தண்ணீர் - Health Benefits of Water

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
[h=1]உடலுக்கு மருந்தாகும் தண்ணீர்[/h]
எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக அறிவிப்பு விடுகிறதோ, அப்போது நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
இதற்கு என்ன காரணம்?

போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும்.

உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.


மேற்பரப்பு நீர், சாதாரணமாகவே மென்மையாகவும், நிலத்தடி நீர், கடின நீராகவும் இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிரம்பவே அடங்கியுள்ளன. கடின நீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும். அதேநேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே நினைவில் கொள்ளவேண்டும், அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற் கோளாறுகளை உருவாக்கிவிடும். எனவே தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, அதனைச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும். பல நூற்றாண்டு காலமாகவே, தண்ணீரை மருந்தாகவே பயன்படுதியுள்ளனர்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
[TABLE="width: 100%"]
[TR]
[TD="align: left"]
[h=2][/h][h=1]தண்ணீரின் அவசியம் என்ன?[/h]மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
[/TD]
[/TR]
[/TABLE]
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#6
அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது.


உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#7
நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது.

வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது.


அதுவே 65 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது.

தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.

மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#8
[h=1]தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்[/h]
நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது.

குடிக்கும் தண்ணீரில் ஏலக்காய் தோலையோ, ஆரஞ்ச் தோலையோ போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாக இருப்பதோடு, அதில் கலந்துள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் கொல்லப்படும்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#9
சாப்பிடும் முன்:

சாப்பிட உட்காரு முன், தேவையான அளவு சூடு செய்த தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கலாம். அந்த மாதிரி சாப்பிட்ட பின்னும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க, அந்த வெந்நீர் வெது, வெதுப்பாக இருக்க வேண்டும். அதுக்காக நாக்கை சுடும் அளவுக்கு தண்ணீர் குடிக்க கூடாது. இந்த வெந்நீர் வைத்தியத்தால் பல ஆச்சரியமான உண்மைகள் இருக்கும்.

 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#10
சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும்.

ஸ்வீட், காரம் என்று பிடித்த பண்டங்களை பேச்சு வாக்கில் சாப்பிட கூடாது.

வடையோ, பாயாசமோ எது சாப்பிட்டாலும் கொஞ்சம் போதும்னு சொல்ல வைக்கும் சக்தி வெந்நீருக்கு உண்டு.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.