தன்னிச்சையான சிறுநீர் கழிப்பு

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,718
Location
Germany
#1
முடி நரைப்பது, மறதி, கண்கள் புரையோடுவது, இதய, நுரையீரல் செயல்பாடுகளில் தொய்வு போன்ற வயதாவனவர்களுக்கு வரும் உடல் உபாதைகளில் ஒன்றுதான் இந்த தன்னிச்சையான சிறுநீர் கழிப்பும்.

இந்த பாதிப்பு கண்டவர்கள், உடல் இம்சையை விட மனதளவில் மிகவும் சோர்வுற்றிருப்பார்கள். எனவே, அவர்களுக்கான முதல் தேவை அக்கறையும் அரவணைப்பும்தான். அடுத்தபடியாக சிகிச்சை மற்றும் பராமரிப்புகளை கவனத்தில் கொள்ளலாம்.

[TABLE="width: 250, align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் சிறுநீர்ப்பாதை ஆண்களைப் போலில்லாமல் நேர்பாதையாக இருப்பதால் சிறுநீர் துவாரத்தில் இருக்கும் கிருமிகள் உடலுக்குள் தொற்ற ஏதுவாகி, அதுவே இப்பிரச்னைக்கு காரணமாகலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை அறுபது வயதை எட்டியவர்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி அளவில் பெருத்துவிடுவதும், கூடவே, ஆண்களில் வயதானவர்களுக்கு வரும் வாய்ப்புள்ள புரோஸ்டேட் கேன்சரின் ஆரம்ப அறிகுறியாகவும் இது இருக்கலாம்.


இதுதவிர இருபாலினருக்கும் யூரினரி பிளாடர் எனப்படும் மூத்திரப்பையில் புற்றுநோய் அல்லது ‘சிஸ்ட்’ எனப்படும் சிறு கட்டிகள் உருவாக்கம் போன்றவற்றாலும் தன்னிச்சையான சிறுநீர் கழிப்பு ஏற்படலாம். ரத்தத்தில் அதிகரிக்கும் கால்சியம், பாஸ்பேட், யூரிக் ஆஸிட் போன்றவற்றால் சிறுநீரக கற்கள் உருவாவது மற்றொரு காரணம்.


சிறுநீர்ப் பாதை தொற்று கண்ட பெண்கள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மூலமும், புரோஸ்டேட் கேன்சர் கண்டறியப்பட்ட வயதான ஆண்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் புரோஸ்டேட்டை நீக்கியும் இப்பிரச்னையில் இருந்து மீளலாம்.


பொதுவாக, வயதானவர்களுக்கு தன்னிச்சையான மூத்திரப்பெருக் குடன் ரத்தமும் தென்பட்டால்... பிளாடரில் பிரச்னை தீவிரமாக இருக்கலாம். எனவே, குடும்ப மருத்துவர் மற்றும் சிறுநீரக சிறப்பு மருத்துவரின் ஆலோ சனையுடன் உங்கள் மாமனார், மாமியாரின் உபாதைக்கான காரணத்தைக் கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் இந்தத் தொந்தரவைக் கட்டுப் படுத்தவோ... தள்ளிவைக்கவோ செய்யலாம்.


அட்டாச்டு பாத்ரூம், போதிய விளக்கு, நீர், கைப்பிடி, வெஸ்டர்ன் டைப் அமர்வு டாய்லெட் போன்றவை அவர்களுக்கு வசதியாக இருக்கும். சர்க்கரை மற்றும் அடிக்கடி சிறுநீர் இவற்றை காரணம்காட்டி வயதானவர்கள் நீர் அருந்துவதைத் தவிர்ப்பார்கள். இதுவும் கூடுதல் அவஸ்தைகளை வரவழைக்கும் என அறிவுறுத்தி போதுமான நீர் அருந்தச் செய்வதும் சிறுநீரக செயல்பாட்டுக்கு அவசியமானது.


பெண்களைப் பொறுத்தவரை சிறுநீர் கழிப்புக்குப் பின், ஒவ்வொரு தடவையும் தேவையான நீரைக்கொண்டு சுத்தம் செய்து கொள்வது நல்லது. சிறுநீர் கழித்ததும் உதறும் பழக்கத்தை ஆரம்ப பிராயத்திலேயே சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்."
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
nice information viji...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.