவு தண்ணீரை அருந்த பழகலாம்.

எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் தண்ணீர் மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போமா?

உயர் ரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 1 நாள்

சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்

மூட்டு வலி - துவக்கத்தில் வாரம் மூன்று நாட்களும், இரண்டாவது

வாரத்தில் இருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.


பக்க விளைவுகள் எதுவும் இல்லாத மருத்துவ முறை இது. எனினும் தண்ணீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக பின்பற்றினால் மிகவும் நன்மை தரும்.

ஆகவே தண்ணீர் மருத்துவத்தை முறையாக மேற்கொண்டு ஆரோக்யமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்வோமா?

-ராதா (பெண்மணி இதழில் இருந்து)
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#2
Water la evlo benefits, But so many peoples not have the aware of this,,,

Thanks ani sis For sharing wonderful informatin
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#3
very useful information Anitha....
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
Thank u Sakthi, sudha for ur comments....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.