ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam By Girija Chandru

Status
Not open for further replies.

girija chandru

Penman of Penmai
Blogger
#1
" நம்பிக்கை ஒளி " என்ற தொடர்கதையை 13 அத்தியாயங்கள் எழுதி இன்று முடித்தேன்.
அடுத்த கதை தயார்....


தலைப்பு என்ன தெரியுமா?


"ததும்பி வழிகிறதே மௌனம்"


புதிய,நல்ல கதாபாத்திரங்களுடன்,புதுமையான எண்ணங்களை சுமந்து வர இருக்கும் இந்த கதையை படிக்க காத்து இருங்கள் செவ்வாய் வரை..... (19.01.2016)


என்னை வழக்கம் போல பெண்மை வாசகிகள் (வாசகர்கள்) படித்து, ஊக்குவித்து,மேலும், மென்மேலும் எழுத தூண்டுவார்கள் என்று உறுதியாக் நம்பும் கிரிஜா சந்துரு (ரா.கிரிஜா) :yo:Bye
 

girija chandru

Penman of Penmai
Blogger
#3
ததும்பி வழிகிறதே மௌனம் :-
======================

பாகம் :- 1
=========


"கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை போட்டு விட்டேன்

காற்சலங்கை போன இடம் கடவுளுக்கும் தெரியவில்லை "

சாதனா- அது தான் அந்த 22 வயது யுவதியின் பெயர். அவளுக்கு மௌனம் பிடிக்காது. மௌனம் புரியாது.ஆர்ப்பரித்து வரும் காட்டு ஆற்றின் வெள்ளமாய், துரு துருப்பு நடையும், சிரிப்பும்,ஆரவாரமும் மட்டுமே அவள் அறிந்தது.. அவள் வண்டு கண்கள் சுழல மட்டுமே அறியும்.. அழுவது அவமானம் என்று நினைக்கும் கட்சி

அவள். கல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டு இருக்கும் ரயிலில் பயணப்படும் அவள் உடல் அல்ல மட்டும் அல்ல மனமும் பழைய நினைவுகளுக்கு பயணப்படுகின்றது.

சாதனா பிறந்த உடனேயே அவள் அப்பா இறந்து விட்டார். அம்மா ராஜி க்கு சதனவ்வை கவனிப்பதை விட தன சினிமா துறையில் நடிக்கும் வேலையும், அடுத்த கணவனை தேடும் வேலையும் பெரியதாக இருந்தது.அந்த சின்னஞ்சிறு சிசுவின் ரோஜா பட்டு கன்னங்களை தொட்டு கொஞ்ச கூட ராஜிக்கு தோன்றவில்லை. அந்த குழந்தையை முழுவதுமாக, பதினெட்டு வயது வரை வளர்த்து , ஒரு அழகு கலை வல்லுநர் ஆக மாற்றியது, ராஜியின் பாட்டி மகாலட்சுமி தான். அப்பா, அம்மா என்ற இருவருமே இல்லாமல் வளரும் வேதனையை சாதனா அனுபவித்தாள் . அனால்,திடமான நெஞ்சத்துடன், தன்னம்பிக்கையுடனும், நல்ல நேர்மறை எண்ணங்களுடனும் அவள் வாழ மகாலட்சுமி துணை நின்றாள் - பாட்டியாக, தாயாக, தந்தையாக, உற்ற தோழியாக....!!!!

மகாலட்சுமி - பெயருக்கேற்றார் போல லட்சணமும், கம்பீரமும், அன்பும்,பாசமும் கலந்த கலவை. தாயிடம் காணாத நேசமும் பாசமும் சாதனா, தன கொள்ளு பாட்டியிடம் கண்டு மகிழ்ந்து வளர்ந்தாள் . ஹிந்தி, பாடல், ஆடல், துருப்பு,ஓட்டம், கைப்பந்து என பரிசுகள் வாங்கி குவித்தாள் . ,மகாலட்சுமி வயது
80 இல் மரணித்தாள் . சாதனா அழைத்த கடிதங்கள் எதற்குமே ராஜி பதில் போடவில்லை. அப்போது ராஜி
பட த்தில் நடிக்க பிரான்ஸ் போய் இருந்தாள் . போன் அழைப்பையும் ராஜி ஏற்கவில்லை.. சிறு பெண் ஆனா சாதனா ஊரார் உதவியுடன் மஹாலக்ஷ்மியின் கடைசி காரியங்களை கவனித்தாள் .பிறகு, தன சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் வாழ பிடிக்காமல், கல்கத்தாவிற்கு சென்று விட்டாள்.

பதினெட்டில் இருந்து இருபது வயது வரை, ஒரு அழகு நிலையத்தில் உதவியாளர் ஆக வேலைக்கு இருந்தாள் .
சிறுக சிறுக பணம் சேமித்து வந்தாள் . 21-ம் சொந்தமாக ஒரு அழகு நிலையம் துவங்கினாள். நல்ல லாபம்.அவளுடைய இனிமையான சுபாவத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் குவிந்தார்கள். நிறைய தோழிகளும் கிடைத்தார்கள். கல்காத்தாவில் இருப்பதையே அவள் மனம் விரும்பியது. பெங்காலி மொழியும் கற்றுக் கொண்டாள் . அம்மா என்ற ஒருத்தி இருப்பதையே அவள் கிட்ட தட்ட மறந்தும் விட்டாள். யாரும் இல்லா அனாதை என்று மட்டும் அவள் என்றுமே கருதுவதில்லை. எப்போதும் தன்னை சுற்றி மக்கள் இருக்குமாறும், இசை,நடனம், சப்தம் என்று ஒரு அழகான சூழலிலேயே அவள் வாழ்ந்து வந்தாள் .

இடை இடையே கவிதைகளும் எழுதி பத்திரிக்கைகளில் புகழ் பெற்றாள் . சமையல் கலை அவள் அறியாத ஒன்று ஆக இருந்தது. அதற்காக ஒரு படிப்பில் சேர்ந்து, முறையாக பயின்றாள் .அவளுக்கு எதுவுமே , சீராக, முறையாக இருக்க வேண்டும்.


மிகவும் சந்தோஷமாக வேலை, தோழிகள், என வாழ்க்கை போயிக்கொண்டிருந்த அந்த சமயத்தில் தான் அவனை கண்டாள் . யார் அவன் ??

அவளுடைய சந்தோஷத்தை தூக்கி அடிக்கும் வகையில் அவள் வாழ்வில் நிகழ்வுகள் நடக்கலாயின.
அதுவும் எப்படி ? சலங்கை ஒலி மறந்தால். இசையின் ஒலி வெறுத்தாள் .சப்தம் வெறுத்தாள் . மௌனத்தையும் வெறுத்தாள் . அவள் எதை விரும்புகிறாள் என்று அவளுக்கே தெரியாமல் போயிற்று....
எல்லா வேதனையையும் உள்ளடக்கி வாழ கற்றவளுக்கும் பொறுக்க இயலா வேதனைகள் வந்தன..
பஞ்சு போன்ற இதயம், பாரத்தில் விம்மியது.

"வேறு இடம் தேடி போவாளோ இந்த
வேதனை யில் இருந்து அவள் மீள்வாளோ?".

என்ற பாடலின் நிலையை தான் அவள் அனுபவித்தாள் .

அவள் கல்கத்தாவை விட்டே சொந்த ஊருக்கு போகும் அளவு அவளை விரக்தி கொள்ள செய்தன அந்த நிகழ்வுகள் !!!! ஏன் ?..... தொடரும்..
 

girija chandru

Penman of Penmai
Blogger
#4
ததும்பி வழிகிறதே மௌனம் :-
======================


பாகம் :- 2
=========


" கண் போன போக்கிலே
கால் போகலாமா?"


என்ற பாடல் ஏனோ சாதனாவின் நினைவுக்கு வந்தது. கண்கள் உப்பு நீரில் கரிக்க துவங்கியது. சாதனாவின் வாழ்வில் குறுக்கே வந்தவன் பெயர் ரவி.

அவன் ஒன்றும் கதாநாயகன் இல்லை . .சரியான வில்லன் !!


நான்கு வருடங்களாக தனியே வாழும் சாதனாவிற்கு, ரவியை பற்றிய உண்மை ஸ்வரூபம் தெரியவில்லை. சொல்லி தர வந்த தோழிகளிடமும் அவள் விரோதி ஆனாள் .


மூன்று வருடங்களாக இனிக்க இனிக்க பழகி விட்டு, "பெற்றோர் சம்மதம் கிடைக்காது.நாம் பதிவு திருமணம் செய்வோம்" என்று கூறி ஆசை காட்டியவன் மாறியே . விட்டான்.


காரணம்? கேட்காமல் இருப்பாளா சாதனா? கூறினானே காரணங்கள் :-


1) அவள் ..குடும்பம் சரி இல்லையாம்..
2) அவள் அம்மா நடிகையாம்.
3) அவனுடைய உயர்ந்த அந்தஸ்துக்கு அவள் சரிப்பட மாட்டாளாம்
4) அழகு நிலையம் நடத்துவது அவனுக்கு துளியும்
பிடிக்கவில்லையாம்.
5) அவன் பெற்றோரை விரோதித்துக் கொள்ள அவன் .தயார் இல்லையாம்..
சாதனா அழுகையோடு , " இதை எல்லாம் நான் இருந்து மறைத்தேனா? இப்போது திடீர் என்று ஏன் இந்த முடிவு ?" என்று வாதாடிப் பார்த்தாள் .எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு.


அதுவும் ஒரு மாதத்திற்கு முன்னால், அவன் ஒரு வியாழன் அன்று வந்து , அவன் போட்ட நிச்சய மோதிரத்தை ..வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டு போயே விட்டான் !!!


சாதனா என்ன செய்வாள் ??? , அழுகையும்,ஆத்திரமும், ஆவேசமும் .
அவளுக்கு பற்றிக் கொண்டு .வந்தது.ஆயிரம் வாடிக்கையாளர்கள் அவளுக்கு !! அவளுக்கு 6 மாதத்தில் திருமணம் என்று புன்னகை பூக்க கூறியவள் , எத்தனை பேரிடம் சென்று , "திருமணம் நின்று விட்டது" என்று அசடு வழிவாள் ???


கலங்கிய சாதனா தன நிலை சொல்லி அறைத் தோழி கலாவிடம் சொல்லி புலம்பினாள்.கலாவின் வார்த்தைகள் சாதனாவின் நெஞ்சை நிலைகுலைய வைத்தன.
கலா கூறியது :-."சாதனா ,,இதை தானே நானும் நம் தோழியரும் (அழகு நிலையத்தில் ஒன்றாக பணி புரிபவர்கள் கலா, கல்பனா, கீதா, திவ்யா) உன்னிடம் சொன்னோம். அவன் ஒரு பச்சோந்தி.
மலருக்கு மலர் தாவும் வண்டு அவன். உன்னை ஏமாளி , படுக்கை அறை பாவை ஆக்கலாம் என்று எண்ணினான். ஆனால், நீ மசியவில்லை. அவன் பெற்றோரை காணனும் என்றாய்.. அவன் சொந்த பெற்றோரை உனக்கு காட்டுவானா?? ஒரு மாளிகைக்கு உன்னை அழைத்து சென்று, அப்பா அம்மாவையே சினிமாவில் வருவது போன்று வாடகைக்கு எடுத்து உன்னோடு பேச வைத்தான். அப்பாவி நீ, நம்பி விட்டாய். சரி.. அழாதே விடு.அவன் உனக்கு ஏற்றவன் அல்ல."


"ஐயோ... எப்பேர்பட்ட கயவனிடம் மாட்டிக் கொள்ள இருந்தோம்??? திருமணம் ஆகி இருந்தால் ?"என பல வாறு நினைத்து நினைத்து துன்புற்றது அவள் உள்ளம்... நல்ல குடும்பத்தில் பிறந்த நல்லதை மட்டுமே நினைக்க தெரிந்த அந்த உள்ளம் பாவம் !!
பிறகு தான் சாதனா கொல்கட்டா போவது என்று முடிவு செய்தாள் .உருவாக்கிய குழந்தையாக இருந்த அழகு நிலையத்தை காலி செய்து பொருட்களை மூட்டை கட்டிய போது இதயத்தில் இருந்து செந்நீர் வடியத் தான் செய்தது.. ...போதும் போதும்.. இனி சொந்த ஊரிலாவது வாழ முயற்சிக்கலாம் என்று தான் இப்போது பயணப்படுகிறாள் ரயிலில் திருவனந்தபுரத்திற்கு.


நினைவு சுழல் நின்றது. இல்லை இல்லை, சாதனா நிறுத்தி வைத்தாள் !!


சாதனா சென்று முகம் கழுவி தலை வ்வாரி கொண்டாள் .


இன்னும் ரெண்டு நிமிடங்களில் ஸ்டேஷன் வந்து விடும்.


ஸ்டேஷனுக்கு யார் வந்து இருப்பார்கள்??
(தொடரும்).....
 

girija chandru

Penman of Penmai
Blogger
#6
பாகம் :- 3
=========

" பசுமை நிறைந்த நினைவுகளே
பாடி திரிந்த பறவைகளே "


ஸ்டேஷ னுக்கு சாதனாவின் தோழி ஷீலா,அவள் கணவன் மனோ, 6 மாத குழந்தை தினேஷ் வந்து இருந்தனர்.

இருவரும் பள்ளித் தோழிகள். சிறு சிறு துன்பங்களும்,சிறு சிறு சந்தோஷங்களும் ஒன்றாக பகிர்ந்துக் கொண்டவர்கள். சாதனாவின் அம்மாவின் வேறுபாடான முகம் அறிந்து ஷீலா அடிக்கடி கொதித்துப் போவாள்.பாட்டி இறந்த துக்கம் கேட்க வந்தவள், அப்போதே இவள் தனியாக கல்கட்டா போவதை எதிர்த்தாள் .. சாதனா தான் பிடிவாதமாக, பாட்டியின் இறப்பு நிலை காரணம் காட்டி ஷீலா பேச்சு கேட்காமல் போனாள்.அப்போதே ஷீலாவுக்கு திருமணம் ஆகி இருந்தது.ஷீலாவும் மனோவும் உறவினர்கள்.

குழந்தை பிறந்த விவரம் ஷீலா தெரிவித்து இருந்தாள் ஆனால், இப்போது தான் பார்க்கிறாள்.

சாதனா, மட்டற்ற மகிழ்ச்சியுடன் தோழியை கட்டிக் கொண்டாள் .

ஷீலா :- நல்வரவு டா
சாதனா :- சந்தோஷம் டா.மனோ, எப்படி இருக்கீங்க? தினேஷ் குட்டி ,
ஓடி வா சித்தி கிட்டே.ஷீலா, உன் குட்டி ரொம்ப அழகு டா (தூக்கி கொள்கிறாள். தன் பொக்கை வாயைத் திறந்து நன்கு சிரித்தான் தினேஷ். )
மனோ :- நல்லா இருக்கேன். நீ வர போறதிலே ஷீலாவுக்கு ரொம்ப சந்தோஷம்.எனக்கும் தான். ஹலோ, ஹலோ, அவன் எனக்கும் குழந்தை தான்..
சாதனா :​ (சிரித்துக் கொண்டே )மனோ, மனோ, அதே குறும்பு, ஆமாம்.. பா ஆமாம்.. உங்க குழந்தை ரொம்ப அழகு போதுமா?
மனோ :- வா, நம்ம கேக் ஸ்டால் போகலாம். ஏதாவது சாப்பிட்ட பிறகு , வீட்டுக்கு போ.
சாதனா :- ஆமாம் ஷீலா, மிகவும் பசிக்கிறது.

அனைவரும் ஷீலாவின் காரில் ஸ்டேஷன் அருகில் இருக்கும் "ஷீலா கேக் ஸ்டால்" போகிறார்கள்.மனோ தன் பணியாளரிடம் கூறி , காபி,கேக், சமோசா எடுத்து வர சொல்கிறான். அனைவரும் சாப்பிடுகிறார்கள்.

ஷீலா :- என்ன செய்ய போகிறாய் சாதனா ? வீடு நிறைய ரிப்பேர் செய்ய வேண்டும் டா.
சாதனா :- ஆமாம். ஷீலா. வீடு சரி செய்ய எடுத்து கொள்ள போகின்றேன்.பிறகு இங்கு, வீட்டிலேயே முதல் தளத்தில் "சாதனா அழகு நிலையம்" துவங்க போகின்றேன்.`. இன்னும் 10 நாட்களில் அங்கு இருந்து என் தோழிகள் எல்லாப் பொருட்களையும் இங்கு அனுப்பித் தருவார்கள்.
ஷீலா :- நல்லது. என்ன உதவி வேண்டுமானாலும் கேளு..இங்கே மனோ உஷாவும், கல்லூரி முடிந்து 15 நாட்களில் வந்து விடுவாள். ஏன் சாதனா, அவளும் ஓரளவுக்கு அழகுப் பயிற்சியில் ஈடுபாடு கொண்டவள் தான்.
அவளை நீ ஏன் உன் உதவிக்கு வைக்க கூடாது?
சாதனா :- நல்ல விஷயம். செய்து விடலாமே...
ஷீலா :- இரு... இரு. அங்கே யார் வருகிறார்கள் பார்....

(ஒரு அழகிய, வாட்ட சாட்டமான ஆண் கடைக்கு உள்ளே வருதல்.)

அவன் :- ஹலோ, மனோ, எனக்கு 4 பீஸ் டீ கேக், உருளைகிழங்கு சிப்ஸ் 1/2 கிலோ வேண்டும்..
மனோ :- இதோ தருகின்றேன். சிபி,நலமா ??
சிபி :- நலம் பா.
ஷீலா :- இதோ இவள் என் தோழி,.பெயர் சாதனா . உங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு..சாதனா, இவர் சிபி. இங்கே இ வரும் தன வீட்டினை புதுப்பித்துக் இருக்கிறார்.
சிபி :- நமஸ்தே
சாதனா :- நமஸ்தே. உங்களை கண்டதில் மிகவும் மகிழ்ச்சி.
சிபி :- சரி.பிறகு பார்ப்போம்.

(கடையினை விட்டு போதல்)

வெளியே போன சிபியின் மனம், "சாதனா எவ்வளவு அழகாக இருக்கிறாள் !! இந்த கத்திரிபூ நிற சுடிதார் அவளுக்கு எவ்வளவு அழகாக சேர்கிறது !! ஒப்பனை ஒன்றுமே இல்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறாள் ! சரி.... இவள் கூட அருகாமை வைக்கக் கூடாது. நமக்கு ஏன் வம்பு? " என்று நினைத்தாலும் அவளையே சுற்றி வந்தது.சிபி நேரே அவன் வீட்டுக்கு போனான்.

சாதனா :- ஏன் ஷீலா? யார் கூடவும் பேச மாட்டாரோ??
ஷீலா :- ஆமாம்.கொஞ்சம் தனிமை விரும்பி தான்.
மனோ :- (சிரித்துக் கொண்டே )ஆண்கள் பேசினா, பேசிகிட்டே இருக்கான் நு சொல்றீங்க. பேசலை நா
அதுக்கும் கவலைப் ...படறீங்க.என்ன பெண்களோ ??
சாதனா :- அப்படி இல்லை, மனோ. பேசிக் கொண்டே இருக்கும்போது , விருட் என்று கிளம்புகிறாரே என்று தான் கேட்டேன்.
ஷீலா :- சரி. நம் வீட்டுக்கு வருகிறாயா? இன்று தங்கி, நாளை உன் வீட்டுக்கு போ.
சாதனா :- இல்லை ஷீலா. எனக்கு என் வீட்டைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. நான், என் வீட்டுக்கே போகின்றேன். நாளை விழாயன் காலை,
வக்கீல்,பாட்டி சொத்து விஷயமாக பேச வருவதாக சொல்லி இருக்கிறார்,. நான் உன்னோடு பிறகு செல் இல் பேசுகிறேன் டா

சாதனா அவள் வீட்டுக்கு ஷீலாவின் காரில் கிளம்புகிறாள். மனம் சிபியை சுற்றி சுற்றி வந்தது.அவன் உடுத்தி இருந்த எல்லோ டி -ஷர்ட் நன்றாக அவனுக்கு சேர்ந்தது. போட்டு இருந்த பிரவுன் ஜீன்ஸ் கூட நன்றாக
தான் இருந்தது.ஏன் வேண்டா வெறுப்பாக நம்முடன் பேசினான் ? என்ன பிரச்னையோ அவனுக்கு? என்று எல்லாம் எண்ணம் இட்டது அவள் மனம்.


சாதனா தன் மனதை தானே இடித்து உரைத்தாள் . "ஏன் ஆண்களால் பட்ட போதாதா? அடங்கு .. .மனமே அடங்கு...எனும் புத்திசாலித்தனமாக நீ உண்டு உன் வேலை உண்டு என்று இருக்க பழகு" என்று !!


கார் அவள் வீட்டின் முன் நின்றது.... தொடரும்
 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#7
பாகம் :- 4
=========


"எந்தன் மனம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?
கண்ணும் கண்ணும் ஒன்றாய் பேசும் காதல் விந்தை தானோ ?"


வீடு வந்த சாதனா ,முதலில் வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தாள் .
அவள் மனக் கூண்டினுள் நாளாய் மண்டிக் கிடந்த பாட்டியின் நினைவுகள்
கட்டுக்குள் அடங்காமால் , பொங்கி எழுந்தன.கண்களில் நீரை லேசாக சுண்டி விட்டுக் கொண்டாள் .


எப்போதுமே உடல் வனப்பை சீராக வைத்து இருக்கும் சாதனா, அன்று ரோஸ் வாட்டர் பாத் எடுக்க முடிவு செய்தாள் .இரவு ஆகிவிட்டதே.... !! இரு வேளை குளிப்பவள், அந்த வேலையை முடித்தால் தானே இரவு உறங்க முடியும்??


யாரோ வாசல் தட்டும் சப்தம் கேட்டது. யார் ஆக இருக்கும்? என்று சிந்தித்தபடி,சாதனா சென்று வாசல் கதவு திறந்தாள். சிபி நின்றுக் கொண்டிருந்தான்.


சிபி :- ஹல்லோ, வீடு வந்தாச்சா? நான் பக்கத்து வீட்டில் தான்
இருக்கிறேன்.
ஏதாவது உதவி வேண்டும் என்றால், தயங்காமல் கேட்கலாம். இரவு உணவு தயார் செய்ய வேண்டுமா? இல்லை, நீங்கள் குளித்து ரெடி என்றால்,
எங்கள் வீட்டில்
சாப்பிடுகிறீர்களா?
சாதனா :- (சிரித்தபடி), வீடு வந்தாச்சு. குளிக்க கிளம்பிக்
கொண்டிருந்தேன்.
இரவு உணவு தயாரிக்க சோம்பேறித்தனமாக இருக்கிறதே என்று
நினைத்தேன்.
உங்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்? நான் வருவதால் கஷ்டம் ஏதும்....
சிபி :- என் வீட்டில் நான் மட்டும் தான் இருக்கிறேன்.
உங்களுக்கும் சேர்த்து கூக்கரில் அறிசிம் பருப்பு
சாதம்
வைத்து விட்டு தான் அழைக்க வந்தேன்.
சாதனா:- ஒஹ் , மிகவும் நன்றி... ஒரு 10 நிமிடம். ..... வருகிறேன் சார்,
சிபி :- சார் எல்லாம் வேண்டாமே...... என் பெயர் சிபி..சரி... வருகிறேன்
சாதனா :- ஓகே.. சிபி....


சாதனா விட்டு குளிக்கச் செல்கிறாள்.


ரோஸ் வாட்டர் கொஞ்சம் லைம் கலந்து தயார் செய்து வைத்திருந்த பாத் இல் ,மன இறு க்கங்கள்
குறைந்தது போல தோன்றியது.


குளித்து வெளிர் பச்சை சுடிதார் இட்டு, துப்பட்டா அணிந்து,கண்ணாடி முன் நின்றாள் . அவள் வெள்ளை நிறத்தை அந்த எடுத்துக் காட்டியது.. சிறியதாய் ஒரு பொட்டு மட்டும் அணிந்து வீட்டை பூட்டி சிபியின் வீட்டிற்கு கிளம்பினாள் .


சிபியின் வீட்டு வாசல் திறந்து தான் இருந்தது.


சாதனா :- சிபி, வந்து விட்டேன் ..


சிபி:- வாங்க, வாங்க சாதனா...உக்காருங்க...


சாதனா. வீடு ஹால் இல் உள்ள சோபா வில் அமர்கிறாள்..வீடு பெரியதாக தான் மனதில் நினைத்துக் கொண்டவள், வீட்டில் சோபா நாற்காலியைத் தவிர வேறு எதுவும் இல்லாததையும் கண்டாள் .


சிபி இருவருக்கும் தட்டில் உணவு, சிப்ஸ், நீர் எடுத்து வந்தான்.
இருவருமாக பேசிக் கொண்டே உணவு அருந்தினர்.


சிபி :- உங்களுக்கு கூட பிறந்தவர்கள் யாருமே இல்லையா ?
சாதனா :- இல்லை சிபி. நான் ஒரே பெண். அம்மா ஒரு நடிகை. அந்த பாதை எனக்கு பிடிக்கவில்லை.
என்னை என் அம்மாவின் பாட்டி தான் வளர்த்தார்கள்.
நான் ஒரு அழகு நிலையம் வைத்து இருந்தேன்

கொல்கட்டாவில்...... இப்போது இங்கேயே செட்டில்
ஆக வந்து இருக்கிறேன்...

இங்கே என் வீட்டிலேயே மாடியில் ஒன்று
துவங்கலாம் என்று திட்டம்.....

சிபி :- அப்படியா, சாதனா ... நல்லது .... எனக்கு ரெண்டு
தம்பிகள், ஒரு தங்கை இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மும்பையில். .அப்பா பிசினஸ்.. அம்மா
ஓவியர்... கேள்விப்பட்டு

இருக்கிறீர்களா கலைவாணி என்று? என் அம்மா தான்....


சாதனா :- ....நன்றாக தெரியுமே.... எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ....ரசிப்பது உண்டு...


சிபி :- நான் இங்கு என் வீட்டை சரி செய்ய வந்து இருக்கிறேன். பல வருடங்களாக பூட்டிக் கிடந்து, கேட்பார் அற்று கிடக்கிறதே.... மர வேலை நானே பார்க்கிறேன்....வேலைக்கு ஆள் எல்லாம் வைக்க வில்லை. நானே செய்கிறேன்.
சாதனா :- அப்படியா சிபி... எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? என் மாடியை அழகு நிலையமாக மாற்ற உங்கள் கருத்துகளை கொடுத்தால் நன்றாக இருக்குமே....எனக்கு உதவி செய்யும் நேரத்திற்கு உங்களுக்கு பணம் வேண்டுமானால் கொடுத்து விடுகி றேன்...
சிபி :- (புன்முறுவலுடன்)அதற்கு என்ன... செய்து விடலாமே... நாளை வியாழன் ...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... வெள்ளிகிழமை அன்று காலை வரட்டுமா வீட்டைப் பார்க்க?
சாதனா :- ஓகே சிபி... நல்லது. என்ன தொகை வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்....என் வீட்டு மாடியில் நான் உபயோகிக்காத சில நாற்காலிகள் இருக்கிறது... உங்களுக்கு வேண்டுமானால் வந்து பார்த்து பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்களேன்...கட்டில் கூட இருக்கிறது.....


சிபி :- சாதனா , மிக்க நன்றி... வருகிறேன்.. வெள்ளி காணலாம்.


சாதனா :- நீரை அருந்தியபடி.... உணவுக்கு நன்றி... வருகிறேன் சிபி.....
சாதனா தன வீடு சென்று தன கட்டிலில் சாய்ந்து கொண்டு உறங்கத் தொடங்கினாள் .


சிபியின் முகத்தில் புன்முறுவல் பெரு நகையாய் மாறியது.


வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினான்...


ஏன் ?? ஏன் ???
(தொடரும்)


 

girija chandru

Penman of Penmai
Blogger
#8
பாகம் :- 5
=========


"வாழ நினைத்தால் வாழலாம்...
வழியா இல்லை பூமியில் ?"


சிபியின் சிரிப்பு பார்த்தோமே.... என்ன காரணம்?


சிபியின் அப்பாவின் பெயர் ராஜசேகர் . அவர் மும்பையில் பெரிய பிஸினெஸ் புள்ளி.சிபியின் அம்மா கலைவாணி உலக புகழ் பெற்ற ஓவியர்...சிபியின் பெரிய தம்பி ராஜு ஒரு டாக்டர். சிறிய தம்பி ரங்கன் ஒரு கட்டிடப் பொறியாளர். அவன் தங்கை ஷோபா ஒரு நகை செய்யும் கடை சொந்தமாக வைத்து இருக்கிறாள். அவளுக்கு திருமணம் ஆகி, ஒரு குழந்தையும் இருக்கிறது... மூன்று வயதில்... ஷோபாவின் கணவர் கணேஷ் ஒரு விஞ்ஞானி.


சிபியின் பெயரில் மட்டும் 4 பெரிய கம்பனிகள் இருக்கின்றன... சிபி எல்லா பொறுப்புகளையும் திருவனந்தபுரத்தில் இருந்து தன கணினி மூலம் கவனித்துக் கொள்கிறான்....!!!!


அவன் எப்பேர்ப்பட்ட பணக்காரன் என்று அறியாமல், சாதனா வெகுளியாய் பணம் கொடுப்பதாக சொன்னதும்,நாற்காலிகள் தருகிறேன் என்றதும் சிபிக்கு சிரிப்பை வாரி வாரி கொடுத்து விட்டது..
.. ஆமாம். மனக் காயங்களை தீர்க்க சிரிப்பினால் மட்டுமே முடியும்...... சிரிக்கும் போது கொஞ்சம் தசைகளும், கோபப்படும்போது நிறைய தசைகளும் இயங்குவதாக சொல்கிறார்கள்... அதனால் தான் நாம் நிறைய சிரிக்க வேண்டும்.. கோபத்தை குறைக்க வேண்டும்....


சிபி சிரித்தபடி தன் வீட்டு வாசல் கதவை தாழ் இட்டான். மெதுவாக தன படுக்கை அறைக்கு சென்றான்.... எத்தனை நாட்கள் ஆகி விட்டது இப்படி வாய் விட்டு சிரித்து? யோசிக்கத் .
துவங்கினான்.


.. ஆமாம்.நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது... அவன் இப்படி சிரித்து.....


நான்கு வருடங்கள் முன்பு வரை.....


சிபியும் சிரித்து, மகிழ்ந்து வேலையினை, ஆடி ஓடிப் பாரதத் சந்தோஷமாகத் தான் இருந்தான். தன் குடும்பத்தினரை உயிராகக் கருதி, ஆசா பாசங்களுடன் தான் வாழ்ந்தான்.


சிபி மட்டும் அந்த மாயாவின் காதல் மயக்க வலையில் விழாமல் இருந்து இருந்தால், நன்றாக சிரித்தபடி தான் இருந்து இருப்பான்.... ஆனால், கால சக்கரத்தின் கோரப் பற்களுக்கு இடையில் மாட்டாதவர் யார்??


சிபியின் தந்தையின் தோழரின் மகள் மாயா... நல்ல அழகி தான். இல்லா விட்டால் சிபி தான் மயங்கி இருப்பானா? அவனை காதல் வலையில் மயக்கிப் பிடித்து, ரெண்டு வருடங்கள் மனைவியாகவும் தான் ஆகி இருப்பாளா?? அவ்வளவு வெள்ளந்தியாக மாயாவின் அடுக்கு பொய்களை நம்பி இருப்பானா? பணம், மனம், மதிப்பு என்று எவ்வளவு சேதங்கள் அவளால்?


சிபிக்கு அந்த ரெண்டு வருடங்களை நினைத்தபோது கொலை .நடுக்கமே வந்தது... என்ன ஒரு ஆத்திரம்? என்ன ஒரு ஆவேசம்?? என்ன ஒரு சண்டைகள் நொடிபொ ழுதிற்கும்???தன குடும்பத்தார்க்கு அவள் அட்டகாசங்கள் தெரியாமல் இருக்க சிபி என்ன பாடுபட்டான்? நண்பர்கள் மத்தியில் எத்தனை தலைகுனிவு? பாவம் சிபி.....
ஒரு நாள் இரவு அவன் போராட்டங்களுக்கும் ஒரு முடிவு வந்தது..... ஆமாம்...குடி போதையில் ஒட்டிய நண்பனின் கார் விபத்து ஏற்பட, அவனோடு ஒரு பார்ட்டி க்கு பொய் இருந்த மாயாவும் ஸ்பாட் அவுட்....

ஆமாம்... மாயாவிற்கு மேலை நாட்டு நாகரீகம் அனைத்தும் இருந்தது..... சிபியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அவள் ஆடிய ஆட்டத்திற்கு இறைவன் விபத்தின் மூலம் பாவத்தின் சம்பளம் எழுதினான்
போலும் !!!!


அந்த நிகழ்வு செய்தி தாள்களில் எல்லாம் வெளியாகி, அவனுக்கும், அவன் குடும்பத்தார்க்கும் எவ்வளவு தலை குனிவு??? அனைத்தையும் கசப்பான மருந்தாக முழுங்கி அல்லவா வாழ்கிறான்? இல்லை... இல்லை.... வாழ்வது போல நடித்துக் கொண்டிருக்கிறான்....


.ஆமாம்... விளையாட்டு போல, அவள் மறைந்து ரெண்டு வருடங்கள் ஆகி விட்டது...

குடும்பத்தார் அனைவரும் சிபியை வேறு ஒரு கல்யாணம் செய்ய நிர்பந்திக்க துவங்கி விட்டார்கள்.


குறிப்பாக .அம்மா.. இடிந்து நொறுங்கிக் கிடக்கும் மகனை
பார்க்க அவளால் முடியவே இல்லை.....மும்பையில் இருந்தால் இவர்களின் பேச்சுகளுக்கு பதில் சொல்லி மாளாது என்று, இந்த வீட்டை சாக்கு சொல்லி, ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி என்று திருவனந்தபுரம் வந்து ரெண்டு மாதங்கள் தான் ஆகிறது...


இந்த பூமியின் அழகும், நிசப்தமும், அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது..


பக்கத்து வீடு சாதனாவையும் தான்.....


பாலைவனத்தில் ஒரு சோலை போல இந்த அழகு சிறு பெண் சாதனா வந்து இருக்கிறாளே ....
பரிவு என்ற சொல்லுக்கு பொருள் காட்டுவாளா இவள் நம் மீது??


என்ன, அவனுக்கு வேண்டும் என்கிற அளவு பணம் கொடுக்கிறாளாமா?


சிபி சிரித்தபடியே உறங்க முயற்சித்தான்....


வியாழன் காலை வக்கீல் ராமநாதன் சாதனாவிற்கு என்ன செய்தி கொண்டு வரப் போகிறார்???


(தொடரும்)....
 

girija chandru

Penman of Penmai
Blogger
#9
பாகம் :- 6
=========


"பொன்னை விரும்பும் பூமியிலே ...
என்னை விரும்பும் ஓர் உயிரே ".


வியாழன் அன்று அதிகாலையிலேயே சாதனாவிற்கு விழிப்பு வந்து விட்டது.குளித்து , வெண்பட்டு புடவை மற்றும் சிகப்பு ப்ளௌஸ் இட்டு ஒரு குட்டி தேவதையாக ஒரு ஆட்டோவில் கிளம்பி ஆற்றுக்கா பகவதி கோயில் சென்றாள்.


சிறு வயது முதல் அம்பிகையே கதி என்று தொழுது வந்தவள்... "அம்மே பகவதி...இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்? எத்தனை சோதனைகள் இந்த இளம் வயதில்... எவ்வளவு அரும்பாடு பட்டு வாழ்வின் ஓரோர் கட்டத்தையும் எதிர் கொண்டிருக்க்றேன் அம்மே....எல்லாமே நீ உடன் இருக்கிறாய் என்ற ஒரே நம்பிக்கையில்.....பகவதி..காத்து ரக்ஷி...


எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்கு தெரியாதா? அப்பாவை இல்லாது செய்தாய். அம்மா இருந்தும் இல்லை. ஆசையாய் வளர்த்த பாட்டியும் இல்லை.நான் என்ன உன் கைகளில் ஒரு விளையாட்டு பொம்மையா?இஷ்டப்படி நூல் இழுத்து விளையாடுகிறாய்? எனக்கு ஒன்றும் இல்லை... அழுதாலும் தொழுதாலும் நீயே கதி என்று உன்னிடம் மட்டும் தானே நான் என் துயரங்களைக் கொட்டுவேன்?


அம்மே... அந்த ரவியின் கோரப் பிடிகளில் இருந்து என்னை இந்த அளவிற்காவது காப்பாற்றியமைக்கு நன்றி...
நன்றி... அம்மே"


என மனதின் உள்ளில் விகசித்து தொழுது, அர்ச்சனை தட்டு வாங்கி வெளியில் வந்தாள்.வந்த ஆட் டோவிலேயே வீட்டுக்கு திரும்பினாள் .


சிபி ஜன்னல் வழியாக அவள் வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்தான். "இந்த புடவை அவளுக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது...இவளை எப்படி இப்படி ஒரு அழகு பொம்மையாக் அந்த பிரமன் படைத்து இருக்கிறான்???" என்று வியந்து நின்றான்.... ஒரு வினாடி.. ஒரு வினாடி மட்டுமே ...
பிறகு தன தலையிலேயே மெதுவாக , செல்லமாக குட்டிக்கொண்டு, "நிறைய வேலை இருக்கிறது... வேளையிலே கண் வையடா தாண்டவக் கோனே" என்று பாடியபடி ஜன்னல் அருகில் இருந்து நகர்ந்தான்.


சாதனா வீட்டினுள் சென்று, வெண்பொங்கலும், சட்னியும் செய்தாள் .


உண்டு முடித்து, காபி அருந்தும் போது வக்கீல் ராமநாதன் வந்தார்.


வக்கீல் :- சாதனா , எப்படி இருக்கே மா ?
சாதனா :- நல்ல இருக்கேன் மாமா. உக்காருங்கோ. உங்களுக்கு காபி கொண்டு வரேன்.
(காபி கொண்டு வந்து தருதல்)
வக்கீல் :- தேங்க்ஸ் மா... காபி நல்லா இருக்கு.உங்க அம்மாவோட பாட்டி எழுதி வைத்து இருக்கிற உயிலை உனக்கு கொண்டு வந்து இருக்கேன் மா..

சாதனா :- தேங்க்ஸ் மாமா. பத்திரமா வைச்சுக்கறேன். உயிலோட சாராம்சம் சொல்லுங்கோ மாமா


வக்கீல் :- சாதனா, மகாலக்ஷ்மி அம்மா எல்லா எழுதி வைச்சு இருக்கா மா... அப்படி பார்த்தால்,

நாலு தேயிலை தோட்டத்தோடு , இந்த வீடு, கொச்சின் லே இருக்கிற பெரிய பங்களா எல்லாம் உனக்கு
தான் டா...இதைத் தவிர, ரொக்கம் 50 லக்ஷம் உன் பெயரில் பேங்க் லே இருக்கு டா... உனக்கு வேண்டிய
உதவிகளை பண்ணி கொடுக்க சொல்லி குடும்ப வக்கீலான என்னை கேட்டுகொண்டார்கள். நானும் சரி
நு சொல்லிட்டேன்.
சாதனா :- மாமா என்ன சொல்றீங்க...?? எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.. அம்மா கோபப்படுவாளே ... அவளுக்கு
எதுவுமே இல்லை நு எப்படி மாமா சொல்றது ??
வக்கீல் :- சாதனா, இங்கே பாரு, உங்க அம்மா வுக்கும்,மகாலட்சுமி அம்மாவுக்கும் இருந்தது நு உனக்கு
தெரியும் தானே??? அவங்க சொத்து மா இது.... அவங்க அதை அவங்க இஷ்டத்திற்கு யார் பேரில்
வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்,,.. முடியும் ?
சாதனா :- உண்மை தான், மாமா... அம்மா அவங்க இஷ்டத்திற்கு குழந்தையான என்னை தவ்விக்க விட்டு போனதிலே மஹா பாட்டிக்கு ரொம்ப வருத்தம்.அம்மா குணம் அப்படி தானே மாமா, என்ன செய்ய??
வக்கீல் :- ஆனா,சாதனா , உங்க அம்மா பேரிலே ஒரு லக்ஷம் போட்டு இருக்காங்க.. உன்னை கூப்பிட்டால், நீ எதுவும் அம்மா கிட்டே பேச வேண்டாம் டா... உனக்கும் உன் அம்மாவின் மேல் எவ்வளவு வெறுப்பு என்பதை நான் அறிவேன்.சண்டை போடாதீங்க... என்னை கூப்பிட சொல்லிடு .
நான் பார்த்துக்கறேன்...
சாதனா :- சரி மாமா... ..... அம்மா என்பவள் அந்த வார்த்தைக்கு தக்கபடி நடக்கவில்லை என்றால் என்ன
செய்வது?என்னை அழைத்தால் நான் உங்களையே கூப்பிடுகிறேன் மாமா .
வக்கீல் :- சரி..நான் கிளம்பறேன் டா... அப்புறம் உனக்கு போன் பண்றேன்.....


வக்கீல் கிளம்பி போய் விட, சாதன திக்ப்ரமை பிடித்தவள் போல கொஞ்ச நேரம் நிற்கின்றாள்.


பிறகு, தன அறைக்கு ச்நேதூர், தான் மனதில் உருவாக்கி வைத்து உள்ள அழகு நிலையம் அமைக்க
தேவையான திட்டங்களை (மனதில் இருந்த குட்டி மாளிகை தான் ) குறித்து தாளில் ஆக்கும் வேலையை
செய்கின்றாள் இரவு 10 மணி வரை !!!!


நாளை காலை சிபி வருவான் என்ற எண்ணமே இனித்திட,உறக்கம் அவள் அழகு விழிகளை மெல்லத் தழுவியது.(தொடரும்)....
 

girija chandru

Penman of Penmai
Blogger
#10
பாகம் :- 7
==========

"உன்னழகை கண்டு விட்டால்
பெண்களுக்கே ஆசை வரும் .....
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்?"

சிபி அடுத்த நாள் காலை வந்தான்.

சாதனா காலை 6 மணி அளவில் எழுந்து உடல் அசதி போக குளித்து,சின்ன சின்ன பூக்கள் போட்ட மஜெந்தா சுடிதார் அணிந்து, கையில் ஒரு நோட் பாட உடன், பேனா உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது சிபி "குட் மார்னிங்" என்றபடி வந்தான்.

சாதனா "வாங்க வாங்க, உக்காருங்க" என்று சொல்லி, ஒரு கப் காபி கொடுத்தாள்.அவளும் கையில் எடுத்தபடி, இருவருமாக உலக செய்திகளைப் பற்றி பொதுப்படையாக பேசி சிரித்து காபி அருந்தினர்.

சிபி " சரி... இனி வேலையைப் பார்ப்போமா? எப்படி புதுப்பிக்கும் திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

சாதனா, "சிபி, கீழ் தளம் நான் குடி இருக்கப் போகிறேன். முதல் தளத்தைத் தான் 'சாதனா அழகு நிலையம்" .. ஆக மாற்ற உத்தேசம். ரெண்டாவது மாடி மொட்டை மாடி... அழகான் இடம்... காற்றும், இயற்கை வளமும் கொஞ்சும் இடம். அது அப்படியே விடப் போகிறேன்.வாங்களேன்,... நாம் மாடிக்குச் சென்று பார்க்கலாம். பிறகு உங்கள் ஐடியா சொல்லுங்கள்...." என்றாள்.

சிபியும் சாதனாவம் மாடி ஏறினார்கள்... ஐந்தாவது, ஆராவஹ்டு படிகள் க்ரீச் என்று சப்தம் இட்டன. மரப் படிகள் தானே....

சிபி :- 'வீடு கட்டி எத்தனை
வருடங்கள் ஆயிற்று?
சாதனா ;- 60, 65 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்
சிபி :- இல்லை... சாதனா.. ந்த படிகள் சரி இல்லை... சிமெண்ட் படிகள் ஆக மாற்றணும்.
சாதனா :- மாற்றுங்கள்.... என்ன என்ன
மாற்ற நினைக்கிறீர்களோ செய்யுங்கள்.

பிறகு அடுத்த ஒரு மணி நேரம் இருவரும் முதல் தளத்தை (6 ரூம்கள்) முழுவதுமாக சுற்றி வந்து, சீர்திருத்தங்களை பற்றி சிபி கூற,
சாதனா குறிப்பு எடுத்துக் கொண்டாள்.

பிறகு, இருவரும் கீழே இறங்கினர்.
.
சிபி முன்னே நடக்க ஆறாவது படியில் சாதனா, காலை வைத்தபோது "மளுக்" என்று ஒரு சப்தம்.
"ஐயோ" என்றபடி நிலை தடுமாறி சாதன விழத் தொடங்கினாள் . சிபி சற்று நிதானித்து அவளை விழாமல் லாவகமாக கையில் தாங்கினாள்.

மயங்கியே விட்டாள் சாதனா.

சிபி அவளை சோபாவில் படுக்க வைத்து , தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தான்.

மயங்கி எழுந்த சாதனா, "சிபி, சிபி, இப்போ தானே சொன்னீங்க ... நிஜமாவே ரொம்ப பயந்துட்டேன்..."

சிபி :- சரி, சரி, ரெஸ்ட் எடுங்க. நான் பொய் காபி போட்டு எடுத்து வரேன்.

சிறிது நேரம் கழித்து ஒரு கப் காபி சூடாக குடித்த பின் சாதனா சரி ஆனாள்.

சாதனா :​ சிபி, உங்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தரனும்?
சிபி :- ஒரு நாளுக்கா ? (புன்முறுவலோடு...). ஒரு ஆயிரம் கொடுங்க
சாதனா :- ஐயோ... அவ்வளவு முடியாதே. காலியில் கணக்கு போட்டு வைத்தேன். ஒரு நாளைக்கு 600 ருபாய் கொடுப்பேன்.... உங்களுக்கு.... கூட ரெண்டு ஆட்கள் வித்துக் கொள்ளலாம். எல்லா மராமத்து வேலையும் நீங்க பண்ணி கொடுக்கணும்.
சிபி :- சரி... ஒப்புக் கொள்கிறேன்....
சாதனா :- நன்றி. எப்போலேர்ந்து வேலையை துவக்குகிறீர்கள்?
சிபி :- நாளையில் இருந்து....நீங்க கொஞ்சம் படுத்து ஓய்வு எடுங்கள்.... இன்று
வேறு எதுவும் செய்து கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம், ப்ளீஸ்.....

சிபி போய் விட்டான்.

சாதனாவின் மனம் அவள் நிலையிலேயே இல்லை....
மிகவும் வேதனைப்பட்டாள்... "சே... எப்படி ஒரு ஆடவன் கைகளில்
அப்படி விழுந்தோம்??? கஷ்டமாக இருக்கே.... அவர் என்ன நினைத்துக் கொள்வார்?"
என்று எண்ணித் துடித்தது அவள் மனம்.

******** தொடரும்
 

girija chandru

Penman of Penmai
Blogger
#11
பாகம் :- 8
=======

"மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது வாய் மொழி"

சாதனா சிபி சென்று வெகு நேரம் ஆகிய பிறகும்,
மனம் நிலை கொள்ளாமல் தவித்தாள். "என்ன, இப்படி ஒரு
நிலை நமக்கு? ஏன் மயங்கினோம்?" என்று அவளுக்குள் அவளே
புதிராய் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தாள்.

சாதனாவின் மனம் :-
"எத்தனையோ பிரச்னைகளை இந்த இளம் வயதில் பார்த்து ஆகி விட்டது.
சிபி என்பவரைப் பார்த்து மனம் சலனப் படுகிறேனா என்ன? ஆண் வர்கத்தையே
வெறுப்பதாக முடிவு செய்தேனே ... நொடிப்பொழுதில் எடுத்த தீர்மானங்கள் தூள்
ஆகினவா?

நல்லவர் தான். ஆண் அழகன் தான். இருந்தாலும், இப்படி நிலை குலையலாமா
நான்?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அல்லவா? அங்கே அந்த கிராதகனின் ஏமாற்று வலையில்
விழுந்து மீனாக துடித்தது, கொந்தளித்த நினைவுகள் மறந்து விட்டதா ?

இந்த உலகம் எப்போதும் பெண்களைத் தான் பழி சொல்லும். ஆடவர்கள் செய்வன
எதுவும் யாரும் கணக்கில் வைப்பத்தில்லை....தவிப்புகளும், துடிப்புகளும் ஆண், பெண் இருபாலாருக்கும் போது என்றாலும்,. பெண்கள் மட்டுமே ஏன் குற்றவாளிகளாக
கருதப் படுகிறார்கள்? உண்மை தானே? கஷ்டமும், நஷ்டமும், மான அவமானங்களும் எப்போதும் பெண்களுக்குத் தானே?

இனிமேல் , நாம் பார்த்து, யோசித்து பழக வேண்டும்.... இனி ஒரு முறை
இது போன்ற சந்தர்ப்பங்கள் அமைய நான் காரணம் ஆகக் கூடாது....சிபி என்னை
தப்பாக நினைத்தால் என்ன செய்வேன்?"

என்று எல்லாம் எண்ணியவாறு இருந்தது. உறக்கம் பிடிக்கவில்லை அவள் கண்களுக்கு..

மறு நாள் காலை, அவள் ஒரு அழகு மஞ்சள் பூ போட்ட சுடிதார் அணிந்து அவள் வேலைகளை பார்க்க துவங்கியபோது, சிபி வந்தான்.

சிபி :- சாதனா... உங்கள் வேலைகளை நீங்கள் பாருங்கள். நான் உங்களை தொந்தரவு செய்யாமல்
என் வேலைகளைத் துவனகுகின்றேன். ரெண்டு ஆட்களை நான் உத்விக்கு அழைத்து வந்து
இருக்கிறேன்.
சாதனா :- அப்படியே ஆகட்டும், சிபி... எனக்கு வெளியே போகும் வேலையும், அழகு பொருட்கள் வாங்கும் வேலையும் இருக்கிறது.நானா போய் விட்டு வருகின்றேன்

மூன்று மணி நேரம் சாதன, வெளியில் சென்று அவளுக்கு வேண்டிய அழகு நிலைய உபகரணங்களை வாங்க ஆர்டர் செய்தாள் .ஏற்கெனவே, கொஞ்சம் பொருட்கள் மும்பை யில் இருந்து பெற ஆர்டர் செய்து இருந்தாள். அந்த பொருட்களும் வரும் சமயம் ஆயிற்று.ஒரு வாரத்திற்குள் அனுப்புவதாக கம்பனி வாக்கு அளித்தது. முதல் பணம் கட்டி விட்டு, பொருட்கள் வந்த பிறகு மிச்சம் கட்டுவதாக கூறி வீட்டுக்கு வநதாள் சாதனா.

சிபியும் தான் வேலையினை பார்த்தவாறு, ஆட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று
உத்தரவு இட்டவாறு இருந்தான்..... பொழுதுகள் ஓடின..... வேக வேகமாக..... எண்ணவோ,
ஏங்கவோ, சமயம் இல்லை யாருக்கும்........

சிபி தன் மனதின் உள்ளில் , சாதனா குழைந்து குழந்தையாக தான் மேல் சாய்ந்த அந்த இனிய தருணத்தை மனதினுள் திரும்ப, திரும்ப அசை போட்ட வண்ணம் இருந்தான்."அந்த பெண்ணின்
மருள் விழிகளுள் எத்தனை அச்சம்????" என்று வியந்தான்.

ஒரு வாரம் அப்படியே சென்றது. சாதனாவும், சிபியும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும்
அவரவர் வேலைகள் வெகுவாக இருந்தது.

ஒரு வாரத்திற்கு பின் ஒரு ஞாயிற்று கிழமை, சாதனா அன்று நேரம் கழித்து எழுந்தாள்.

எதிர் வீட்டை நோக்கினாள் ஜன்னல் வழியாக.......

அழகான, உயரமான ஒரு யுவதி, வெளிர்பச்சை சுடிதாரில் ஒரு பெண் !!! அவள் இடுபில் ஒரு ஆண் குழந்தை (வயது 2 இருக்கலாம்...)தோட்டத்தில் அந்த பெண்ணின் அருகில் ஒரு பெண் குழந்தை அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தது.

சாதனா திடுக்கிட்டாள். யார் இவள்? ஒரு வேளை ....

ஒரு வேளை ......

ஒரு வேளை.........சிபியின் மனைவியாக இருக்குமோ???

நினைப்பே அவளுக்கு எட்டிக்காயாக கசந்தது.......

(தொடரும்) 
Status
Not open for further replies.