தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,006
Likes
17,057
Location
Coimbatore
#1
பெண்மை நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

புதிய வருடத்தில் இதோ உங்களுக்காக தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி.

வாழ்வும் வளமும், நாளும் பொழுதும் சிறப்பாய் அமையவேண்டி வரவேற்கும் இந்த தமிழ் புத்தாண்டில் நம் தமிழர் மனைகளில் (வீட்டிலும் நம் நாட்டிலும்) என்ன என்ன மாற்றங்கள் அமைய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். மாற்றங்கள் நமக்கும், நம் சமூகத்துக்கும், நம் சந்ததிக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாக எழுதுங்கள்... சிறப்பான
கருத்தை பதிவு செய்பவருக்கு பரிசு வழங்கப்படும்.


விதிமுறைகள்:

  • ஒருவர், ஒரு முறை மட்டுமே தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும், உங்களது கருத்தை பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 22ம் தேதி.
  • உங்களது கருத்துக்கள் கண்டிப்பாக தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். (தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி என்பதால்)
  • உங்களது கருத்துக்கள் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • உங்களது சொந்த கருத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
  • சிறந்த கருத்தை பதிவை செய்தவர் பற்றிய விவரங்கள் ஏப்ரல் 23ம் தேதி அறிவிக்கப்படும்.
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,809
Likes
4,151
Location
villupuram
#2
இந்த தமிழ் புத்தாண்டில் நம் தமிழர் மனைகளில் (வீட்டிலும் நம் நாட்டிலும்) அமைய வேண்டிய மாற்றங்கள்.

1.உண்ணும் உணவு பொதுவில் வேண்டும்,உழைக்கும் கைகள் நிலைபெற வேண்டும்.

2. தமிழும் அழகும் நின்றிட வேண்டும்,வாழ்வோடு நித்தம் கலந்திட வேண்டும்.

3. நீதி நிலையாய் வென்றிட வேண்டும், எளியவன் கையில் இருந்திட வேண்டும்.

4. மேற்கின் மாயை நீங்கிட வேண்டும், தன் சுயமே தமிழகம் அறிந்திட வேண்டும்.

5. பாவம் யாதென்று அறிந்திடவேண்டும், செய்ததை வருந்தி திருந்திட வேண்டும்.

6. தனமும் இன்பம் வேண்டும், வேற்றுமை இல்லா நிலையில் வேண்டும்.

7. தன் கடமை யாதென அறிந்திட வேண்டும், நின்று அதன்படி வாழ்க்கை அமைதிட வேண்டும்.

8. இறையே நிலை என்ற எண்ணம் வேண்டும், பகுத்தறிவு அதன் உள்ளே அமைந்திட வேண்டும்.

9. ஜாதி ஒழிந்திட வேண்டும், சமத்துவம் தழைதிட வேண்டும்

10. பெண்ணியம் வென்றிட வேண்டும், அந்த வெற்றி என்றும் நிலைதிட வேண்டும்.


இவையே என் தமிழகம் பெற்றிடவேண்டும்.
 
Last edited:

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#3
சிறந்த கல்வியும் சிறப்பான வாழ்வும்
பிறந்த மழலைக்கு கிடைக்க வேண்டி
பெற்றோர் எண்ணம் பெரிதும் இருக்க
படாதபாடுபட்டு கிடைத்திட உழைப்பர்.

அறிவில் சிறந்து பரீட்சையில் வென்று
ஆளாகி அவர்கள் உழைக்க முயன்று
ஆதரவாய் அன்பாய் இருப்பார்களென்று
ஆயிரம் கனவோடு தன்நலம் மறப்பர்.

சிந்தனை விரியுது சிறப்பும் தெரியுது
சீராய் வளர்த்திட தாயுள்ளம் தவிக்குது
சீரழிவு நிறைந்த சூழலில் வாழ்ந்தாலும்
கல்விச் செல்வமே துயர்களைக் களையுமே
 

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#4
இலவசங்கள் இல்லாமல் இலவசத்திற்கு செலவு செய்யும் பணத்தை கல்விக்கா ஏழை எளிய மாணவர்களுக்கு பயன் படும் படியாக இருக்க வேண்டும் கவசத்தி உள்ளவர்கள் எதாவது ஒன்று இரண்டு பேருக்கு கல்வி செலவை செய்தால் நம்மலுடைய வாழ்வும் நன்றாக இருக்கும் அடுத்தவர் வாழ்வும் வளமும் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் கல்வி கொடுப்பதே ஒரு நல்ல மாற்றமாகும்
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,533
Location
Hyderabad
#5
இந்த தமிழ் புத்தாண்டில் நாம் அனைவரும் மாசு இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்துகொள்ள வேண்டும்

குப்பைகளை ரோட்டிலும் கண்ட இடங்களிலும் போடுவதை நிறுத்த வேண்டும்


ரோடு அகலபடுத்த வேண்டி பெரிய நிழல் தரும் மரங்களை வெட்டி விட்டோம் ஒரு மரம் வெட்டினால் ஒரு மரம் நடலாமே, இதனால் வெயிலின் சூடு கொஞ்சமேனும் தணியும் மழை வரவும் இந்த மரங்கள் உதவும் பூகம்பம் சுனாமி போன்றவற்றை முடிந்த அளவு தவிர்க்கலாமே.


கண்டிப்பாக வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்


ஆற்றில் மணல் எடுப்பதை தவிர்த்தால் வறட்சி நிலை மாறுமே.


இயற்கை முறையில் விளைவித்த காய் கனிகளை நாம் அன்றாடம் உபயோகபடுத்துவதால் நோய் நொடிகளை தவிர்க்கலாம்


நாம் இதனால் நம் சந்திதிகளுக்கு நல்ல வளமான இந்தியாவையும் ஆரோக்கியமான வாழ்வையும் தரலாமே


முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#6
வீட்டில் மாற்றங்கள்
1 . டிவி சீரியல்கள் பார்ப்பதை குறைத்துகொண்டு வீட்டு பொருளாதாரம் உயர குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் வயதுக்கு ஏற்றபடி முயற்சி செய்யவேண்டும். [18 வயது தாண்டியவர்களுக்கு இதை சட்டமாக கொண்டு வந்தாலும் சந்தோஷம்தான்.]
2 . அளவுக்கு அதிகமாக வீட்டுக்கு பொருட்களை வாங்கி குவிப்பதை தவிர்த்து தேவை என்பதை மட்டும் வாங்கினால் பணமும் மிச்சம் , வீட்டிற்குள் குப்பை சேருவதும் மிச்சம்.[ஷாப்பிங் கலாச்சாரம் எந்த அளவு உள்ளது என்று உங்களுக்கே தெரியும்]
நாட்டில் மாற்றங்கள்
1 . குழந்தைகளுக்கான கல்வி ஆண்டை மார்ச் பத்து தேதியோடு முடித்துக்கொண்டால் மிகவும் நல்லது.[அக்காலம் போல் மும்மாரி இல்லை, இளவேனில் இல்லை , தென்றலும் இல்லை. .தாங்க முடியாத வெயில் .. summer pox , summer strokes ]
2 . இலவசங்களை குறைத்துகொண்டு சோம்பேறிகளை வளர்க்காமல் இருப்பது நல்லது.
 

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#8
நந்தன தமிழ் புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களாகிய நாம் நமது தாய் மொழி தமிழை தொலைந்து போகமல் உரிய மரியாதையை கொடுத்து பாதுகாப்பது நமது கடமை ஆக கொள்வோம் .நமது பாரம்மியமிக்க கலாசாரத்யை போற்றி பாதுகாப்பது நமது தலையாய கடமையாக கொள்வோம் .இதுவே தமிழர்களாகிய நமக்கு சிறப்பு .
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,035
Likes
4,804
Location
Trichy
#9
உண்ண உணவும் அருந்த நீரும் பசித்திருப்போருக்கு வழங்கவும், தன் ஆசைகளை குறைத்து பிறரின் தேவைகளை மதித்து வாழவும், முடிந்த வரை அனைவருக்கும் உதவி புரிந்திடவும், திறமைகள் எவரிடம் இருந்தாலும் பாராட்டவும், படிக்க வசதி இல்லாத பிள்ளைகள் படிக்க சிறு உதவி புரியவும், பெரியோர்களை மதிக்கவும், சிறியோர்களை நேசிக்கவும், பிறரையும் தன் போல் நினைக்கவும், ஆண் பெண் அருந்ததியினர் அனைவரையும் சமமாய் மதிக்கவும், மாற்றுதிரனாளிகளையும் முழு மனிதனாக மதிக்கவும் வேண்டும்.

தனக்குச் சொந்தமில்லாத பொருட்களை வைத்திருத்தல், பொது உடமைகளை பாழ்படுத்துதல், எளியோரை வஞ்சித்தல், பிறர் உழைப்பில் வாழுதல், பிறர் உழைப்பின் பலனை ஏமாற்றி அனுபவித்தல், இயற்கையை சீரழித்தல், அந்நிய மோகத்திற்கு அடிமையாகுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இவற்றை நாம் பழக்கிக் கொள்வதுடன் நம் பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,006
Likes
17,057
Location
Coimbatore
#10
பெண்மை நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்!!!

பெண்மையின் தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டியில் கலந்துகொண்டு, தமிழர் மனைகளில் வர வேண்டிய மாற்றங்கள் பற்றி மிக அழகாகவும் ஆழமாகவும் கருத்துகளை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழர் மனைகளில் (வீட்டிலும் நம் நாட்டிலும்) அமைய வேண்டிய மாற்றங்கள் என்று 10 சொற்றொடரில் அனைத்தையும் சொல்லிவிட்டார் Lali அவர்களை இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கிறோம்.


வாழ்த்துக்கள் Lali... உங்களுக்கான பரிசு இதோ....
Keyholder with Painting.JPG

போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள். எல்லோரும் தத்தம் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் , ஆனால் ஏன் மின் தடை பற்றி மட்டும் யாருமே சொல்லவில்லை. எல்லாருமே மின் வெட்டிற்கு பழகிவிட்டீர்களா, இந்த தமிழ் புத்தாண்டில் தடையற்ற மின்சாரம் தமிழர் மனைகளுக்கு வேண்டாமா?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.