தமிழ் மருத்துவம்

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#1
ஆரோக்கியமான பெண்களால் தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.
சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.

குடும்பத்தை பற்றிய சிந்தனையாலும், பணிச் சூழலாலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.

கரோட்டினாய்டு உணவுகள்

பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.

ஒமேகா 3 உணவுகள்

பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம்.

மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.

இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

அத்திப்பழம், பால்

அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.

ஓட்ஸ், தக்காளி

ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.

தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.

இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#2
உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம் என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.
உழுந்தின் அகல இலை வீசி” (நற்:89:5-6) ”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)
குறுந்தொகை 68. குறிஞ்சி திணை – அள்ளூர் நன்முல்லையார் – தலைவி சொன்னது
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

The roots of the uzhunthu bean plants are red
like the legs of jungle hens,
and herds of deer attack their mature pods.
For the harshness
of this cold season with dew
there is no cure
but the chest of my man. Translated by Vaidehi

பூழ்க்கால் அன்ன – like the jungle hen, செங்கால் உழுந்தின் – reddish ulundhu bean, ஊழ்ப்படு முதுகாய் – overripe pods, உழையினங் கவரும் – deer herd attack, அரும்பனி – harsh cold, அற்சிரம் – cold season, தீர்க்கும் – remove that difficulty, மருந்து பிறிதில்லை – there is no other medicine, அவர் மணந்த மார்பே – except his chest.

குறுந்தொகை 384, ஓரம்போகியார், மருதம் திணை – தோழி தலைவனிடம் சொன்னது – the heroine’s friend refuses the hero entry
into her friend’s house on his return from his concubine, and is cynical
உழுந்து உடைக் கழுந்தில் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே.

Lord, you made promises to those women
with small bangles, thick long hair
and uzhunthu breaking pestle-like smooth
thoyyil painted shoulders
after enjoying them.
Great that you are abandoning them! Translated by Vaidehi

உழுந்து உடை – breaking uzhunthu, black gram, கழுந்தில் – pestle, ulakkai, கரும்புடைப் பணைத்தோள் – thoyyil painted wide shoulders, நெடும்பல் கூந்தல் – long thick hair, குறுந்தொடி மகளிர் -women with small bangles, நலனுண்டு – enjoy them, துறத்தி யாயின் – if you abandon, மிக நன்று – it’s great, அம்ம – an expletive, expression word, மகிழ்ந – lord, நின் சூளே – your promises

ஐங்குறு நூறு 211, குறிஞ்சி திணை, கபிலர் – தோழி தலைவியிடம் சொன்னது
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய்.

Mother! This leaf skirt
made from the leaves of asoka trees
that grow on mountain tops
filled with vayalai vines
looking like threads
made with uzhunthu flour and ghee,
will wilt if it is not worn. Translated by Vaidehi

நெய்யொடு மயக்கிய – mixed with ghee, உழுந்து நூற்றன்ன – ground ulundhu – like, வயலையஞ் – having vayalai vine (purslane), சிலம்பின் தலையது – mountain crest, செயலையம் – asokam tree, பகைத்தழி – changed leaves, வாடும் – will fade, அன்னாய் - woman/friend/mother
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#3

பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் “பாசிப்பருப்பு பாயசம்” மிகவும் புகழ் பெற்றது.

பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.
தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும். 100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
மருத்துவக் குணங்கள்:
புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.
நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.
பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றே குறைய ஒரே குணமுள்ளவை தான்.
பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.
பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
பச்சைப் பயறின் தன்மை ஈரலின் *பிர*ச்*சினையை அ*திகமா*க்கு*ம்.
எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பச்சைப் பயறை வேக வைத்து அ*ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
ப*ச்சை*ப் பயறை அ*திக*ம் சா*ப்*பி*ட்டா*ல் உட*ல் அ*திக கு*ளி*ர்*ந்த த*ன்மையை அடை*ந்து*விடு*ம். எனவே ஆ*ஸ்துமா, சைன*ஸ் போ*ன்ற நோயு*ள்ளவ*ர்க*ள் கவனமாக கையாள வே*ண்டு*ம்.
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#4பனை மரத்தின் மருத்துவ குணங்கள்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆறும்.

உலகளாவிய ரீதியில் எடுத்து பார்க்கின்றபோது மிக செழிப்பான மற்றும் தொடர்பான இலக்கிய பாரம்பரியம் இலங்கைக்கு சொந்தமாக இருப்பதை காணலாம். கிறிஸ்தவ காலகட்டம் ஆரம்பத்திற்கு முன்னிருந்தே இது தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை எமக்கு காணலாம். கிறிஸ்தவ ஆண்டுகளால் பார்க்கின்ற போது 20 நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தாள இனத்தை சேர்ந்த (பனை மரம்) பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் பாரம்பரியம் ஒரு கலையாக தமிழர் மத்தியில் நிலவியிருப்பதை காணலாம்.

பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் கலையினுள் ஒருவிதமான பாரம்பரிய தொழில்நுட்ப விதிமுறை நிலவி இருந்துள்ளதோடு அவற்றில் கலாசார ரீதியிலான முக்கியத்துவமும் உள்ளடங்கி உள்ளது. புராதன சமுதாயத்தினுள் சமயம், கலாசாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவையுடன் ஒன்றுசேர்ந்த ஒரு சாம்பிரதாயம் பனை ஓலை ஏடுகள் எழுதுவதில் உள்ளடங்கி இருந்தது. ஆகையால் இது சராசரி எழுத்து கலைக்கு அப்பாலான அகலமாக பரந்துப் போயுள்ள எழுத்து கலாசாரமாக எண்ணலாம். எமது பாட்டன் முப்பாட்டன்களால் ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகள் மற்றும் அதனால் பெற்றுக்கொண்டுள்ள மனுவங்களை அடிப்படையாகக் கொண்ட விலை மதிக்க இயலாத மகத்தான ஒரு அறிவுத் தொகை இப் பனை ஓலை ஏடுகளில் உட்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பௌத்த சமயம், வரலாறு, பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம், விலங்குகள் மருத்துவ விஞ்ஞானம், பழைமை தொழில்நுட்பம், சோதிட விஞ்ஞானம், தாருகை விஞ்ஞனம், பூத விஞ்ஞானம், மொழிகள் மற்றும் இலக்கியம் போன்ற விடயங்கள் போன்றே சமூக மற்றும் பொருளாதார நிலைகள் பற்றிய தகவல் பெரும்பாலும் இப் பனை ஓலை ஏடுகளில் உள்ளடங்கி இருக்கின்றது.

நிகழ் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பலதரப்பட்ட சுற்றாடல் காரணங்களாலும் மனித செயற்படுகளின் காரணமாகவும் இப் பெருமதி வாய்ந்த ஆவணங்கள் சழிவுற்றும் அபாயத்திறகு முகங்கொண்டுள்ளது. இத்துடன் தெடர்பான பாரம்பரிய தொழில்நுட்பம் கலாசார ரீதியிலான செயற்பாடுகள் மிக நெறுங்கிய எதிர்காலத்தில் இவை முழுமையாகவே அழிந்துப் போகலாம். பழங் காலத்தில் எழுதப்பட்டுள்ள பல மில்லியன் கணக்கான ஏடுகளில் இருந்து இன்று எஞ்சி இருப்பது சுமார் ஒரு மில்லியன் ஏடுகள் மத்திரமே. புராதனக் காலத்தில் இருந்து பாதுகாத்து வரப்பட்ட பனை ஓலை ஏடுகளின் அதிகமானவற்றை தற்போது அரும் பொருட்கள் என்ற பெருமதியில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுளள்தோடு அவைகள் அவர்களது சொத்துக்களாக மாற்றமடைந்துள்ளது. இதுப் போலவே ஈர கசிவு, கறையன் மற்றும் எலிகள் பேன்ற உயிரினங்களாலும் மனிதனின் கவனயீனத்தினால் இன்னுமொரு தொகை அழிந்துபோயுள்ளது. இந் நிலையின் கீழ் பனை ஓலை ஏடுகள் எழுதும் மற்றும் பாதுகாக்கும் பாரம்பரிய தொழில்நுட்பத்தை இக் காலத்து சமுதாயத்தினுள் பிரபலப்படுத்தல் கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது. அதனை மூலங்கள் அடிப்படையில் பூரணப்படுத்தல் தொடர்பாக மீண்டும் கருத்தில் கொண்டு பார்க்க தேவையாக உள்ளது.

இவ் அமைப்பினுள் பனை ஓலை ஏடுகள் எழுதலுடன் இணைந்திருக்கும் தொழில்நுட்பத்தை நிகழ்கால சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்தல், புராதன பனை ஓலை ஏடுகளை பாதுகாத்தல் மற்றும் நிகழ் காலத்து தேசிய அபிவிருத்தி செயற்பாட்டினுள் அதனை பயன்படுத்தல் எனும் விடயங்கள் உட்பட்டதாக ஒரு கருத்திட்டத்தை ஏற்பாடு செய்வது இக் காலத்திற்கு மிக பொருத்தமானதாக அமையும்
 
Last edited:

satyasriram

Commander's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
2,156
Likes
5,179
Location
Chennai
#5
very useful info dear

thanks for sharing this dear
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.