தன் பயமும் மனோவியாதியே!

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#1
தன் பயமும் மனோவியாதியே!

மனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒருவகை பயம் பின்னாளில் மனோவியாதியாக மாறி விடுவதுண்டு.

கமல்ஹாசன் நடித்த `தெனாலி' படத்தில், அவர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக நடித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சிலர் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பர்.

வேறு சிலர் ஏதாவதொரு நிகழ்ச்சிக்குப் பிறகு பயந்த நிலையைக் கொண்டிருப்பர்.


இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் முறை எனலாம். சிறிய வயதில் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக `பூச்சாண்டி' என்று தொடங்கி, காலப்போக்கில் அவர்கள் வேறுவகையான பயம் அல்லது அச்சத்தை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.

வேறு சிலருக்கு தாங்கள் செய்யும் சட்டவிரோத செயலால் பயம் தானாகவே ஏற்பட்டு விடும்.

அதாவது எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு பயம் இருக்கும்.

இதனால் அவர்களால் வேறு எந்தப் பணியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

வேறு சில நேரங்களில் அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களைக் கண்டு அஞ்சுவர். ஆனால் அதனை நேரிலும் வெளிப்படுத்த முடியாமல் மனோரீதியாகத் தவிப்பர்.

திறமையின்மையால் தவிப்பார்கள்.

மாறாக தங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், எப்போதும், ஏதாவதொரு குற்ற உணர்ச்சியுடனேயே சந்தேகக் கண்களைக் கொண்டிருப்பார்கள்.

ஏதாவது சூழ்ச்சி தங்களுக்கு எதிராக இருக்குமோ என்பதை சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், பணியை திறம்பட செய்ய முடியாமல், அதுவே அவர்களின் வேலைத் திறனைப் பாதித்து விடும்.

நாளடைவில் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நிலை, மனதளவில் எரிச்சலை வரவழைத்து, எதிரில் இருப்பவர்களிடம் தேவையற்ற கோபத்தை உருவாக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.

இதன்காரணமாக மனோதிடம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மனோவியாதியாகி விடக்கூடிய சூழல் உருவாகும்.

எனவே மனதை குழப்பம் இல்லாமல் வைத்திருப்பதுடன், இறுக்கம் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக உரிய மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம்.

தன்பயத்தை தவிர்த்து, தலைசிறந்து வாழ்வோம்!
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
Well said sumitra. Bayam varum pothu manasa thidama vechika pakuvam venum . Athuku meditation is also one way.
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#3
super karuthu sumitra..........namma valarum pothey bayamum namm koodavey valaruthu............intha generationla itha thavirkanumna parents namma kaila thaan irukku...........
 

harsne

Friends's of Penmai
Joined
Aug 28, 2012
Messages
236
Likes
505
Location
Chennai
#4
Thanks for sharing dear...nice thought...
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Dear Viji, I accept your view and we will have follow your suggestion doing meditation in eradicating this problem. thanks
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Dear Lashmi. thanks for your views and comments. I fully agree with your point that we the parents have to devote ourselves for the eradication of this fear from the minds of our children. thanks
 

mahis

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 15, 2011
Messages
1,075
Likes
3,777
Location
Ramnad
#9
Nice post sumitra..

Pothuva enga paaty solluvanga nama yaarukum bayapada koodathu ethukum bayapada koodathu
yenna iraivan ulakathula ellathayum vida sirantha uyirinama nammala than padachurkan so iraivana thavira yaarkum bayapada kodathunu solluvanga
ippo atha than nan solven en ponnutayum
poochandingra bayamellam kamikrathilla n nama ethukaha apdi bayatha kamikramo athu ipdi negatives kondu vanthudum and also valanthapram kuruttu thairiyam vanthudum so enaku bayam apdina athu kadavul parthutu irukar apdingra oru visayathula iruntha pothumnu thonuthu frnds :)
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.