தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,986
Likes
16,986
Location
Coimbatore
#1
தோழமைகளுக்கு வணக்கம்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் இந்த மாதப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் இளமை. தேன் தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களின் பொருளால் இதை உணரலாம்.

இத்தகு சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி காலத்தால் அழியாத காப்பியங்களையும், இதிகாசங்களையும் தன்னுள் கொண்டது. காப்பியங்களை எடுத்துக் கொண்டால், முக்கியமாக ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவற்றைச் சொல்லலாம்.

பண்டையக் காலந்தொட்டு பாரதத் திருநாடெங்கும் பரவி நிலை பெற்றுள்ள இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசம் எனப்படும்.

இக்காப்பியங்கள் மற்றும் இதிகாசங்கள் பல கதை மாந்தர்களைக் கொண்டே உலகுக்கு பல நற் சிந்தனைகளையும், நல்ல கருத்துக்களையும் இயம்புவதாக அமைந்துள்ளது.

நீங்கள் செய்ய வேண்டுவது யாதென்றால், மேலே குறிப்பிட்டுள்ள காப்பியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஏதேனும் ஒன்றிலிருந்து உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது என்றும், எதனால் உங்களை அந்தக் கதாப்பாத்திரம் கவர்ந்தது என்றும் விளக்க வேண்டும்.

விதிமுறைகள்:

  • ஒரு உறுப்பினர் ஒரு கதை மாந்தரைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும்.
  • இங்கே போட்டிக்காக பதியப்பட்டிருக்கும் பகிர்வு உங்களின் சொந்த எழுத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வேறு தளத்திலிருந்து எடுத்துப் பகிரப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
  • பதிவு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
  • போட்டிக்கான கடைசி நாள்: ஏப்ரல் 30, 11:59 pm IST.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி

Very nice contest! thank you!
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,420
Likes
16,824
Location
Singapore
#4
அடடே....அருமையான போட்டி..போட்டிக்கான entryகளை படிக்க இப்போவே கண்ணையும் கருத்தையும் தயாரா வைச்சுக்கறேன். போட்டியாளர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!:thumbsup
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,756
Location
Bahrain
#5
ஐம்பெருங்காப்பியங்களை அலசத் தயாராக்கி விட்டீர்கள், நிறைய நட்புகள் பங்களிப்பார்கள் என நம்புகிறேன்.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#6
அருமை அருமை....:thumbsup
கருத்துக்களை அறிய ரொம்ப ஆவலாக உள்ளேன் :).
நன்றி கார்த்தி :).
 

kirubajp

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 12, 2014
Messages
207
Likes
797
Location
திருவாரூர்
#7
   


களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன்.
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள்.


இந்த பாடலுக்கு சொந்தக்காரன், இந்த கதையின் தலைவனை பற்றி சொன்னால் மணிரத்னம் படங்களும் அதில் வரும் ஹிரோக்களுமே ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

அத்தனை காதல்காரன் ஆனாலும் காமுகன் இல்லை. தேவலோகத்தில் உதித்த மணியாகும், கேட்டதை கொடுக்கும் மணியாகும் இந்த புதிரே நூலின் பெயர் ஆகும்.


சச்சந்தனுக்கும், விசயைக்கும் மகனாக பிறந்தான். பாரேங்கும் பொற்றும் அழகை கொண்டவன் பிறந்ததோ சுடுகாட்டில் வளர்ந்ததோ வணிகனிடம் மகனாக. அச்சணந்தி ஆசிரியர் பொற்றும் சிறந்த மாணவனாக விளங்கினான். அவனின் உத்தரவுக்காக தன் பகைவனின் மீது கூட கோபம் கொள்ளாதவன்.

எட்டு பெண்களை மணந்தவன், ஊர் பொற்றும் மன்னனாகவே வாழ்ந்தவன்.

மணநூலுக்கு சொந்தமானவன், செய்யும் செயல்கள் அனைத்தும் கார்மேக வண்ணனையே ஞாபகபடுத்தும். சீவகன் பிறப்பில் இருந்து, அவன் அடையும் துறவறம் வரைக்குமான காதைகள் அழகானதாகவும், அர்த்தம் உள்ளதாகவும் அமைந்திருக்கும்.
சீவகனின் ஒவ்வொரு செயலுமே கவரகூடியதாகவே இருக்கும்.
ஆநிரையை கவர்வதில் இருந்து, கட்டியங்காரனை தோல்வியுற செய்தல், போர் புரிந்து நந்தகோன் மகளை மணம்முடிப்பதாகட்டும் எல்லாமே சீவகனின் அறிவு கூர்மையையும், அவனின் மன தைரியத்தையும் விளக்க கூடியதாகவே இருக்கும்.

எட்டு பெண்களை மணந்தாலும் தன்னிலை மாறாதவன் மன அடக்கம் கொண்டவனாகவே இருந்தவன், முப்பது ஆண்டுகள் மக்களை மகிழ்வுடன் வைத்து ஆட்சி புரிந்தவன். தன் கடைசி காலத்தில் முக்தி பெற்று துறவறம் பூண்டவன். இளமையிலேயே வாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்து சிறந்த மன்னன் ஆக வாழ்ந்தவன்.

சீவகன் போரில் வெற்றிக் கொண்ட போது சொன்ன வரிகள் அவனை சிறந்தவன் என்றே உணர்த்தும்.

“வாழ்க்கையில் நாம் தனி நின்று எதையும் சாதித்து விட முடியும் என்று நினைத்தால் தோல்விதான் நேரும். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று கூறுவதை மறக்க முடியாது. நாட்டு மக்களையும் தூண்டி விட்டால் தான் உட்பகை எழாமல் தடுக்க முடியும்; அதற்காகத்தான் நான் மேடை ஏறினேன். வில்லம்பு மட்டும் வெற்றி தராது; சொல்லம்புக்கும் அத்தகைய ஆற்றல் உண்டு; நாம் நினைப்பதைத் தெளிவாக ஒழுங்குப்படுத்திப் பிறர் ஏற்கும் படிச் சொன்னால் இந்த ஞாலமே நம் பணியைக் கேட்கும்; நாநலம் என்பது நயக்கத்தக்கது. அதனை நான் மேற்கொண்டேன்”.


மன்னன் எப்படி இருந்தான் என்பதை என் கண்முன்னே உணர்த்தியவன் சீவகன் தான் கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும் என்னை கவர்ந்த கதாபாத்திரம் சீவகன் தான். காப்பியங்களில் வரும் பிற ஆண் கதாபாத்திரங்களில் சீவகன் தனிந்தே தோன்றுகிறான்.
 
Last edited:

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,752
Likes
8,390
Location
India
#8
அருமை அருமை.. நானும் பங்கேற்க முயல்கிறேன் அக்கா :)

@kirubajp சீவகனைப் பற்றிய உங்களது பதிவே அழகு. அழகாய் தொடங்கி வைத்துவிட்டீர்கள். உங்களது தமிழும், எழுதிய விதமும் வெகு சிறப்பு. வாழ்த்துக்கள்.
 
Last edited:

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
716
Likes
2,015
Location
Chennai
#10
Wow! Very nice topic! Thanking you for tagging me! Will try my level best to give my presentation!

Cheers to participants!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.